JAQH சென்னை மண்டலம் நடத்தும்...
"" சமூக நல்லிணக்க மாநாடு ""
இன்ஷா அல்லாஹ் 15-10-2023 (ஞாயிறு)
இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை செ-18.
• சமூக ஒழுக்கம்
• சமூக அறியாமை
• சமூக நல்லிணக்கம்
• சமூக நீதி
• கொள்கை வழிகாட்டல்
• இளைஞர் சீர்த்திருத்தம்
• பிறமத அன்பர்களுக்கான இஸ்லாமிய அறிமுகம்
• இன்னும் பல சிறப்பம்சங்களுடன்...
நல்லிணக்கம் என்பது எவ்வளவு உயர்வானது என்பதை இன்றைய சூழலில் மக்களிடம் கொண்டு செல்லவே இந்த மாநாடு எனவே இந்த மாநாடு வெற்றி பெற பிரார்த்திப்பதோடு இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்ள அன்பாய் அழைக்கிறது.
என்றும் சமூக பணியில்...
JAQH - Jamiyyathu Ahlil Quran val Hadees
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
--------------------------------
நல்லிணக்கமே நமது இலக்கு என்ற முழக்கத்துடன் இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் மாதம் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் சென்னை மண்டலம் சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை மேற்கூறிய தலைப்பின் கீழ் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
இன்றைக்கு நல்லிணக்கம் என்பது வெறும் ஏட்டில் இருக்கும் ஒன்றாக மாறி விடும் நிலைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நல்லிணக்கத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதை இஸ்லாம் எந்தளவிற்கு வலியுறுத்துகிறது என்பதை மக்களுக்கு கொண்டு செல்லவே இந்த மாநாடு.
சமூக நல்லிணக்கத்தை பேணுவது இஸ்லாத்தின் போதனைகளில் முக்கியமான ஒன்றாகவும் இறைவனின் அன்பை பெறும் காரியங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இணக்கத்தை பேணாதவர்களுடன் போரிடுங்கள் என்றும் இஸ்லாம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:9,10)
நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் "ஆம்! அறிவியுங்கள்" என்று கூறினார்கள். "(அது) மக்களுடைய பிரச்சனைகளை சீர் செய்வதாகும். மக்களுக்கிடையே குழப்பத்தை விளைவிப்பது (நன்மைகளை) அழித்து விடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தாஃ (ரலி) நூல்: திர்மிதீ-2509 நல்லிணக்கம்
ஏற்படுத்துவதற்காக ஒருவன் பொய் சொன்னால் அது பொய்யாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
அறிவிப்பவர்: உம்மு குல்தூம் (ரலி) நூல்: புகாரி-2692
மேற்கூறிய அனைத்து செய்திகளும் நல்லிணக்கம் என்பது எவ்வளவு உயர்வானது என்பதை வலியுறு த்துகின்றன. இதை இன்றைய சூழலில் மக்களிடம் கொண்டு செல்லவே இந்த மாநாடு எனவே இந்த மாநாடு வெற்றி பெற பிரார்த்திப்பதோடு இம்மாநாட்டில் கலந்து கொள்ள அன்பாய் அழைக்கிறது.
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - JAQH
86677 01391 | 97898 60990 | 99400 68192