Monday, 29 July 2013

ஃபித்ரா - பெருநாள் தர்மம்

“ஃபித்ரா” பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

“முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.”

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

இன்ஷா அல்லாஹ் இந்த வருட 2013 “ஃபித்ரா” பெருநாள் தர்மம்


ஒரு நபருக்கு ரூ 110 /- மட்டும்

உங்கள் பங்குகளை விரைந்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மஸ்ஜிதுத் தவ்ஹீத்
தாம்பரம்

9962 454230 / 9176 381603

Monday, 22 July 2013

Tambaram JAQH Baithulmal




தாம்பரத்தில் பைத்துல்மால் (வட்டியில்லா கடன்)

"அல்லாஹ் வியாபாரத்தை ஹலால் ஆக்கி 
வட்டியை ஹராம் ஆக்கியிருக்கின்றான்." 
(அல்குர்ஆன் 2:275)

இந்த சமுதாயத்திலிருந்து வட்டியை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நமது மர்கஸ்யில் இன்ஷா அல்லாஹ் பைத்துல்மால் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்........

கண்ணியமிகு ஜமாத்தார்களே !!! நமது தாம்பரம் பகுதியில் பைத்துல்மால் பணி சிறப்பாக நடை பெற தங்கள் துஆச் செய்வதுடன் தங்களது பொருளாதார உதவிகளை தரளாமாக அளித்து ஈருஉலக நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுகோள்கின்றோம்.

அல்லாஹ்வின் பதையில் உதவி செய்யும் நல்ல உள்ளம் படைத்த உங்களின் உதவிகளை அளிப்பதுடன் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் இந்த பைத்துல்மால் பணிக்கு உதவி செய்ய பரிந்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Our Bank Details as follow:
DD/Cheque in favour of "TAMBARAM JAQH BAITHULMAL"

Cash deposit / Net Transfer:
A/c Name: TAMBARAM JAQH BAITHULMALA/c
No: 0516053000004765
Bank: South Indian
Branch: Tambaram
IFSC code: SIBL0000516


For More detail:visit : www.tambarammasjid.jimdo.com


எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் 2:127-128)

வல்ல ரஹ்மான் நம் பாவங்களை மன்னித்து நம் அனைவரையும் "ஜன்னத்துல் பிர்தவ்ஸ்" என்ற உயர்ந்த சுவர்கத்தில் ஒன்று சேர்பானாக ஆமீன்….

வஅலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு !!!

இப்படிக்கு,
JAQH TAMBARAM
BAITHULMAL COMMITTEE
Contact : 9841 665584 / 9941 655656

Thursday, 11 July 2013

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்


“யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: திர்மிதி) 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.”
அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி 
ஒரு நாள் நோன்பு கஞ்சி 
செலவு ரூ 2000/-
உங்களுடைய  பங்களிப்புக்கு  தொடர்புகொள்ளுங்கள் 

மஸ்ஜிதுத் தவ்ஹீத் தாம்பரம்

6/22, 3rd cross street, Ranganathapuram, 

West Tambaram, Chennai - 45.

9841665584 / 9841609268

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுல்லாஹி வபரகாதுஹு !!!

ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹுதஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். 

அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டது தான் ரமளான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி(ஸல்)அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள்.

இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது, நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது, அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். 

"யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்" என ஜிப்ரயீல்(அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி(ஸல்)அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் ரமளானை முறையாகப் பயன்படுத்தி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக !!! அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக !

- மஸ்ஜிதுத் தவ்ஹீத் தாம்பரம்

Wednesday, 3 July 2013

"இஸ்லாமிய கல்வி வகுப்பு - பவர்பாயிண்ட் நிகழ்ச்சி"


அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு !!!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற (07.07.2013) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7:00 JAQH சார்பாக "இஸ்லாமிய கல்வி வகுப்பு - பவர்பாயிண்ட் நிகழ்ச்சி" 
(சென்னை - தாம்பரம் "மஸ்ஜிதுத் தவ்ஹீத்") 

தாங்கள் இந்நிகழ்ச்சி களில், உங்கள் குடும்பம், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்துகொண்டு ஈருலக நன்மைகளை அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பாடத் தலைப்பு: “நோன்பின் சட்டங்கள்”
------------------------
இவ்வகுப்பில் கலந்து கொண்டு நோன்பு சட்டங்களையும், தெளிவையும் அறிந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.