Friday, 15 November 2019

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-10] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 15.11.2019 (வெள்ளி)
ஸினாயிய்யா, ஜித்தா
Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்

Friday, 1 November 2019

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-09] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 01.11.2019 (வெள்ளி)
ஸினாயிய்யா, ஜித்தா
Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்

Friday, 25 October 2019

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-08] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 25.10.2019 (வெள்ளி)
ஸினாயிய்யா, ஜித்தா
Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்

Friday, 18 October 2019

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-07] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 18.10.2019 (வெள்ளி)
ஸினாயிய்யா, ஜித்தா
Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்

Tuesday, 8 October 2019

‘அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா’ – சுருக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) கொள்கை விளக்க நூல் [eBook]



எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக!
ஷைய்க் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்அதீக் அவர்கள் குழந்தைகளுக்கு எழுதிய சிறிய புத்தகம் தான் “அப்வாபுன் முக்தஸரதுன் ஃபில் அகீதா”
இப்புத்தகத்தைப் படித்த உடனே இதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும் சில காரணங்களால் தாமதமாகியது.
இப்புத்தகத்தை உடனே வெளியிட ஆர்வப்படுத்தி, சரி பார்த்து, ஆலோசனைகளையும் சில சகோதரர்கள் வழங்கினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
இதனை அழகிய முறையில் வடிவமைத்துத் தந்த சகோதரருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்கள் பயன்பெறும் வகையில் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தைப் படிக்கும் உலமாக்கள் மற்றும் சகோதரர்கள் ஏதேனும் பிழைகளைப் பார்த்தால், இஸ்லாம்கல்வி.காம் இணையதளம் மூலமாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
இப்படிக்கு உங்கள் சகோதரன்,
எஸ். யூசுப் பைஜி, கடையநல்லூர்
(best view on Smart Phone’s, Tablets and iPad’s)
இதனை தேவையுள்ளவர்களுக்கு Forward செய்யவும்

Friday, 4 October 2019

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-06] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 04.10.2019 (வெள்ளி)
ஸினாயிய்யா, ஜித்தா


Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்

Sunday, 29 September 2019

குழந்தைகளுக்கான தர்பிய்யா (கேள்வி பதில்)

