Thursday, 7 July 2022

குர்பானிய சட்ட திட்டங்கள்


 -மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-

ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும்.

குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபிய வர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.
குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்க ளுக்கு தொகுத்து வழங்குகிறேன்.

குர்பானியின் பின்னணி

நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்ப வத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள்.

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).

எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நட மாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்று முள்ளவனாகவே காண்பீர்கள்.”

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகர மாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்த வருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்ராஹீம் (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். “நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (37:100 – 111)

குர்பானியின் நோக்கம்

“(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவ தில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22: 37)

நான் குர்பானி கொடுப்பதன் மூலம் என்னை நாளு பேர் புகழ்ந்து பேச வேண்டும், பாராட்ட வேண்டும், என்ற எண்ணத்தில் கொடுக்க கூடாது. அல்லது எங்கள் பள்ளியில்தான் அதிகமான குர்பானி பிராணிகள் அறுக்கப்பட்டன என்ற பெருமை வந்து விடக்கூடாது. மாறாக முழு நோக்கமும் இறை திருப்திக்காக இருக்க வேண்டும் என்பதை தான் அந்த குர்ஆன் வசனம் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.

பிராணியின் வகைகளும், வயதுகளும், அறுக்கும் நேரமும்

குர்பான் கொடுப்பதற்கு மாட்டையோ, அல்லது ஆட்டையோ, வாங்கு வதற்கு முன் அதனது வயதை சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். கிடைக்கும் பிராணியை அறுத்து விடக் கூடாது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாய்மாமா அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழு கைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அது இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடுதான். (குர்பானி ஆடன்று)’ என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு (குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கட்டுமர்)’ என்று வினவினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்ற மக்களுக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டு, ‘தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர், தமக்காகவே அதை அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றிவிட்டார்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்-3962)

தொழுகைக்கு முன் அறுத்தால் அது குர்பானியின் சட்டத்திற்குள் அடங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறுக்கும் போது ஓத வேண்டியவைகளும், ஒழுக்கங்களும்

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இர ண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண் டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் (“பிஸ்மில்லாஹ்”) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லா{ஹ அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்க வாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்) தார்கள். (முஸ்லிம் 3975)

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள், வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தி யை எடு’ என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு’ என் றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.

பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) ‘பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்ம தின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்’ (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந் தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந் தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)’ என்று கூறி, அதை அறுத்தார்கள். (முஸ்லிம் 3977)

மேலும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக் கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை (கூரிய) கத்திகள் இல்லாத நிலையில் நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பிராணி சாவதற்கு முன்பாகக் கூர்மையான ஏதேனும் ஒரு பொருளால்) “விரைவாக அறுத்துவிடுங்கள்” அல்லது ‘உயிரிழக்கச் செய்துவிடுங்கள்’. இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால், அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பு இனமாகும். நகங்களோ (இறைமறுப்பாளர்களான) அபிசீனியர்களின் கத்திகளாகும்’ என்று கூறினார்கள்.

(அந்தப் போரில்) எங்களுக்குச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறி வைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம் பெய்து நிற்கச்) செய்யுங்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 3978)

எனவே பிராணியை அறுக்கும் போது பிஸ்மி சொல்லி, தக்பீர் சொல்லி, கூர்மையான கத்தியால் அறுக்க வேண்டும். குர்பான் பிராணியை அறுத்து முடிந்த உடன் அந்த இடத்தில் யா அல்லாஹ் இதை எங்களிட மிருந்து ஏற்றுக் கொள்வாயாக என்று பிராத்தனை செய்யலாம். சாப்பிடுவதற்காக அறுத்தாலும் அந்த பிராணிக்கு எந்த வதையும் கொடுக்காமல் மிகவும் இலகுவான முறையில் அறுக்க வேண் டும். மேலும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லி அறுக்கபடும் எந்த பிராணியையும் சாப்பிடக் கூடாது, என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் காணலாம். ‘ அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசிய மாக என்ன கூறி வந்தார்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம் கூறினார்கள்’ என்றார்கள். நான், ‘அவை யாவை, இறைநம்பிக் கையாளர்களின் தலைவரே?’ என்று கேட்டேன்.

அலீ (ரலி) அவர்கள், ‘தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவ னுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்ப வனை அல்லாஹ் சபிக்கின்றான்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 4001)

குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடலாம்:

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர் கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்து வையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆன போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல்பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்’ என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள், ‘அதனால் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 3986 )

மேலும் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல் லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) ‘உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சி யில்) எதையும் வைத்திருக்க வேண் டாம்’ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், ‘அல் லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமர்’ என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை) அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)’ என்று பதிலளித்தார்கள். ( முஸ்லிம் 3992 )

எனவே குர்பானி இறைச்சியை எத்தனை நாளும் சேமித்து வைத்து சாப்பிடலாம்.

