Friday, 15 January 2021

பொங்கல் தமிழர்களின் திருநாள் ஆனால் அதில் இஸ்லாமியர்கள் ஏன் கொண்டாடுவதில்லை ?



கேள்வி : பொங்கல் தமிழர்களின் திருநாள் ஆனால் அதில் இஸ்லாமியர்கள் ஏன் கொண்டாடுவதில்லை ????

பொதுவான விழாவிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றதா ????

பதில் : இஸ்லாத்தில் பொங்கள் கொண்டாடக்கூடாது என்று சொல்லவேயில்லை ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட சில விஷயங்கள் பொங்கலில் நடத்தப்படுகின்றது …

முதலில் பொங்கல் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆகவே, ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர் . இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை(போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர். தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.

இது ஒரு சாரார் பொங்கலுக்கு சொல்லும் விளக்கம் இதை முஸ்லிம்கள் எப்படி கொண்டாட முடியும் ???? 

நாங்கள் நம்புவது ஒரிறை கொள்கை.
அந்த ஏகஇறைவனுக்கு தேவைகள் இல்லை[உணவு,தண்ணீர், தூக்கம் மலம் ஜலம் கழித்தல், மற்றும் இன்னபிற இச்சைகளும்] அவனுக்கு பெற்றோர்களும் இல்லை பிள்ளைகளும் இல்லை, அவனுக்கு நிகராக யாரும் இல்லை.

இப்படி நம்பும் முஸ்லிம்களிடம் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் இந்திரன் ஆக இரண்டு கடவுள்களுக்குள் சண்டை போல் நடந்து ஒரு விஷயத்தை பின் பற்றி கொண்டாட சொன்னால் முஸ்லிம்கள் எப்படி ஏற்பார்கள் ????

இரண்டாவதாக :
பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாடப் படுகிறது எனக் கூறுகிறார்கள்.
இதை எடுத்துக்கொண்டாலும் அறுவடை செய்பவர்கள் தங்கள் தானியம் தமது வீட்டிற்கு வந்தடையும் வேளை மகிழ்ச்சியில் மூழ்குவது இயல்பே! இவர்கள் கொண்டாடினால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களால் இது கொண்டாடப்படுகிறது.
விவசாயிகளின் கஷ்டங்களை கொஞ்சமும் நினைத்து பார்க்காதவர்களுக்கு விழா என்றால் மட்டும் ஓடோடி வருகின்றனர்

மூன்றாவதாக:
மாடுகளுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்த தான் பொங்கல் என்றும் கூறுகின்றனர்

சற்று சிந்தியுங்கள் இறைவனின் படைப்புகள் தான் மாடும் சூரியனும் நாம் இதற்கு நன்றி சொல்வதா அல்லது இதை எனக்கு கொடுத்த நம் இறைவனுக்கு நன்றி சொல்வதா ???

தற்போது தமிழ்நாட்டில் சூரியனின் வெப்பத்தால் பல நெற்கதிர்கள் எரிந்து விட்டன இதை பார்த்து பல விவசாயிகள் தற்கொலை செய்து விட்டன இப்படி நடந்தும் சூரியனுக்கு நன்றி செலுத்த போறோம் என்று கூறுகிறீர்களே இது அறிவிப்பூர்வமானதா ?????

ஹிந்துக்களின் கலாச்சாரம் தான் பொங்கல் ஆகும் மாடுகளை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் இது பொங்கல் பண்டிகை

சூரியனை வழிபடுவது ஹிந்துக்கள் இது பொங்கல் பண்டிகை

இப்படி எல்லா வற்றையும் பொது என்று சொல்லிவிட்டு மற்ற மதங்களிள் தடை செய்ததை செய்ய சொன்னால் யாரும் செய்யமாட்டார்கள்.

நான்காவது :
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
இதுவும் ஒரு காரணம் இது அனைத்தும் ஒரு காலத்தில் நடந்தவை இப்போது ஆறு மாதத்திற்கு விலைக்கும் நெற்கதிர்களை மூன்றே மாதத்தில் விளைய செய்கின்றனர் , அப்படி பார்த்தால் ஒரு வருடத்தில் நான்கு தடவை பொங்கல் கொண்டாட வேண்டும்
இப்படி அறிவுப்பூர்வமான விஷயங்களில் தவறாக இருந்தாலும் தமிழனின் பண்பாடு என்பதால் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் தமிழர்களின் திருநாள் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஒரு மதத்தின் சடங்குகளை இதில் நுழைத்தாள் முஸ்லிம்கள் எப்படி கொண்டாடுவார்கள் ????

மாட்டு பொங்கலில் மாடுகளை சுத்தம் செய்தால் பரவாயில்லை 
அந்த மாடுகளின் சிறுநீரை கோமியம் என்று சிலர் அருந்துகின்றனர் இது மட்டுமின்றி அந்த மாடுகளை வணங்கவும் செய்கின்றனர் [என்னை விட அறிவு குறைவாக இருப்பவன் இறைவன் இல்லை என்பது இஸ்லாத்தில் கொள்கை ] அப்படி இருக்கையில் நாங்கள் கொண்டலாமா ????