கேள்வி : அல்லாஹ்விடத்தில் செயல்கள் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் என்ன?
பதில் : அல்லாஹ்விடத்தில் செயல்கள் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன.
இக்லாஸ் செயல்களில் (அமல்) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
இக்லாஸ் ஆதாரம் என்ன?
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.
நூல் : புகாரி ஹதீஸ் நம்பர் : 1
கேள்வி : உண்மை சொல்வதின் இறுதி நிலை என்ன?
பதில் : சுவர்க்கமாகும்.
கேள்வி : பொய்யின் இறுதி நிலை என்ன?
பதில் : நரகமாகும்.
விளக்கம் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மை
நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்லி எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6094
கேள்வி : மக்களில் நன்மை செய்வதற்கும் மற்றும் நல்லுறவு கொள்வதற்கு மிகத் தகுதியானவர்கள் யார்?
பதில் :  தாய் பின்பு தந்தை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்றார். ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
நூல் : முஸ்லி­ம் 5871
கேள்வி : ஒரு முஸ்லிம்­ மற்றொரு முஸ்­லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன,
பதில் : ஒரு முஸ்லிம்­ மற்றொரு முஸ்­லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.
ஸலாத்திற்கு பதில் சொல்லுதல்.
நோயுற்றால் சந்திக்க செல்வது.
மரணித்தால் ஜனாஸாவை பின்தொடர்தல்.
விருந்துக்கு அழைத்தால் பதிலளிப்பது.
தும்பி அல்ஹம்து­லில்லாஹ் சொன்னால் யர்ஹகுமுல்லாஹ் என்று பதிலுரைப்பது.
ஆதாரம்:  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்குப் பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்”.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லி­ம் 1240
கேள்வி : முனாஃபிக்குடைய அடையாளம் என்ன?
பதில் : முனாஃபிக்குடைய அடையாளம் மூன்றாகும்.
பேசினால் பொய் பேசுவான்.
வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான்.
நம்பினால் மோசடி செய்வான்.
ஆதாரம்:   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 33
கேள்வி : மிகப் பெரும் பாவங்கள் என்ன?
பெரும்பாவங்கள் மூன்று.
அல்லாஹ்விற்கு இணைவைத்தல்
தாய் தந்தையரை நோவினை செய்தல்.
பொய் சாட்சியம் சொல்லுதல்.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ”பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ”ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்துகொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, ”அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான்” என்று கூறினார்கள். ‘நிறுத்திக்கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேயிருந்தார்கள்.
நூல் : புகாரி 2654.
கேள்வி :  புறம் என்றால் என்ன?
உன்னுடைய சகோதரன் வெறுக்கின்றவற்றைக் கூறுதல்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, ”நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள்.
கேள்வி : கோள் என்றால் என்ன? அதற்கான தண்டனை என்ன?
ஒருவருடைய சொல்லை மற்றவரிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்வதாகும். இதன் தண்டனை நரகமாகும்.
அபூ வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்கள்) பேசிக்கொள்வதை (ஆட்சியாளர் வரைக் கொண்டுபோய்) கோள் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர் களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், ”கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். நூல் : முஸ்லிம் 168.
கேள்வி : அண்டை வீட்ரை நோவினை செய்பவனை நபி ஸல் அவர்கள் எவ்வாறு சொல்­லியுள்ளார்கள்?
ஈமான் பூரணமாக இல்லாதவன் என்று சொல்­லியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
நூல் : முஸ்லி­ம் 73
கேள்வி : பெருமையடிப்பவனின் குணம் என்ன, அவனுக்குரிய தண்டனை என்ன?
சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவன் மக்களை இழிவாகக் கருதுபவன். அவனுடைய தண்டனை நரகமாகும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ”யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ”தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லி­ம் 131
கேள்வி : நபியவர்கள் நல்ல நண்பர்களுக்கும் கெட்ட நண்பர்களுக்கும் எதை உதாரணமாகக் கூறினார்கள்?
கஸ்தூரியைச் சுமப்பவன்.
உலை ஊதுபவன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
நூல்: புகாரி 5534.
கேள்வி : முஸ்­லிம்களின் தேவைகளை நிறைவேற்றுவதைப்பற்றியும் கல்வியைப்பற்றியும் குர்ஆன் ஓதுவதற்கு ஓன்று சேர்வதைப்பற்றி வந்துள்ள ஒரு ஹதிஸை கூறு?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூறுகிறான்.
கேள்வி : விருந்தாளிகளை கண்ணியப்டுவதைப்பற்றி வந்துள்ள செய்தியையும் சொந்தங்களைச் சேர்ந்து வாழ்வதைப் பற்றி வந்துள்ள ஒரு செய்தியையும் கூறு?
பதில் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 6018
கேள்வி : மோசடியைப்பற்றி வந்துள்ள செய்தியை கூறு?
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ”உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ”ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, ”மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்­லிம் 164.
நூல் பெயர் : கிதாபு ­ தர்பிய்பிய்யத்தி ­ திப்­ல் முஸ்லி­மி (அரபு).
வெளியீடு : இப்னுகுஸைமா கல்வி பிரிவு.
மொழியாக்கம். : எஸ். யூசுப் பைஜி.