ஆரம்பத்தில் பொது சட்டமாக இருந்து, பிறகு அது மாற்றப்பட்டு, குர்பானி இறைச்சியை எத்தனை நாளும் வைத்து சாப்பிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

குர்பானி கொடுப்பவரின் சட்டம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!’ என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்’ என்றார்கள். (முஸ்லிம் 3997)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்து விட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம். (முஸ்லிம் 3998 )

எனவே குர்பானி கொடுக்க நினைத்தவர்கள், துல்ஹஜ் தலை பிரையை கண்டதிலிருந்து தனது குர்பானியை அறுக்கும் வரைக்கும் மேனியிலுள்ள எந்த முடியையும் களைய கூடாது.

பிறருக்காக குர்பான்?
ஆயிஷா(ரலி) கூறினார்: (நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும் முன் “சரிஃப்” எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் “இ(ந்த மாதவிடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். எனவே, ஹஜ் செய்பவர் நிறை வேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி வருவதைத் தவிர” என்று கூறினார்கள்.

நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான், ‘இது என்ன?’ என்று கேட்டேன். மக்கள், ‘இறைத் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்’ என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 5548)

மேலும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் (தமது ஹஜ்ஜின்போது) தம் துணைவியர் சார்பாக அறுத்துப் பலியிட்டார்கள். (முஸ்லிம்-2544)

தனது குடும்பத்திலுள்ளவர்களுக்காவோ, அல்லது பிறருக்காகவோ, தாராளமாக கொடுக்கலாம். ஒருவர் வெளி நாட்டிலுள்ளார் என்றால் அவருக்காகவும் தாராளமாக குர்பான் கொடுக்கலாம்.

குர்பானி கொடுக்க கூடியவர்கள் பின்வரும் ஒழுங்குகளை பேணி குர்பான் கொடுக்க வேண்டும்

வெளிப்படையாக தெரியக் கூடிய ஊனம், நொண்டி, பிராணியை குர்பான் கொடுக்க கூடாது. வெளிப்படையாக தெரியக் கூடிய குருடு, ஓற்றைக் கண் குருடுள்ள பிராணியை குர்பான் கொடுக்க கூடாது. மேலும் வெளிப்படையாக தெரியக் கூடிய எந்த நோயுள்ள பிராணியையும் குர்பான் கொடுக்க கூடாது. சதையில்லாத மெலிந்த பிராணியையும் குர்பான் கொடுக்க கூடாது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 1417)

இதனால் தான் ஸஹாபாக்கள் குர்பானி கொடுக்க போகும் பிராணிகளை நன்றாக தீனி போட்டு கொழுக்க வைப்பார்கள் என்று வந்துள்ளது.

கூட்டு குர்பான்
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம் 2538)

மேலும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழுபேருக் காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம். (முஸ்லிம் 2537)

எனவே வசதியுள்ளவர்கள் தனியாக மாட்டை குர்பான் கொடுக்கலாம் அதே நேரம் ஓரளவிற்கு வசதியுள்ளவர்கள் பிறருடன் சேர்ந்து குர்பான் கொடுப்பதையும் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

குர்பானி இறைச்சியை பங்கு வைத்தல்
குர்பானி இறைச்சியை மூன்றாக பங்கு வைக்க வேண்டும் என்பது நபி வழியல்ல. தனக்கு ஓரளவிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மற்ற இறைச்சியை உறவுகளுக்கும், ஏழைகளுக்கும் பங்கு வைக்க வேண்டும்.

எத்தனை நாட்கள் குர்பானி கொடுப்பது
ஹஜ் பெருநாளன்றும், அதை தொடர்ந்து வரக்கூடிய (அய்யாமுஸ் தஸ்ரிக்) மூன்று நாட்களும் குர்பான் கொடுக்க முடியும். அதாவது குர்பான் கொடுக்கும் நாட்கள் மொத்தம் நான்காகும்.

கூலி கொடுத்தல்
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத் துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்க என்னை நியமித்தார்கள். மேலும், அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் தர்மம் செய்யுமாறும், அவற்றில் எதையும் உரிப்பவருக்கான கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். உரிப்பவருக்குரிய கூலியை நாமே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2535)

பங்கு வைக்கும் போது நடந்து கொள்ளும் ஒழுங்குகள்

இறைச்சியை வாகனத்திலோ, கையிலோ எடுத்து செல்லும் போது பாதை வழியாக இரத்தம் வடிய, வடிய எடுத்துச் செல்லாதீர்கள். அந்நியர்கள் கோபம் அடையக் கூடிய அளவிற்கு தவறான முறையில் நடந்து கொள்ளாதீர்கள்.