பொங்கலில் சூரியனை வணங்குகிறார்கள் சூரியன் இறைவனா ???

சூரியனை விட மிக பெரிய நட்சத்திரங்கள் இருக்கும்போது சூரியன் எப்படி இறைவனாக இருக்க முடியும் ???

எல்லாம் வல்ல இறைவனை விட மிக பெரியதாக ஏதுவாலும் இருக்க முடியாது 
சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் உருவாக்கி 2 லட்சம் ஆண்டுகள் தான் ஆகிறது என்றால் அதற்கு முன் இறைவன் இல்லையா ???

ஆதலால் இதுவும் தவரானது …

“தமிழர்களாக இருந்தாலே ‘தமிழர் திருநாள்’ எனப்படும் பொங்கலைக் கொண்டாடதான் வேண்டும்” என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். பொங்கல் கொண்டாடவில்லையென்றால் தமிழுக்கோ மற்ற தமிழர்களுக்கோ எதிரானவர்களாகவோ, தமிழ்ப் பற்று இல்லாதவர்களாகவோ யாரும் ஆகிவிடமாட்டார்கள். பொங்கல் பொதுவான ஒரு திருநாளாக இருந்தால் அதில் எந்தவொரு மதத்தினுடைய வழிபாட்டு அம்சங்களும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஒரு விழாவாக இருக்கவேண்டும். அதைவிடுத்து சூரிய வழிபாடு, படையல், பசு வழிபாடு, ஆராதனை என பிற‌ மார்க்கத்தில் தடுக்கப்பட்ட அனைத்தும் புகுத்தப்பட்ட ஒன்றை ‘தமிழர் அனைவருக்கும் பொதுவான திருநாள்’ (?) என்று கூறி கொண்டாட வலியுறுத்துவது, சரியானதல்ல!!

‘தமிழ்ப் பண்பாடு’, ‘தமிழ்க் கலாச்சாரம்’, ‘தமிழர் திருநாள்’ என்று ‘தமிழ்’படுத்தி மட்டுமே பார்க்கிறீர்களே தவிர, அதை மற்றவர்களும் நடைமுறைப்படுத்த முடியாத சிக்கல்கள் நிறைந்துள்ளதை நீங்கள் உணரவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக பானையில் திருநீரு பூசி குங்குமம் வைப்பதும், மாடுகளுக்கு திலகமிட்டு ஆராதனை செய்வதும், தங்கள் விருப்ப‌ தெய்வங்களின் படங்களை வைத்து படையல் செய்வதும், சூரியனை வழிபட்டு பூஜிப்பதும் அவரவர்களின் உரிமை, விருப்பம். முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் பிற‌ மதங்களின் கொள்கை விஷயங்களில் தலையிடுவதில்லை. அதேபோல் எந்த நிலையிலும் தன்னுடைய அடிப்படை கொள்கைகள் தகர்க்கப்படுவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. ஆக, மதக் கொள்கைகள் கலக்காத ஒரு விழாவாக பொங்கல் இருக்குமானால் உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. தவிர இன்றைய வழக்கத்திலுள்ள‌ பொங்கலை இஸ்லாமியர்கள் கொண்டாடாமல் இருப்பதால் தமிழ்ப் பண்பாட்டை அவர்கள் வெறுப்பதாக ஆகாது.

எப்படி ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்ததோ, அந்த நிலைக்கு அதைக் கொண்டு வந்தால் நீங்கள் சொல்வதுபோல் எல்லோரும் ஒரே மாதிரியாக நிச்சயம் கொண்டாடுவோம். திருநீரு பூசுவதில் ஆரம்பித்து எந்தவித சடங்கு/சம்பிரதாயங்கள், பூஜை/புனஸ்காரங்கள், படையல்/வண‌க்கமின்றி ஒரு பொங்கல் கொண்டாட அனைவரும் சேர்ந்து முன் வந்தால் அதற்கு இஸ்லாமியர்கள் தள்ளி நிற்கமாட்டார்கள்
ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் பொங்கல் கொண்டாடாமல் இருப்பதே சிறந்தது.

பொதுவான விழாவில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்கின்றனர் உதாரணத்திற்கு சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா ஆனால் எப்போது ஆன்மீக அடிப்படையை தகர்க்கும் விதமாக பொங்கல் மாறியதோ அதில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை,

இது உங்களுக்கு தெரியுமா??? இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் நூற்றுக்கு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் இப்படி இருக்கையில் உங்களுடைய பொங்கல் விழா எப்படி சிறப்பாக அமையும்

ஒருவேளை பொங்கல் கொண்டாடுவது சரியாக இருந்தாலும் ஒருவன் அதை கொண்டாடவில்லை என்றால் அவனை தமிழன் இல்லை என்றும் மொழி பற்று இல்லை என்றும் சொல்லக்கூடாது இது அவர் அவரின் விருப்பம்..

  

No comments:

Post a Comment