Saturday, 28 September 2019

குழந்தைகளுக்கான தொழுகை முறை (கேள்வி பதில்)


கேள்வி : இஸ்லாத்தில் தொழுகையின் நிலை என்ன?
பதில் : தொழுகை இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாவதாகும்.
கேள்வி : கியாம நாளில் ஒரு அடியான் எதைப் பற்றி முத­ல் விசாரிக்கப்படுவான்?
பதில் : தொழுகையாகும்.
கேள்வி : தொழுகையின் விட்டவனின் சட்டம் என்ன?
பதில் : காபிர்.
கேள்வி : இதற்கான ஆதாரம் என்ன?
பதில் : (அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைப்பு, இறைமறுப்பு இவற்றிக்கிடையில் ( உள்ள வித்தியாசமாக) தொழுகைவிடுவது உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர­), நூல்கள் : முஸ்­ம் (134),திர்மிதீ (2543), நஸயீ (460), அபூதாவூத் (4058), இப்னுமாஜா (1068), அஹ்மத் (14451), தாரமீ (1205)
நமக்கும் அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். யார் அதை விட்டுவிடுவாரோ அவர் காபிராகிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ர­), நூல் : நஸயீ (459), திர்மிதீ (2545),இப்னுமாஜா (1069),அஹ்மத் (21859)
கேள்வி : நபி ஸல் அவர்கள் மரணிக்கும் தருவாயில் செய்த உபதேசம் என்ன?
பதில் : தொழுகையைப் பற்றியும் அடிமைகளைப் பற்றியும் ஆகும்.
கேள்வி : செயல்களில் சிறந்தது எது?
பதில் : தொழுகையாகும்.
கேள்வி : தொழுகையை அதன் நேரத்தை விட்டு தாமதமாக தொழுபவனின் நிலை என்ன?
பதில் : கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவான்.
கேள்வி : இதற்கான ஆதாரம் என்ன?
பதில் : தொழுகையில் கவனமற்றிருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடு உண்டாகட்டும். அல் குர்ஆன்.
கேள்வி : இந்த வசனத்தில் கூறப்பட்ட ஸாஹீன் என்பதின் அர்த்தம் என்ன?
பதில் : தொழுகையை அதன் நேரத்தை விட்டு தாமதமாக்குதல் என்று பொருளாகும்.
கேள்வி : முனாஃபிக்களுக்கு சுமையாக இருக்கின்ற தொழுகைகள் ஏது?
பதில் : : சுப்ஹு மற்றும் இஷாவாகும்.
கேள்வி : நபி ஸல் அவர்கள் சுப்ஹு மற்றும் இஷா தொழுகையின் சிறப்பை பற்றி என்ன கூறினார்கள்.?
பதில் : சுப்ஹு மற்றும் இஷா தொழுகையின் சிறப்புகளை அறிந்திருப்பீர்கள் என்றால் தவழ்ந்து கொண்டாவது வந்துவிடுவீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
கேள்வி : ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதின் சட்டம் என்ன?
பதில் : ஜமாத்தோடு சேர்ந்து தொழுவது வாஜிபாகும்.
கேள்வி : ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதின் சிறப்பு என்ன?
பதில் : ஒருவர் தன்னுடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு சிறப்பானதாகும்.