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்

உழ்ஹிய்யா

Wednesday, 6 July 2022

துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும்


ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: அபூபக்கர் ஸித்திக் பள்ளி வளாகம் – ரஹிமா – தம்மாம்

தலைப்பு:துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும்


வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி


அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா)

வீடியோ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

ஷைய்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம்உழ்ஹிய்யாவீடியோ ஆடியோ


 

Tuesday, 5 July 2022

துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்புகள் & செய்ய வேண்டிய அமல்கள்


அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும்
சிறப்பு கல்வி தொடர் வகுப்பு

இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம்
(சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்)

துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்புகள் & செய்ய வேண்டிய அமல்கள்

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம்

படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

ஷைய்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அமல்கள்உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம்உழ்ஹிய்யாகுர்பானிவீடியோ ஆடியோ
 

Monday, 4 July 2022

குர்பானி கொடுக்ககூடியவர் கடைபிடிக்க வேண்டியவைகள்


அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும்
மாதாந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: முத்தரன் பள்ளி வளாகம்
முபர்ரஸ் -அல் ஹஸா – சவூதி அரேபியா
உழ்ஹிய்யா
குர்பானி கொடுக்ககூடியவர் கடைபிடிக்க வேண்டியவைகள்

சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம்

வீடியோ: சகோ. உவைஸ் – இலங்கை
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

ஷைய்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அமல்கள்உழ்ஹிய்யாகேள்வி-பதில்வீடியோ ஆடியோ


 

Sunday, 3 July 2022

உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்



உழ்ஹிய்யா, குர்பான் அறுத்துப் பலியிடுதல் என்பது துல்ஹஜ் பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்தோடு ஆரம்பமாகி அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரையான கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுகின்ற ஒருவணக்க வழிமுறையாகும்.

எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்- (அல்பகரா-203 ) என்ற வசனம் துல்ஹிஜ்ஜா பத்தின் பின்வரும் நாட்களையே குறிக்கும்.

எண்ணிக்கையான நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்பது அய்யாமுஷ் தஷ்ரீக் நாட்கள் என குர்ஆன் மேதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் விளக்கம் தரப்படுகின்றது.

٥٢- [عن سعيد بن جبير:] عنِ ابنِ عبّاسٍ رضيَ اللَّهُ عنْه، أنَّهُ قال: ” الأيّامُ المعلوماتُ أيّامُ العَشرِ ، والمعدوداتُ أيّامُ التَّشريقِ .((ابن الملقن (ت ٧٥٠)، البدر المنير ٦‏/٤٣٠ • إسناده صحيح)) .

“அறியப்பட்ட நாட்கள்” என்பது துல்ஹிஜ்ஜா பத்து தினங்களையும், “எண்ணிக்கையான தினங்கள்” என்பது தஷ்ரீக் உடைய நாட்கள் என்றும் மாமாதே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுவதாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹி) அவர்கள் அறிவித்துள்ளதை ஸஹீஹான சனத் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ( இப்னுல் முலக்கின்- அல்பத்ருல் முனீர்).

அய்யாமுஷ் தஷ்ரீக் என்ற துல்ஹஜ் பிறை 11,12.13 ஆகிய நாட்கள் உண்டு, பருகி அல்லாஹ்வை கூரும் தினங்களாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் )

?அய்யாமுத்தஷ்ரீக் பெயர் வரக் காரணம் என்ன??

ஆடு, மாடு, ஒட்டகைகள் ஆகிய கால்நடைகளை இந்த நாட்களில் மக்கள் அறுத்து அவற்றை உரித்து, மாமிசங்களை பதப்படுத்தி பாவிப்பதனால் இந்த பெயர் கொண்டும் அந்த நாட்கள் முதன்மையாக அழைக்கப்படுகின்றன என்பது இதன் பிரதான பொருள் களில் ஒன்றாகும்.

?உழ்ஹிய்யா கொடுக்க வேண்டிய நேரங்கள்/ தினங்கள்?

துல்ஹஜ் பிறை பத்தில் அதிகாலை ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை முடிந்ததும் உழ்ஹிய்யா கொடுக்கின்ற நேரமும் ஆரம்பமாகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்படும் உழ்ஹிய்யா மாமிசம் உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட, சாதாரண, ஸதகாவில்தான் பதியப்படும் என்பது ஹதீஸ்களில் இருந்து அறிய முடியுமான கருத்தாகும்.

ஹஜ் பெருநாள் தொழுகையோடு ஆரம்பமாகும் இந்த வணக்கம் அய்யாமுத் தஷ்ரீக் முடியும் வரை தொடரும் என்பதை ஹதீஸ்கள் மற்றும் நபித்தோழர்களின் நடைமுறைகளில் இருந்து நம்மால் புரிய முடியுமாக இருக்கின்றது.

பிறை பத்தில்தான் கொடுத்தார்கள், எனவே பிறை பத்தில் பெருநாள் தினமே குர்பானி தினம் என வாதிடுவது ஹதீஸ் பற்றிய விளக்கமின்மையும் வரலாறு பற்றிய அறியாமையனயுமாகும்.

?பிறை பத்தில் மாத்திரம் தான் உழ்ஹிய்யா கொடுக்க வேண்டுமா?

?”ஹஜ்” என்பது அரஃபாதான்,
?அல்ஃபாத்திஹா அத்தியாயம் இன்றி தொழுகை இல்லை,
போன்ற சொற்பிரயோக வரையறை சொற்றொடர் பிரயோக முறை மூலம் “யவ்முன் நஹ்ர்” தான் அறுத்து பலியிடும் நாள் என்ற வரையறை மூலம் உணர்த்தி இருப்பின் அந்த வாதம் சரி எனக் கூற முடியும்.

