Friday, 27 July 2018

தோட்டக்கார நண்பா! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-24]


இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருக்கும் தோட்டம் இருந்தன. இருவரும் விவசாயிகள். அதில் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட இறை விசுவாசி. மற்றொருவர் இறை நிராகரிப்பில் உள்ளவர். அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ சரியான நம்பிக்கை அவரிடம்
இருக்கவில்லை. அல்லாஹ் அந்த இறை நிராகரிப்பாளருக்கு இரண்டு தோட்டங்களை வழங்கி இருந்தான். தோட்டத்தில் திராட்சை காய்த்து கொத்துக்
கொத்தாக காட்சித் தந்தது. தோட்டத்தைச் சூழ பேரீத்தம் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு நடுவே வேறு பயிர்களும் செழித்து வளர்ந்தன. அந்த இரு தோட்டங்களுக்கும் மத்தியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.
ரம்மியமான தோட்டம்
பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி. திராட்சை, ஈத்த மரம், வேறு பயிர்கள், ஆறு என அனைத்து வளங்களும் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தன. கூடவே அவனிடம் ஆணவமும் ஒட்டிக் கொண்டது. அவனது நண்பனைப் பார்த்தான். அவனிடம் இதுபோன்ற வளங்கள் இருக்கவில்லை. “உன்னைவிட நான்
பணபலமும் மக்கள் செல்வாக்கும் மிக்கவன்” என பெருமையுடன் பேசினான். அல்லாஹ்வின் வளங்களுக்கு நன்றி செலுத்தாமல் அவற்றை வைத்து அவன் ஆணவம் கொண்டான்.
இருவரும் அவனது தோட்டத்துக்குள் சென்றனர். தோட்டத்தின் செழிப்பைப் பார்த்து அவனுக்கு பெருமை தலைக்கடித்தது. “எனது இந்த தோட்டம் எப்போதும் அழிந்து போகாது என நான் நினைக்கின்றேன். உலகம் அழியும்… என்று சொல்கிறார்கள். அப்படி அழிந்து மறுமை வரும் என்றும் நான் நினைக்கவில்லை. அப்படியே வந்தாலும் இந்த உலகத்தில் இப்படியான வளங்களைத் தந்த அல்லாஹ் இதைவிட சிறந்ததை மறுமையில் தராமலா விடுவான்” என வாதிட்டான்.அவனது நண்பனுக்கு இவனது ஆணவம் பிடிக்கவில்லை. அதைவிட மறுமையை மறுக்கும் இவனது மனநிலை பிடிக்கவில்லை. எனவே, நண்பன்
வழிகெட்டு விடக்கூடாது என்பதற்காக அவனுக்குப் புத்திகூற ஆரம்பித்தான். நல்ல நண்பர்கள் எப்போதும் நண்பர்களை நல்வழிப்படுத்தத்தானே முற்படுவர்.
நண்பனின் அறிவுரை
“உன்னை மண்ணாலும், ஒருதுளி இந்திரியத்தாலும் படைத்த உன் இரட்சகனை மறுக்கிறாயா? சாதாரண ஒரு துளி நீரில் இருந்து உன்னைப் படைத்தவன் மீண்டும்
உன்னை உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று எண்μகிஷீ’யா? தப்பு நண்பா தப்பு! எனக்கு உன்னைப் போல் பண பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாவிட்டால் நான் அல்லாஹ்வையே என் இரட்சகனாக ஏற்றுள்ளேன். அவனுக்கு எதையும் நான் இணை வைக்க மாட்டேன்.
உனது தோட்டம் செழிப்பாக உள்ளது. இது உனது ஆற்றலால் உருவானது அல்ல… நீ உன் திறமையால் இதைப் பெற்றதாக எண்μகிஷீ’ய். நீ உன் தோட்டத்திற்கு தற்பெருமையோடு நுழையாமல் ‘மாஷாஅல்லாஹ்.. லாகுவ்வத இல்லாபில்லாஹ்’ என்று நுழைந்திருக்க வேண்டும். அல்லாஹ் நாடியதே நடக்கும்.
சக்தி அனைத்தும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்புவதுதான் உண்மையான இறை நம்பிக்கையாளனின் வார்த்தையாகும். நீ தற்பெருமை கொள்ளாதே! அல்லாஹ்வின் ஆற்றலைப் புரிந்துகொள். பணம் இருக்கிறது என பெருமை கொள்ளாதே! அல்லாஹ் நாடினால் உனது தோட்டத்தை
விட சிறந்ததை எனக்குத் தரலாம் என்று நாம் நம்புகின்றேன். நீ உன் நிலையில் தொடர்ந்திருந்தால் உனது தோட்டத்தை அல்லாஹ் அழித்துவிடவும் ஆற்றல் உள்ளவன்” என்று எடுத்துக் கூறினான்.
ஆணவக்காரனுக்கு அறிவுரை பயனளிக்காது! நல்ல நண்பனின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை. தனது தோட்டம் தனது திறமை என்ற எண்ணம்தான் அவனது மனதில் இருந்தது. தனது தோட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஆறு ஓடும்போது எப்படி தோட்டம் செழிப்பை இழக்கும் என அவன் எண்ணினான்.
ஆணவத்திற்கு தண்டனை
ஒருநாள் காலை ஆணவம் கொண்ட அந்த தோட்டக்காரன் தன் தோட்டத்திற்கு வந்தான். தோட்டத்தில் இருந்த மரங்கள் எல்லாம் தலைகீழாக பிறண்டிருந்தது.