கேள்வி : இஷா தொழுகையை ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதால் என்ன சிறப்பு?
பதில் : யார் இஷா தொழுகையை ஜமாத்தோடு சேர்ந்து தொழுகிறாரோ அவர் இரவில் பாதி நின்று வணங்கியவரைப் போன்றவர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
கேள்வி : சுப்ஹு தொழுகையை ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதால் சிறப்பு என்ன?
பதில் : யார் சுப்ஹு தொழுயை ஜமாத்தோடு சேர்ந்து தொழுவாரோ அவர் இரவு முழுவதும் நின்று வணக்கம் செய்தவரைப் போன்றவர்,
கேள்வி : ஜமாத்தோடு சேர்ந்து தொழாதவர்களை நபி ஸல் அவர்கள் என்ன செய்ய நாடினார்கள்.
பதில் : அவர்களுடைய வீடுகளை நெருப்புகளை கொண்டு எரிக்க நாடினார்கள்.
கேள்வி : தொழுகையை பேணி வந்தால் ஏற்படும் நன்மை என்ன?
பதில் : தொழுகையை பேணிவந்தால் கியாம நாளில் அவருக்கு ஆதாரமாகவும் ஒளியாகவும் ஆகும்.
கேள்வி : தொழுகையை பேணாதவரின் நிலை என்ன?
பதில் :கியாம நாளில் காருன், பிர்அவ்ன், உபை பின் கலஃப் போன்றவர்களோடு நரகத்தில் எழுப்பப்படுவான்.
கேள்வி : தொழுகையை பேணுவதின் சிறப்புகளில் சிலதை கூறு?
பதில் : சுவர்க்கம்.
மானக்கேடான அருவருப்பான செயல்களை விட்டும் தடுக்கும்.
பாவங்களை அழிக்கும்
ஈமானை அதிகரிக்கும்
செல்வத்தை அதிகப்படுத்தும்
காரியங்கள் லேசாகும்.
கேள்வி : தொழுகையை விடுவதின் தீங்கு என்ன?
பதில் : நரகம்.
கியாம நாளில் முகம் கருப்படைதல்.
காரியங்களை சிரமாகுதல்
உள்ளம் நெருக்கடியாகுதல்.
கேள்வி : தொழுகை எங்கே கடமையாக்கப்பட்டது? எப்போது?
பதில் : தொழுகை மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்டது.
கேள்வி : ஒரு நாளில் எத்தனை வக்து தொழுகை கடமையாகும்.
பதில் : ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகை கடமையாகும்.
கேள்வி : சுப்ஹுக்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : இரண்டு ரக்அத்கள்.
கேள்வி : லுஹருக்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : நான்கு ரக்அத்கள்.
கேள்வி : அஸருக்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : நான்கு ரக்அத்கள்.
கேள்வி : மஃரிபிற்கு எத்தனை ரக்அத்கள்.
பதில் : மூன்று ரக்அத்கள்.
கேள்வி : இஷாவிற்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : நான்கு ரக்அத்கள்.
கேள்வி : முஸ்­லிம்கள் தங்களின் தொழுகையில் எதை முன்னோக்குகின்றார்கள்?
பதில் : முஸ்­லிம்கள் தங்களின் தொழுகைகளில் சவூதி அரேபியா, மக்காவில் உள்ள ஹரமை முன்னோக்குகின்றார்கள்.
இந்த கேள்வி பதில்கள் கிதாபுஸ்ஸலாத்தி ­ திப்­ல் முஸ்லிமி (அரபு) என்ற புத்தகத்தி­ருந்து எடுக்கப்பட்டவையாகும்.
வெளியீடு : இப்னுகுஸைமா கல்வி பிரிவு.
மொழியாக்கம். : எஸ். யூசுப் பைஜி.