அதற்கு மாற்றமாக அந்த நாளைத் தொடர்ந்து கொடுப்பதை தடை இல்லாமல் இருப்பதாலும் அதனை அனுமதித்தும் பல அறிவிப்புக்கள் வந்துள்ளதாலும் வழமையாக நாம் நிறை வேற்றுவது போன்று உழ்ஹிய்யாவை தாராளமாக நிறைவேற்ற முடியும்.

இது பற்றி குழப்பிக் கொள்ளவோ, குழம்பவோ வேண்டியதில்லை.

“كل منى منحر ، وكل أيام التشريق ذبح ” انتهى . صححه الشيخ الألباني في السلسلة الصحيحة بمجموع طرقه.

“மினாவின் ஒவ்வொரு இடமும் அறுத்து பலியிடுவதற்கான இடமாகும். அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முழுவதும் அறுப்புக்கான நாட்களாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஸ்ஸஹீஹா- அல்பானி) என்ற ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் நாம் மேலே சுட்டிக் காட்டிய முறையில் தனது உழ்ஹிய்யாவை மேற்படி நாட்களில் தாரளமாக நிறைவேற்றலாம்.

பிறை பத்து முடிந்தால் உழ்ஹிய்யா நேரமும் முடிந்து விட்டதா?

உழ்ஹிய்யாவின் தினத்தை வரையறை செய்வதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

இருந்தும் பெருநாள் தினம் முதல் பிறை 13 வது அஸர் வரையான தினங்களையே பெரும் , பெரும் அறிஞர் பெருமக்கள் சரியான கருத்தாக தேர்வு செய்தனர் என்பதை தீர்வாக அறிய முடிகின்றது.

அந்த தேர்வு என்பது கண்மூடித்தனமான தேர்வு கிடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களைத் தேடிப் பார்க்கின்ற போது தற்போது பின்பற்றப்படும் வழமை மார்க்கம் அனுமதிக்காத ஒரு வழிமுறை என்றோ அல்லது உழ்ஹிய்யா நிறைவேறாத நாட்கள் என்றோ பல காரணங்களின் அடிப்படையில் கூறமுடியாதுள்ளது.

புதிய புரிதல்

துல்ஹஜ் பத்தாம் நாள் அன்று “யவ்முன் நஹ்ர்” அறுத்து பலியிடும் நாள் என்ற கருத்தை முன்வைத்தும் இறைத் தூதர் அவர்கள் அந்த நாளில்தான் அறுத்து அதனை உட்கொண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டும் அதற்குப் பின்வரும் நாட்களில் அறுப்பது உழ்ஹிய்யாவில் சேராது என பீ.ஜே.வும் மற்றும் சிலரும் வாதித்தாலும் அந்த வாதம் பலவீனமானதாகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்னால் அறுப்பது கூடாது, தொழுகை முடிந்த கையோடுதான் அறுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள விதத்தில் உழ்ஹிய்யாவை பின்வரும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அறுப்பது கூடாது என்ற எந்த தடையும் வரவில்லை.

அத்துடன், மினாவுடைய நாட்கள் உண்டு பருகும் நாட்கள் என ஆதாரபூர்வான செய்திகள் வந்திருப்பதையும், தஷ்ரீக் உடைய நாட்கள் அறுத்து பலியிடும் நாட்கள் என இரு வேறு அறிவிப்பாளர் வழியாக வந்ததன் அடிப்படையில் ஸஹீஹான தரத்தில் கொள்ளப்படும் என அல்பானி (ரஹி) போன்ற அறிஞர்கள் ஸஹீஹ் என கூறுவதையும் அவதானித்தால் “யவ்முன் நஹ்ர்” அறுத்து பலியிடும் நாள் என்பது அறுப்பதற்கான ஆரம்பத்தைக் குறிப்பதையும் “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்கள் இறுதியான நாட்கள் என்பதையும் உணரலாம்.

அத்துடன், மார்க்க சட்டங்கள் பொதுவாக நெகிழும் தன்மையைக் கொண்டுள்ளதை இங்கும் கவனிக்க வேண்டும்.

இப்னு தைமிய்யா, இப்னுல் கையிம் போன்ற முற்கால அறிஞர்களும், மற்றும் இப்னு பாஸ், ஷேக் உஸைமீன் போன்ற பிற்கால அறிஞர்கள் பலரும் இந்த கருத்தையே உறுதி செய்கின்றனர்.

அந்த வகையில்
“யவ்முன் நஹ்ர்” என்ற துல்ஹஜ் பத்தாம் நாளை அறுத்து பலியிடுவது சிறப்பான நாளாகவும், பிற்பட்ட நாட்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.

உண்டு பருகுதல் என்பது அறுத்து உண்டு பருகுவதைக் குறிக்குமே தவிர, அறுக்காமல் உண்டு, பருகுவதை குறிப்பதற்காக அந்த சொற்பிரயோகம் இடம் பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பின் வரும் நபி மொழி மூலம் இந்த உண்மையினை உணர்ந்து கொள்ள முடியும். ?