செழிப்பாகக் காட்சியளித்த அவனது தோட்டத்தின் ஏனைய விவசாயங்கள் எல்லாம் அழிந்து போயிருந்தது. அல்லாஹ்வுடைய தண்டனை அவனுக்கு வந்திருந்தது. அப்போதுதான் தனது தவறை உணர்ந்த அவன் தன் இறைவனுக்கு தான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே என்று கரங்களைப் பிசைந்து கொண்டான். அவனுக்கு அந்த அழிவில் இருந்து உதவி செய்ய யாரும் இருக்கவில்லை. தான் செய்த தவறு, தன்னுடைய ஆணவம், தன்னுடைய தவறான சிந்தனைப் போக்கிற்கு இந்த உலகிலேயே தனக்கு தண்டனைக் கிடைத்துவிட்டது என்பதை அவன் உணர்ந்தான்.
நல்ல நண்பனின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை. இறைவன் தந்த அருளுக்கு அவன் நன்றி செலுத்தவும் இல்லை. அல்லாஹ் வழங்கிய அருளை தனது ஆற்றலாலும் திறமையாலும் பெற்றது என்று தப்பாக எண்ணினான், தலைக்கணம் கொண்டான். அதுவே அவனது அழிவுக்கு இழிவுக்கும் வழியாக அமைந்தது.
எனவே அல்லாஹ் நமக்கு எந்தத் திறமையைத் தந்திருந்தாலும் அதை வைத்து நாம் ஆணவம் கொள்ளக் கூடாது. இது அல்லாஹ் தந்தது என்ற பணிவு இருக்க வேண்டும். மனிதனின் உலக வளர்ச்சியிலே எதில் வளர்ச்சியைக் கண்டாலும் அவனுக்கு பணிவு ஏற்பட வேண்டும். இந்த இறை நிராகரிப்பாளன் தன் தோட்டத்தின் வருமானத்தை எண்ணி ஆணவம் கொண்டான். வருமானம் அல்ல, அந்த தோட்டத்திற்காக அவன் செய்த முதலீடு, உழைப்பு அனைத்தும் அழிந்து போனது. இது நமக்கொரு படிப்பினையாக அமைய வேண்டும்.
இச்சம்பவம் சூரா அல்கஃப் 18ம் அத்தியாத்தில் 32 தொடங்கி 42 வரையுள்ள வசனங்களில் நாம் காணலாம்.
وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا ﴿٣٢﴾
كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِم مِّنْهُ شَيْئًا ۚ وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا ﴿٣٣﴾ 
وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا ﴿٣٤﴾
وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَن تَبِيدَ هَـٰذِهِ أَبَدًا ﴿٣٥﴾
وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنقَلَبًا ﴿٣٦﴾ 
قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا ﴿٣٧﴾ 
لَّـٰكِنَّا هُوَ اللَّـهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا ﴿٣٨﴾ 
وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّـهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّـهِ ۚ إِن تَرَنِ أَنَا أَقَلَّ مِنكَ مَالًا وَوَلَدًا ﴿٣٩﴾
فَعَسَىٰ رَبِّي أَن يُؤْتِيَنِ خَيْرًا مِّن جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِّنَ السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا ﴿٤٠﴾
أَوْ يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا فَلَن تَسْتَطِيعَ لَهُ طَلَبًا ﴿٤١﴾
وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَا أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا ﴿٤٢﴾
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம். (32) 
அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை – எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம். (33) 
இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக “நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான். (34)
(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான். (35) 
(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான். (36) 
அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான். (37)
“ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ் – அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் – (38)
“மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது ‘மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ – அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை – என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் – (39) 
“உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும். (40)
“அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி – அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான். (41)
அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான். (42) மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை

Sunday, 22 July 2018

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்



மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி


PART - 1

ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும் . இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான்.
“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி : 1773
“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1521
“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1520
இத்தகைய நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய , பாவங்களுக்கு பரிகாரமான , பெண்களின் ஜிஹாத் என்று வரணிக்கபப்ட்ட ஹஜ்ஜின் நன்மைகளை அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளினால் ஹாஜிகள் இழந்து விடுகிறார்கள்.
இதனை சிறந்த உதாரணத்துடன் விளங்குவதாக இருந்தால் ஒரு மனிதன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து ஒரு வீட்டை கட்டுகின்றான் அதிலே நல்ல வண்ணங்களை பூசுகின்றான், அழகான மின் விளக்குகளை பொருத்துகின்றான் , உயர் ரக தண்ணீர் குழாய்களை அமைக்கின்றான் . இவற்றில் எதுவுமே அவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையெனில் அவன் எவ்வளவு கைசேதம் அடைவானோ அதைவிட மிகப்பெரும் கைசேதம் உடல் உழைப்புடன் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து மிகப்பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஹஜ்ஜுக்கு சென்று அதன் நன்மையை முழுமையாக அடையாத ஹாஜி.
எனவே இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹாஜிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதின் மூலம் தவறுகளில் விழாமல் அவர்களை தடுப்பதோடு அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள்
1. அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்றுவதுடன்
அல்லாஹ்வுடைய தூதர் காண்பித்து தந்த அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்
சிலர் பகட்டை வெளிப்படுத்தும் நோக்கில் ஊராரை அழைத்து விருந்துபசாரம் செய்வதும் , மேளதாளங்களோடு , தோரணங்களை தொங்க விட்டு மாலை அணிந்து ஊர்வலம் செல்வதும் ஊர் முழுக்க போஸ்டர்கள் அடிப்பது கட்டவுட்கள் வைப்பதும் இது போன்ற மார்க்கம் காண்பித்து தராத சில செயல்பாடுகளில் ஹஜ்ஜுக்கு செல்லும் முன்பும் , சென்று திரும்பும் போதும் இவ்வாறு செய்கின்றனர் இது போன்ற செயல்களினால் உளத்தூய்மை (இக்லாஸ்) அடிபட்டு முகஸ்துதி மேலோங்கி ஹஜ்ஜின் மூலம் அடையும் நன்மைகளை இழந்துவிடுகிறார் .
2.மற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லையெனில் அல்லது அதிலே குறை ஏற்பட்டிருப்பின் அவர்களிடம் அதற்காக வருத்தம் தெரிவித்து விட்டு ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் . குறிப்பாக (பெற்றோர்கள் , கணவன் மனைவி , இரத்த பந்த உறவினர்கள், நண்பர்கள் )
3. ஹஜ் என்ற இந்த இபாதத்தை நிறவேற்ற நாடுபவர்கள் அது குறித்த விஷயங்களை குர் ஆன் சுன்னா அடிப்படையில் முறையாக கற்றுத்தேர்ந்த ஆசிரியர் மூலம் பயிலவேண்டும்
“உங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறையை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்” . அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி யல்லாஹு அன்ஹு) , நூல் : முஸ்லிம் 1297
4….எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது … 2:197
5.பொருளாதாரம் மிகத்தூய்மையானதாக இருக்க வேண்டும் . அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). “நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், 1686 )
6. ஹஜ், உம்ராவிற்கு செல்பவர்களிடம் து ஆ செய்யுமாறு வேண்டுதல் : நான் நபி (ஸல் ) அவர்களிடம் உம்ரா செல்வதற்காக அனுமதி வேண்டினேன் எனக்கு அனுமதி அளித்தார்கள் ” எனது சகோதரனே உனது து ஆவில் எங்களை மறந்து விடாதே என்று கூறினார்கள் உமர் (ரலி ) கூறினார்கள் உலகம் முழுவதை விட இந்த வார்த்தை எனக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அறிவிப்பவர் : உமர் (ரலி ), நூல் : அபூதாவூத் 1280
7. பெண்கள் தனியாக ஹஜ்ஜுக்கு செல்லக் கூடாது : “எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி 3006 , முஸ்லிம் 1341)
பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று ஏராளமான நபி மொழிகள் காணக்கிடக்கின்றன . என்றாலும் ஹஜ் , உம்ரா நடத்தும் சில நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை கணக்கில் கொண்டு தவறான முறையில் இவர் அவருக்கு மஹ்ரம் அவர் இவருக்கு மஹ்ரம் என்று காண்பித்து தங்களோடு அழைத்துச் செல்கின்றனர். இதுவும் தடுக்கப்பட்ட ஒன்றே…