Friday, 27 September 2019

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-05] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 27.09.2019 (வெள்ளி)
ஸினாயிய்யா, ஜித்தா


Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்

Friday, 23 August 2019

நேர்ச்சை

மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.
நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது
அல்லாஹ் கூறுகிறான்
அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். 76:7
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள் 22:29
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்)
பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நூல்:ஸஹீஹுல் புஹாரி 6695
மொத்தத்தில் நேர்ச்சை செய்வது ஆகுமானது அதனை நிறைவேற்றவது அவசியம் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் அதில் யாரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.
நேர்ச்சை எவ்வாறு செய்வது
நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் ஏதுமில்லை ஒருவர் நான் அல்லாஹுக்காக நோன்பை நோற்க நேர்ச்சை செய்துகொண்டேன்.அல்லது இன்ன விஷயத்தைச் செய்வதற்கு நான் நேர்ச்சை செய்துகொண்டேன் என்று கூறுவதாகும் .
இமாம் அல் ஜஸீரீ கூறினார்கள் நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் எதுவுமில்லை நேர்ச்சையை அவசியமாக்கிக்கொள்ளக்கூடிய எந்த வாசகத்தையும் பயன்படுத்தலாம் அதில் நேர்ச்சை செய்தேன் என்று குறிப்பிடாவிட்டாலும் சரியே. நேர்ச்சையின் வாசகத்தை மொழியாமல் நிய்யத் கொண்டால் மட்டும் போதுமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் உறுதியான கருத்து வாசகத்தை மொழியவேண்டும் நிய்யத் மட்டும் போதுமானதல்ல என்பதாகும்.அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/131
நேர்ச்சையின் நிபந்தனைகள்
நேர்ச்சையின் நிபந்தனைகள் இரண்டுவகையாகும் ஒன்று நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடையது மற்றொன்று நேர்ச்சை செய்யப்படுபவற்றுடன் தொடர்புடையது.
நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடைய நிபந்தனைகள்
  1. இஸ்லாம் காஃபிர் நேர்ச்சையை நிறைவேற்றினால் அது சரியாகாது
  2. விரும்பி தேர்வு செய்வது நிர்பந்தத்தினால் செய்தால் அது சரியாகாது
  3. நேர்ச்சையை செயல் படுத்த ஆற்றல் இருக்கவேண்டும் சிறுவரோ,பைத்தியமோ நேர்ச்சை செய்தால் அது சரியாகாது
  4. கடமை சுமத்தப்பட்டவராக இருக்கவேண்டும் கடமை சுமத்தப்படாத சிறுவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படாது
  5. நேர்ச்சையை மொழியவேண்டும் சமிஞ்னை போதுமானதல்ல ஊமையாக இருந்தாலேத் தவிற அவரது சமிஞ்னையும் விளங்குமாறு இருக்கவேண்டும். அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/130
நேர்ச்சை செய்யப்படுகின்றவற்றின் நிபந்தனைகள்
1, நேர்ச்சையின் மூலம் கடமையானதாக அல்லாமல் சுயமாகவே கடமையானதாக இல்லாத அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடிச்செய்யக்கூடிய அமலாகவும் அது இருக்கவேண்டும்
2, நேர்ச்சையாக செய்யப்படும் செயல் இபாதத் ஆக இருக்கவேண்டும் உளூ, குளிப்பு, குர்ஆனை தொடுவது,அதான் சொல்வது, ஜனாஸாவில் பங்கெடுப்பது, நோயாளியை நலம் விசாரிக்கச்செல்வது, போன்ற வஸீலாவாக இருக்கக்கூடிய காரியங்களை நேர்ச்சையாக செய்யமுடியாது. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/132
3, நேர்ச்சை செய்யப்படும் விஷயம் மார்க்கத்தில் உள்ள செயலாக இருக்கவேண்டும் மார்க்கத்திலேயே இல்லாத விஷயத்தை நேர்ச்சையாக நிறைவேற்ற முடியாது உதாரணமாக ஒருவர் நான் இரவு முழுக்க நோன்பு நோற்கிறேன் அல்லது ஒரு பெண் நான் என்னுடைய ஹைளு காலத்தில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கபோறேன் என்று கூறுவது தவறாகும் ஏனெனில் இரவு நேரம் நோன்பு நோற்பதற்குறிய நேரமல்ல,ஹைளிலிருந்தும் நிஃபாஸிலிருந்தும் தூய்மையாக இருக்கும் போது தான் நோற்க முடியும் தூய்மையாக இருக்கவேண்டுமென்பது இபாதத்திற்குரிய நிபந்தனையாகும் .அல் ஃபிக்ஹுல் இஸ்லாமி வ அதில்லதுஹு 4/111