[عن عبدالله بن عمر:] أنَّ رَسولَ اللهِ ﷺ نَهى أَنْ تُؤْكَلَ لُحُومُ الأضاحِيِّ بَعْدَ ثَلاثٍ. قالَ سالِمٌ: فَكانَ ابنُ عُمَرَ، لا يَأْكُلُ لُحُومَ الأضاحِيِّ فَوْقَ ثَلاثٍ، وَقالَ ابنُ أَبِي عُمَرَ: بَعْدَ ثَلاثٍ. [صحيح مسلم ] .

இறைத் தூதர் அவர்கள் மூன்று நாட்களின் பின்னால் உழ்ஹிய்யா மாமிசங்களை உண்ணுவதைத் தடை செய்தார்கள். (முஸ்லிம் ) மற்றொரு அறிவிப்பில் உழ்ஹிய்யா மாமிசங்களை மூன்று நாட்களின் பின்னரும் ஒருவர் சேமித்து வைப்பதைத் தடை செய்தார்கள். ( முஸ்லிம்).

இந்த தடை பற்றி யோசித்தாலும் உழ்ஹிய்யா என்பது பெருநாள் தினத்தின் பின் வரும் மூன்று தினங்களில் கொடுக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

மக்கள் பசி, பட்டினியால் வாடிய போதே இந்த தடை தற்காலிக நடைமுறையில் இருந்தது . பின்வந்த நாட்களில் அது நீக்கப்பட்டது என்பதை முஸ்லிம் கிரந்தத்தின் பின் வரும் மற்றொரு அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

قال رسولُ اللهِ ﷺ كُنْتُ نهَيْتُكم عن لحومِ الأضاحيِّ بعدَ ثلاثٍ فكُلوا ما شِئْتُم (مسلم)

மூன்று நாட்களையும் தாண்டி உங்கள் உழ்ஹிய்யா மாமிசங்களை நீங்கள் சேமித்து வைப்பதை நான் தடை செய்திருந்தேன். நீங்கள் (இதன் பிறகு) தாராளமாக உண்ணுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

இந்த ஹதீஸில் உழ்ஹிய்யா இறைச்சிகளை ஒருவர் சேமித்து வைப்பது தடையாக வந்ததது போன்று ஹஜ் பெருநாள் தினத்தின் பின் தொடர்ந்து வரும் நாட்களில் உழ்ஹிய்யா நிறைவேற்றுவது தடையாக வந்திருப்பின் அந்த தடையை நாம் மீறக் கூடாது. அப்படி எந்த தடையும் இடம் பெறவில்லை.

அத்துடன், இந்த நடைமுறை உணவுப் பழக்கம் தொடர்பான நடைமுறையாகும்.
இதில் :-
?பலிப்பிராணியின் மாமிசத்தை அறுப்பவருக்கு கூலியாகக் கொடுப்பது கூடாது,
?கொம்பு உடைந்தது, மெலிந்தது, நோய்ப்பட்டது ,
?ஆறுமாத ஆட்டுக் குட்டி கூடாது போன்ற
சில தடைகள் இதிலும் வந்திருப்பின் நாம் அதைக் கட்டாயம் எடுத்து நடக்க வேண்டும்.

அவ்வாறு எவ்வித சொற்பிரயோகங்களும் நபிவழியில் இல்லாத போது நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.

ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம்உழ்ஹிய்யா,

 

Saturday, 2 July 2022

உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்துப் பலியிட வேண்டும்?

 



– அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ

உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது வரை அறுத்துப் பலியிடலாம் என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் அன்று தொடக்கம் கருத்து முரண்பாடுகள் நிழவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஈதுல் அழ்ஹா தினத்திலும் அதைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களிலும் அறுத்துப் பலியிட வேண்டும் என்கின்றார். இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய தினங்களில் அறுத்துப்பலியிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஸிரீன் (ரஹ்) அவர்கள் யவ்முன் நஹ்ர் உழ்ஹிய்யாப் பிராணியைப் பலியிட வேண்டும் என்கின்றார். மற்றும் சிலர் துல் ஹஜ் பிறை 10 முதல் இறுதிவரை உழ்ஹிய்யா வழங்கலாம் என்று கூறுகின்றார்கள். இது அல்லாத வேறுகருத்துக்களும் இருக்கின்றது. இவற்றில் அல் குர்ஆன் சுன்னாவுக்கு மிக நெருக்கமான கருத்து எது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் நாம் அலசுவோம்.

இந்தக் கட்டுரையில் உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது பலியிடுவது ஏற்றமானது? என்ற தகவலையும் உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது வரை நாம் அறுத்துப் பலியிடலாம்? என்ற கருத்தையும் ஆதாரங்கள் அடிப்படையில் விரிவாகப் பார்க்கலாம்.

எந்த ஒரு அமலை நாம் நிறைவேற்றும் போதும் அந்த அமலை எப்போது, எப்படிச் செய்வது என்ற அறிவு எங்களிடம் இருப்பது அவசியமாகும். அந்த அறிவு இல்லாமல் நாம் ஒரு அமலை நிறைவேற்றும் போது பல நன்மைகளைத் தவற விட்டுவிடுவோம் . சில வேலை முழு நன்மைகளையும் தவற விடும் நிலைகள் கூட ஏற்பட்டு விடலாம்.