PART - 2



இஹ்ராமுடன் தொடர்புடைய சில தவறுகள்:

1. இஹ்ராம் என்பது ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக குறிப்பிட்ட எல்லைகளில் நிய்யத் வைத்து நுழைவதை குறிக்கும் ஆனால் சிலர் வெண்மையான ஆடையை குறிப்பதாக கருதுகின்றனர் இதுவும் தவறு .
2 . எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் நிய்யத் மிக முக்கியம் நபி (ஸல்) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்து அமைகிறது ….. புகாரி 6439 எனவே ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் செல்வபவர் நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்நிய்யத் என்பது வாயால் மொழிவதல்ல உள்ளத்தால் எண்ணுவது .
3.நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பகுதியினருக்கும் இஹ்ராமிற்குரிய எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளார்கள் .
(ஹஜ்- உம்ராவுக்காக புறப்பட்டு) மதீனா வழியாக் மக்காவுக்கு வரும் மக்களுக்கு துல்-ஹூலைஃபாவும் ஸிரியா வழியாக வரும் மக்களுக்கு அல்-ஜூஹ்ஃபாவும் நஜ்தின் வழி வருபவர்களுக்கு (தாயிஃப்) கா;னுல் மனாஸிலும் யமனிலிருந்த வருபவர்களுக்கு யலம்லம் ஆகியவை இஹ்ராம் மேற்கொள்ள வேண்டிய மீக்காத் எல்லைகளாகும்.
இவ்வெல்லைகளுக்குள்ளே வசிப்பவர்களுக்கும் மக்கா வாசிகளுக்கும் அவர்களின் இல்லங்களே எல்லைகளாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினாரிகள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1454. முஸ்லிம் 1181
ஆணுக்கு ஒப்பாக பாவனை செய்வது பொதுவாகவே தடுக்கப்பட்டது. .
பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5885 )
அறிவிப்பவர் : இப்னு உமர்( ரலி ), நூல் :அபூதாவூத் 1893 (பெண்கள் எந்த இடங்களிலும் ஓடக் கூடாது.)