நேர்ச்சை அல்லாஹுக்கு மாறு செய்யும் காரியமாக இருக்கக்கூடாது,நேர்ச்சை செய்வதற்கு முன்னரே ஃபர்ளான இபாதத்தாகவும் இருக்கக்கூடாது உதாரணமாக ஒருவர் ஹஜ்ஜு செய்ய நேர்ச்சை செய்தால் அது நேர்ச்சையாகாது.அதே போன்று சக்திக்கு மீறிய செயலாக,சாத்தியமற்ற செயலாகவோ இருக்கக் கூடாது.இவை அனைத்தையும் நேர்ச்சையை நிறைவேற்றும் போது கவனிக்கவேண்டும்
நேர்ச்சையின் வகைகள்
இமாம் இப்னு தகீகுல் ஈத் அவர்கள் கூறினார்கள் நேர்ச்சை மூன்று வகைப்படும்
ஒன்று: அருட்கொடை கிடைப்பதற்காக அல்லது தண்டனை பெறாமல் போனதற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய சூழலில் நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும்.
இரண்டு: ஒன்றை தடுப்பதற்கோ அல்லது செய்ய தூண்டுவதற்காகவோ நேர்ச்சை செய்வது உதாரணமாக ஒரு மனிதர் நான் வீட்டிற்குள் நூழைந்து விட்டால் அல்லாஹுக்காக இதை செய்கிறேன் என்று கூறி நேர்ச்சை செய்வதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் இமாம் ஷாஃபியி அவர்களுக்கு இரு கருத்துள்ளது ஒன்று அவர் நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் பரிகாரம் செய்வதற்கும் தேர்வு உரிமை வழங்கப்பட்டவர் ஆவார் என்பதாகும் இதற்கு கோபத்தின் போதும் விவாதத்தின் போதும் செய்யும் நேர்சை என்று சொல்லப்படும்.
மூன்றாவதாக: எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாமல் அல்லாஹ்விற்கு கட்டுப்படும் நோக்கில் அல்லாஹுக்காக நான் இதை செய்கிறேன் என்று நேர்ச்சை செய்வதாகும் அவ்வாறு செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகும் இதற்குத் தான் பொதுவான நேர்ச்சை என்று கூறுகிறோம். இஹ்காமுல் அஹ்காம் 2/265
பொதுவான நேர்ச்சையின் வகைகள்
  1. மூடலான நேர்ச்சை
  2. தர்க்கம், கோபம் ஆகிய வற்றின் போது செய்யும் நேர்ச்சை
  3. அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை
  4. வெறுக்கத்தக்க நேர்ச்சை
  5. பாவமான நேர்ச்சை
  6. நன்மையான நேர்ச்சை
  7. கடமையான நேர்ச்சை
  8. சாத்தியமில்லாத நேர்ச்சை
மேற்கூறிய விளக்கமும் அவற்றிற்கான சட்டமும்
1, மூடலான நேர்ச்சை எதை நேர்ச்சை செய்கிறோம் என்பதைக் குறிப்பிடாமல் அல்லாஹ்விற்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன் என்று கூறுவதாகும்
அவ்வாறு கூறிய நேர்ச்சையில் சத்தியத்திற்கான பரிகாரம் செய்ய வேண்டுமென்று அதிகமான உலமாக்கள் கூறியுள்ளார்கள் என்று இமாம் இப்னு குதாமா அவர்கள் கூறினார்கள். அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ
உஸ்பத் பின் ஆமிர் அவர்கள் அறிவித்தார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3379
இது பெரும்பான்மை ஸஹாபாக்களின் கருத்தாகும் அவர்களின் காலத்தில் இதில் கருத்துவேறுபாட்டை அறியவில்லை எனவே இது இஜ்மாவாகும். .அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ
இந்த நேர்ச்சையுடன் தொடர்புடைய நிபந்தனை அனுமதிக்கப்பட்டதாக, அல்லது பாவமாக இருந்தாலும் சரியே உதாரணமாக ஒருவர் நான் நோன்பு நோற்றால் அல்லது தொழுதால் அது அல்லாஹ்விர்காக என் மீது நேர்ச்சையாகிவிடும் என்று கூறினால் அதனை முறிப்பது அவர் மீது கடமையாகிவிடும் இன்னும் அதற்கு சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரமும் செய்யவேண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3392
மூடலான நேர்ச்சையில் ஒருவர் நோன்பு நோற்பதாக நிய்யத் வைத்தார் ஆனால் எத்தனை என்று நிய்யத் வைக்கவில்லை எனில் அவர் பரிகாரத்திற்கான நோன்பை மூன்று நாட்கள் நோற்க வேண்டும் .