அதனால் ஒரு அமலை நாம் செய்ய முன் அந்த அமல் குறித்து சொல்லப்பட்டுள்ள முழுத் தகவல்களையும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் . பின்னர் அந்த அமலை அதற்குரிய முறையில் செய்து அந்த அமலின் சிறப்புக்களையும், கூலிகளையும்
முழுமையாக அடைந்துகொள்ள
முயற்சி செய்ய வேண்டும்.

உதாரணமாக:
ஜும்ஆவுக்குப் போவது ஒவ்வொரு ஆண்கள் மீதும் கட்டாயக்கடமை . அதே நேரம் நேர காலத்துடன் செல்வது மேலதிக சிறப்புக்களைப் பெற்றுத்தரும் காரியம் என்பதைப் போல் உழ்ஹிய்யா வழங்குவது வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும். அதனை அதற்கு மிகப் பொறுத்தமான நாளில் வழங்குவது பல மடங்கு நன்மைகளை எமக்குப் பெற்றுத்தரும் காரியமாகும்.

இன்று முன்னைய காலங்களை விட அதிகமானவர்கள் உழ்ஹிய்யா என்ற இந்த அமலை நிறைவேற்றுகின்றனர்.
ஆனால் பலரும் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இந்த அமலை நிறைவேற்றுவதில் பொடுபோக்காக செயல்படுகின்றனர். காரணம் துல் ஹஜ் பிறை பத்தினுள் செய்யப்படும் அமல்களுக்குரிய கூலியை அறியாதமையாகும்.

1) துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்.

‘(துல்ஹஜ் பத்து) நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நல்லமல் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அதற்கு ஜிஹாதை விடவுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன் உயிரையும், பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(திர்மிதீ: 757)

துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமல்கள் அல்லாஹ்விடத்தில் தனது உயிரையும், உடைமைகளையும் இழக்காமல் ஒருவர் செய்த ஜிஹாதை விட மிக விருப்பத்துக்குரியது. எனவே துல் ஹஜ் பிறை பத்தில் நாம் உழ்ஹிய்யா வழங்கினால் தான் ஜிஹாதை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமலை செய்த கூலி எங்களின் உழ்ஹிய்யா என்ற அமலுக்குக் கிடைக்கும்.

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் .

والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه, وهي الصلاة والصيام والصدقة والحج, ولا يتأتى ذلك في غيره.

துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மகத்தான நாட்களாகும். என சிலாகித்துக் கூறப்பட்டிருப்பதன் காரணம் என்னவெனில், அந்த நாட்களில் தான் பிரதான வணக்க வழிபாடுகள் யாவும் ஒருங்கே அமைந்திருப்பதாகும் . அவையாவன தொழுகை, நோன்பு, ஹஜ், தர்மம், ஆகிய யாவும் இந்த நாட்களில் முக்கிய அமல்களாக நிறை வேற்றப்படுகின்றன. இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் சாத்தியப்பட மாட்டாது.

( فتح الباري بشرح صحيح البخاري، 2/534 )

2) நபி (ஸல்) அவர்கள் தனது உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்தார்கள்?

ஆதாரம்: 01

நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறவிப்பவர் பராஃ (ரலி)
நூல் புகாரி (951)

ஆதாரம்: 02

ஒரு (ஹஜ்ஜுப் பெருநாளின்) போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்துக் குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்து விட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)
நூல் : புகாரி (5500)

ஆதாரம்: 03

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி 5552

ஆதாரம் : 04

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு ‘குற்றமில்லை!’ என்றே பதில் கூறினார்கள். ஒருவர் ‘நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்!’ என்று கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது) பலியிடுவீராக!’ எனக் கூறினார்கள். பிறகு அவர் ‘நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்!’ என்றதும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1735.
அத்தியாயம் : 25. ஹஜ்

மேலுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் துல் ஹஜ் பிறை பத்து பெருநாள் தினத்தில் மட்டுமே அறுத்துப் பழியிட்டுள்ளார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது. துல் ஹஜ் முதல் பத்துக்குரிய சிறப்பு வேறு எந்த நாட்களுக்கும் கிடையாது என்பதனால் நபி (ஸல்) அவர்கள் வேறு நாட்களில் உழ்ஹிய்யாப் பிராணிகளை அறுக்காது யவ்முன் நஹ்ர் பலியிடுவதை வழமையாகக் கொண்டிருக்கலாம் .

3) யவ்முன் நஹ்ர் (அறுத்துப் பலியிடும் நாள்)
ஈதுல் அழ்ஹா (அறுத்துப் பலியிடும் பெருநாள்) என்ற பெயர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தைத் தவிர வேறு நாட்களுக்கு குறிப்பிட்டுக் கூறப்பவில்லை.

அபூ பக்ரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10-ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது (பலியிடுவதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?’ என்றனர். நாங்கள் ‘ஆம்!’ என்றோம்.