இஹ்ராமிற்குரிய எல்லைகளில் இஹ்ராமில் பிரவேசிக்காமல் ஹஜ்ஜுக்கு முறையாக அனுமதி பெறாமல் அரசாங்கத்தை ஏமாற்றி விட்டு செல்வது. சில ஹாஜிகளிடத்தில் இத்தவறு ஏற்படுகிறது . இத்தவறை செய்பவர்கள் மீண்டும் தங்களுக்குரிய எல்லைகளுக்கு சென்று இஹ்ராமில் பிரவேசிக்க வேண்டும் அல்லது ஒரு ஆடு மக்காவில் பித்யாவாக கொடுக்க வேண்டும். அதன் இறைச்சி மக்காவில் உள்ள ஏழைகளுக்கு பங்கிட வேண்டும். அதிலிருந்து இவர் எதையும் உண்ணகூடாது.
5. ஃபர்ளான தொழுகையாக இருந்தாலே தவிர இஹ்ராமில் பிரவேசித்தவர் இரண்டு ரக்க அத் தொழுவது கடமை என கருதுவது தவறாகும். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
6.ஆண்களுக்கு ஒப்பாக பெண்கள் வெள்ளை நிற ஆடை அணிவது இது தடுக்கப்பட்ட ஒன்றாகும் . ஆண்களைப்போன்று பெண்களுக்கு இஹ்ராமிற்கென்று பிரத்தேகமாக எந்த ஆடையும் இல்லை . அதே வேளையில் பெண்கள் எப்போதும் தங்களின் ஆடைகளில் இஸ்லாமிய வழிமுறைகளை பேண வேண்டும். முழு உடலையும் மறைக்கக் கூடிய இறுக்கமில்லாத, வேலைப்பாடுகளில்லாத, ஆடைகளாக இருக்க வேண்டும்.
7. ஒரு பெண் இஹ்ராமுக்குரிய எல்லையை வந்தடைந்து அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவளும் குளித்து சுத்தம் செய்து உம்ராவிற்குரிய அல்லது ஹஜ்ஜுக்குரிய நிய்யத்தை வைத்துக் கொள்ள வேண்டும் . சிலர் மாதவிடாய் பெண்கள் இஹ்ராமில் பிரவேசிக்க முடியாது என கருதுகின்றனர். இதுவும் தவறாகும். இப்பெண்கள் தவாஃபைத் தவிர அனைத்து வழிபாடுகளிலும் ஈடுபடலாம்.
8. துல் ஹஜ் 8 ஆவது நாள் மஸ்ஜிதில் ஹராமிலிருந்து இஹ்ராமில் பிரவேசிக்க வேண்டும் என சில ஹாஜிகள் கருதுகின்றனர். இதுவும் தவறாகும். ஹாஜிகள் மக்காவில் எந்த பகுதியில் இருக்கின்றார்களோ அந்தப் பகுதியிலிருந்து இஹ்ராமில் பிரவேசிக்கலாம் . ஸஹாபாக்களில் சிலர் அப்தஹ் என்ற பகுதியிலிருந்து இஹ்ராமில் பிரவேசித்துள்ளார்கள் .
9. இஹ்ராமில் இழ்திபாவின் நிலை : இஹ்ராமில் இருப்பவர் வலது தோள் புஜத்தை திறந்த நிலையில் இருப்பது இழ்திபா ஆகும் . இது தவாஃபுல் குதூமிற்கு (ஹஜ்ஜின் ஆரம்ப தவாஃப்மட்டுமே. ஆனால் ஹாஜிகளின் அதிகமானவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகள் முடியும் வரை வலது தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே இருக்கின்றனர் இதுவும் தவறாகும். சிலர் தொழுகையின் போதும் தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே தொழுகின்றனர் இதுவும் மிகப் பெரும் தவறாகவும்.
10.சிலர் இஹ்ராமின் ஆடைகளை மாற்றக் கூடாது அல்லது சுத்தம் செய்யக் கூடாது என கருதுகின்றனர். இதுவும் சில ஹாஜிகளிடத்தில் ஏற்படும் தவறாகும். ஹஜ் , உம்ரா செய்பவர் இஹ்ராமின் ஆடைகளை மாற்ற வேண்டும் அல்லது கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கருதினால் தாராளமாக செய்யலாம்.
11. தவாஃபின் ஏழு சுற்றுகளிலும் வேகமாக நடப்பது அல்லது ஓடுவது இதுவும் ஹாஜிகளிடம் ஏற்படும் தவறாகும் . நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று சுற்றுகளில்தான் எட்டுக்களை விரைவு படுத்தி உள்ளார்கள் மீதமுள்ள நான்கு சுற்றுகளிலும் நடந்தே சென்றுள்ளார்கள்.
12. இஹ்ராமில் பிரவேசித்த பிறகு அதிகம் தல்பியா சொல்லாமல் அல்டசியாமாக இருப்பது. இதுவும் தவறாகும் (யவ்முன் நஹ்ர்) அதாவது துல் ஹஜ் பத்தாவது நாள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிகின்றவரை அதிகம் தல்பியா சொல்ல வேண்டும்.
13. இஹ்ராமுக்குரிய ஆடைகளை அணிந்த பிறகு வேறு எதுவும் அணியக் கூடாது என்றும் சிலர் கருதுகின்றனர் இதுவும் தவறாகும். செருப்பு , மோதிரம் , கைக்கடிகாரம் , பெல்ட் , கண்ணாடி …. போன்றவைகளை அனைத்து கொள்ளலாம் தைக்கப்பட்ட ஆடைகளை அணியாக கூடாது.
14. இஹ்ராமில் பிரவேசித்த பெண்கள் நிகாப் , (முகத்திரை ) மற்றும் கை உறைகளை அணியாக கூடாது இந்தத் தவறு அதிகமான பெண்களிடத்தில் காணப்படுகிறது சுன்னா அதனை அணியாமல் இருப்பதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஹ்ராமிலுள்ள பெண்கள் நிகாப் , (முகத்திரை ) மற்றும் கை உறைகளை அணியாக கூடாது . அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 1825
15. தல்பியாவில் பெண்கள் சப்தத்தை உயர்த்துவது இதுவும் ஹாஜிகளிடத்தில் ஏற்படும் தவறாகும். ஒரு பெண் தன்னளவில் கேட்கும்படி தல்பியா சொல்லிக்கொள்வது விரும்பத்தக்க விஷயமாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்