அதே போன்று உணவளிப்பதாக நேர்ச்சை செய்து அதிலும் எண்ணிக்கையை குறிப்பிடாவிட்டால் அவர் பத்து ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் ஏனெனில் இதிலும் அவர் சத்தியத்திற்கான பரிகாரத்தையே கடைபிடிக்க வேண்டும்
2, கோபம் மற்றும் தர்க்கத்தின் போது செய்யும் நேர்ச்சையைப்பொருத்தவரை ஒருவர் நான் இவரிடம் பேசமாட்டேன் அப்படி பேசினால் நான் இதை செய்வேன் என்றோ அதே போன்று ஒருவரது வீட்டிற்கு நான் செல்லமாட்டேன், நான் சொல்வது போன்று நடக்காவிட்டால் நான் இதைச்செய்வேன் என்றெல்லாம் கூறுவதாகும் அவர் ஒருசெயலைச் செய்யாமலிருக்க இவ்வாறு நேர்ச்சை செய்கிறார் இப்படி நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/129
3, அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை என்பது உண்பது, குடிப்பது, பயணம் செய்வது போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்வதாகும் இதிலும் நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
நபி அவர்களிடம் ஒரு பெண் வந்து நான் உங்களுக்கு முன்பாக தஃப்ஃபு அடிப்பதாக நேர்ச்சை செய்தேன் என்று கூறினார் அப்போது நபி அவர்கள் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று கூறினார்கள். அம்ருபின் ஷுஐப் தனது தந்தை மற்றும் பாட்டனார் மூலமாக அறிவிக்கிறார் .நூல்: சுனன் அபீதாவூத் 3312
4, வெறுக்கத்தக்க நேர்ச்சை என்பது மார்க்கம் விரும்பாத ஒன்றை ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக ஒருவர் நான் பூண்டு,வெங்காயம்,போன்ற வற்றை உண்பேன் என்பதாக நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் சத்தியத்திற்கான பரிகாரம் செய்வது விரும்பத்தக்கதாகும் அதே வேளை அவர் தனது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டால் பரிகாரம் செய்யதேவையில்லை. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
5, பாவமான நேர்ச்சை என்பது ஒரு நான் மது அருந்துவேன்,கப்ரை தவாஃப் செய்வேன், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக அறுத்துப் பலியிடுவேன்,திருடுவேன், உறவைத் துண்டித்து வாழ்வேன் என்றெல்லாம் மார்க்கம் பாவமென்றும்,ஹராமாக்கப்பட்டதென்றும் கூறிய பாவமான காரியத்தை நேர்ச்சை செய்வதாகும் .
இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த கருத்தாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
நாம் எந்நிலையிலும் அல்லாஹுக்கு மாறு செய்யக்கூடாது அப்படி நேர்ச்சை செய்தவர் சத்தியத்திற்கான பரிகாரம் செய்யவேண்டும்.
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا نَذْرَ فِي مَعْصِيَةٍ، وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ»
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்விர்க்கு மாறு செய்வதில் நேர்ச்சை என்பதில்லை அதற்கான பரிகாரம் சத்தியத்திற்கான பரிகாரமாகும் ,அறிவிப்பாளர் ஆயிஷா அவர்கள் நூல்:சுனன் திர்மிதி 1524
6, நன்மையான நேர்ச்சை என்பது அல்லாவிற்குக் கட்டுப்படுவதாகும் நன்மை என்பதற்கு அரபியில் அல்பிர்ரு என்று கூறுவார்கள் அல்பிர்ரு என்பதற்கு இத்தாஅத் என்று தான் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது அதாவது கட்டுப்படுதல் இவ்வாறு தான் பின் வரும் வசனத்திற்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்த அறியமாட்டீர்களா.2:44
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!’ என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!’ என்று கூறினார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 1946
நன்மையான நேர்ச்சை மூன்று வகையாகும்
அ) ஒரு அருளை அடையவேண்டு மென்பதற்கு பகரமாகவோ அல்லது வேதனையை தடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு பகரமாகவோ நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக நோயாளியாக இருப்பவர் அல்லாஹ் எனக்கு நிவாரணத்தைத் தந்தால் நான் அவனுக்காக நோன்புவைப்பேன் என்று கூறுவதாகும் இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும் என்பதில் அறிஞர்களிடம் இஜ்மா உள்ளது.