ஸஹீஹ் புகாரி : 1740.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு அடுத்தபடியாக
செய்த அமல் உழ்ஹிய்யாப் பிராணிகளை அறுத்துப் பலியிடல் என்ற அமலைத் தான் என்பதை மேலே நான் குறிப்பிட்ட ஹதீஸ்கள் எங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றன. எந்த அளவுக்கு என்றால் தொழும் திடலுக்குத் தமது உழ்ஹிய்யாப் பிராணிகளை அவர்கள் கொண்டு சென்று திடலிலே அந்த வணக்கத்தை நிறைவேற்றி உள்ளார்கள் என்பதைக் கூட இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன. அது மாத்திரமின்றி தொழுகைக்கு முன் அறுத்துப் பலியிட்ட தோழரிடம் தொழுகைக்குப் பிறகு அறுக்கச் சொன்ன செய்தி,. மற்றும் மினாவில் ஹஜ்ஜுடைய அமல்களில் சிலதை மாற்றி செய்தவர்களுக்கு பதில் கூறும் போது குர்பானி கொடுக்க முன் தலையை மலித்த தோழரிடம் அது குற்றமில்லை இப்போது நீங்கள் பலியிடுங்கள் என்று கூறிய செய்திகள் அனைத்தைக் கொண்டும் துல்ஹஜ் முதல் பத்து சிறப்புக்குரியது என்பதால் நபிகளார் (ஸல்) அவர்கள் யவ்முன் நஹ்ரில் உழ்ஹிய்யா கொடுப்பதை வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை இலகுவாக நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இன்று சிலர் பொருநாள் தினத்தில் இரத்தம் ஓட்டினால் ஆடைகள் அழுக்காகிவிடும், பெருநாள் தினமே உழ்ஹிய்யா வேலையில் கழிந்து விடும், ஜாலியாக இருக்க நேரம் கிடைக்காது என்று எண்ணி அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் அறுத்துப் பலியிடுவதை விரும்புகின்றார்கள். துல் ஹஜ் முதல் பத்தின் சிறப்பை ஈதுல் அழ்ஹா அன்று அறுத்துப் பலியிட்டவரே அடைந்து கொள்வார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாமும் அந்நாளில் எமது பலிப்பிராணிகளைப் பலியிட்டு முழுச்சிறப்புக்களையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

5) அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் (துல் ஹஜ் பிறை 11,12’13) அறுத்துப் பலியிட முடியுமா..?

யவ்முன் நஹ்ரில் உழ்ஹிய்யாப் பிராணிகளை அறுத்துப்பலியிடத் தவறியவர்கள் அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களுக்குள் உழ்ஹிய்யா வழங்க முடியும். இன்று சிலர் பிழையான வாதங்களை முன்வைத்து அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் அறுத்துப் பலியிடுவதை உழ்ஹிய்யாவாக ஏற்க மறுக்கின்றார்கள்.

அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் உழ்ஹிய்யா வழங்க முடியாது என்போரின் வாதங்களின் சுருக்கம் :

யவ்முன் நஹ்ர் மாத்திரம் தான் அறுத்துப் பலியிட முடியும். அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் அறுப்பது உழ்ஹிய்யாவின் கூலியைப் பெற்றுத்தராது . நபி இப்ராஹீம் (அலை ) அவர்களின் வரலாற்றில் நடந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமே உழ்ஹிய்யா மார்க்கமாக்கப்பட்டுள்ளது. நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இஸ்மாஈல் (அலை) அவர்களுக்குப் பகரமாக பலிப்பிராணியை வழங்கிய நாளும் அவர்கள் அந்தப்பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்ட நாளும் ஒரு நாளாகும். எனவே நான்கு நாட்களிலும் அறுப்பது இப்ராஹீம் நபியின் வழிமுறைக்கு மாற்றமான காரியம் என்பது இவர்களின் வாதமாகும்.

மறுப்பு:

1) அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்கள் என்ற கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்ட பலஹீனமான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸ்களாகும்.

2) அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களைப் பற்றி நபிகளார் சொன்ன ஸஹீஹான செய்திகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அய்யாமுத் தஷ்ரீக்” (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
இதை நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

  • மேற்கண்ட ஹதீஸ் நுபைஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
    அதில், “அறிவிப்பாளர் காலித் அல்ஹத்தா (ரஹ்) அவர்கள், நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். மேலும், (“பருகுவதற்கும்” என்பதற்குப் பின்னால்) “இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாளாகும்” என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
    ஸஹீஹ் முஸ்லிம் : 2099.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்களில் அனுப்பி, “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேரெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; “மினா”வின் நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும்”* என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

  • மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில்”எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம்2100

அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் கூறுவதுடன், சாப்பிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும். எனவே
அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

3) அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் அறுத்துப் பலியிடுவது கூடும் என்பதற்கான சான்றுகள்.

சூரதுல் ஹஜ்ஜின் 26 முதல் 30 வரையான தொடர் வசனங்கள் ஹஜ்ஜைப் பற்றி பேசுகின்றது. இந்த வசனங்களை சிந்தித்தால் அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் அறுப்பது தொடார்பில் நாம் தெளிவான ஒரு நிலைப்பாட்டைப் பெறலாம்.