ஆ) எவ்வித நிபந்தனையுமில்லாமல் அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய நேர்ச்சை நிறைவேற்றவேண்டும் என்று தான் பெரும்பான்மை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்
இ) கட்டுப்படுதலுக்குரிய நேர்ச்சை அது கடமை என்பதில் எவ்வித ஆதாரவுமில்லை உதாரணமாக நோயாளியைச் சந்திப்பது இதனை நிறைவேற்றுவது அவசியமாகும்
7, கடமையான நேர்ச்சை என்பது மார்க்கம் நம்மீது கடமையாக்கிய இபாதத்துகளை செய்ய ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு செய்வது கூடாது .
8, சாத்தியமில்லாத விஷயத்தை நேர்ச்சை செய்யக்கூடாது அவ்வாறு செய்திருந்தால் அதனை நிறைவேற்றத் தேவையில்லை .அல்முக்னி 13/381
நேர்ச்சையின் சட்டங்கள்
நேர்ச்சை செய்வது குறித்துப் பல வசனங்கள் உள்ளன நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களை குர்ஆன் பாராட்டவும் செய்கிறது மரியம் அவர்கள் நேர்ச்சை செய்தது பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது
ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்” என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார்.19:26
அல்லாஹ் கூறுகிறான்
நிச்சயமாக நல்லவர்கள் கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.
அது அல்லாஹ்வினுடைய அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.76:5-7
மறுமையின் அமளி துமளியைக்குறித்த அச்சமும் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் நல்லோர்களின் மறுமை வெற்றிக்கும் சுவனத்தில் நுழைந்ததற்கும் காரணமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
அதே வேளையில் பல்வேறு ஹதீஸ்ள் நேர்ச்சையை தடைசெய்தும் அது விரும்பத்தக்கதல்ல என்றும் தெரிவிக்கிறது
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் ” நேர்ச்சை (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்ச்சையின் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன்னார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 3368
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள்.  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்3369
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)’ என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி 6608
ஒருபுறம் நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களைப் புகழ்ந்தும் மறுபுறம் அதனைச் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடையும் விதிக்கிறது புகழுக்குரிய நேர்ச்சை என்பது கட்டுப்படுவதில் நிறைவேற்றுவதாகும் அதில் வேறு எதுவும் காரணமும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படியிருந்தால் அது அனுமதிக்கப்பட்ட நேர்ச்சையாகும்
அதுவல்லாத நேர்ச்சைகள் தடுக்கப்பட்டதும் விரும்பத்தகாததுமாகும்
நேர்ச்சைகள் அல்லாஹுக்கு கட்டுப்படும் விதத்தில் செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் அவ்வாறல்லாத நேர்ச்சைகளைச் செய்தவர்கள் அதற்குப் பகரமாக நேர்ச்சையைச் செய்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் ஒருவர் சத்தியத்தை முறித்தால் அதற்கு என்ன பரிகாரமோ அதைத்தான் இதற்கும் பரிகாரமாகும்
அல்லாஹ் கூறுகிறான்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான் 5:89
பரிகாரம் மூன்று விதமாக உள்ளது
1, பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது உடை அளிப்பது
2, ஒரு அடிமையை விடுதலைச்செய்வது
3, மூன்று நாட்கள் நோன்பு நோற்பது
மார்க்கம் கடமையாக்கிய விஷயங்களிலும் வழிகாட்டியவற்றிலும் மார்க்கத்தின் வரம்பைப்பேணி வாழ்வோம் அல்லாஹ்விடம் கூலியை பெறுவோமாக.
– பஷீர் பிர்தவ்ஸி