அல்லாஹ் கூறுகிறான்:

لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ‌‌ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ‏

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
(அல்குர்ஆன் : 22:28)

மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அவனின் பெயர்கூறுவதற்கு அவர்கள் வருவார்கள் என்று . எனவே குறிப்பிட்ட நாட்கள் (அய்யாமின் மஃலூமாத்) என்பது எந்த நாட்களைக் குறிக்கும்.? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுகின்றன. அவற்றில் மிகச் சரியான கருத்தாக அறுத்துப் பலியிட முடியுமான முதல் நாள் (யவ்முன் நஹ்ர்) தொடக்கம் ஹஜ்ஜுடைய ஏனைய மூன்று நாட்களையும் (அய்யாமுத் தஷ்ரீக்கை) தான் அது குறிக்கும் என்ற கருத்தை அந்த வசனத்தின் வெளிப்படையான விளக்கத்தை அடிப்படையாக கொண்டு நாம் இலகுவாக அறிந்து கொள்ள முடியும் .

என்றாலும் இக்கருத்தை மறுக்கக் கூடியவர்கள் 22:28 வசனத்துக்கு மாற்றுக் கருத்தை வழங்குகின்றார்கள். அந்த வசனம் அறுப்பதைப் பற்றி பேசவில்லை “சாதுவான பிராணிகளை அல்லாஹ் எமக்கு தந்தமைக்கு நன்றி செலுத்துவது ” பற்றித்தான் பேசுகின்றது என்பது அவர்களின் வாதமாகும்.

இந்த வாதம் ஏற்புடையதா ..? என்பதை இலகுவாக அல் குர்ஆனிய மொழிநடையை அவதானித்து நாம் விளங்க முடியும்.

முதலாவது :

இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் நடந்த சம்பவத்தை அல்லாஹ் இவ்வசனத்தில் எமக்கும் மார்க்கமாக சொல்கிறான். இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் விளங்கினால் கூட இப்ராஹீம் (அலை) அவர்கள் காலம் தொட்டு குறிப்பிட்ட சில நாட்களில் அறுத்துப் பலியிடுவது மார்க்கமாக இருந்துள்ளது என்பதை நாம் விளங்களாம்.

இரண்டாவது:

பிராணிகளின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுதல் என்ற கருத்தைத்தரும் பல வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. அவை அனைத்துமே “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைப் பற்றியே பேசுகின்றது. அதே கருத்தைத்தான் 22:28 வசனத்திலும் அல்லாஹ் சொல்லியுள்ளான்.
மாறாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல் என்ற கருத்தை இந்த வசனம் தரவில்லை.

பிராணிகளைக் குறிக்காது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவது தொடர்பாக வரும் மற்ற செய்திகள் அனைத்தும் அறுத்துப் பலியிடுவதைக் குறிக்காது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும், உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான். (முஸ்லிம் 4106)

பிராணிகளின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுவது தொடர்பாக வரும் சிலகுர்ஆன் வசனங்கள்.

فَـكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ‏

(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.
(அல்குர்ஆன் : 6:118)

وَمَا لَـكُمْ اَلَّا تَاْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَـكُمْ مَّا حَرَّمَ عَلَيْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَيْهِ وَاِنَّ كَثِيْرًا لَّيُضِلُّوْنَ بِاَهْوَآٮِٕهِمْ بِغَيْرِ عِلْمٍ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِيْنَ‏

அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது?

(அல்குர்ஆன் : 6:119)

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் – நிச்சயமாக அது பாவமாகும்;

(அல்குர்ஆன் : 6:121)

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்

நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி என்னுடைய (வேட்டை) நாயை (வேட்டையாடி வர) அனுப்புகிறேன். (என்றால் அதன் சட்டம் என்ன?)’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமின்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது’ என்று பதிலளித்தார்கள்.

‘நான் என்னுடைய நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடியத் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்று எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் உங்கள் நாயின் மீதுதான்; மற்றதன் மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை’ என்று பதிலளித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5486.

இவை அனைத்தும் அறுத்துப் பலியிடுவதைத் தான் குறிக்குமே தவிற அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதையல்ல.

மூன்றாவது:

மேலும் இந்த வசனம் அறுத்துப் பலியிடுவதைப் பற்றி பேசவில்லை எனில் (فَكُلُوْا مِنْهَا) அதிலிருந்து நீங்கள் சாப்பிடுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பானா..? அவ்வாறு இல்லை எனில் எதிலிருந்து சாப்பிடுவதை அல்லாஹ் இங்கே சொல்கிறான் என்பதை இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நான்காவது:

அறுத்துப் பலியிடுவது ஒரு நாளில் தான் என்றிருந்தால் ( اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ) அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்) என்று அல்லாஹ் பன்மையாக சொல்லி இருக்க மாட்டான் . இப்ராஹீம் நபி அவர்களின் காலத்தில் எப்படி குறிப்பிட்ட நாட்களில் அறுத்துப்பலியிடுவது மார்க்கமாக இருந்ததோ அது போன்று அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் அறுப்பது எமக்கு மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:

துல் ஹஜ் முதல் பத்து நாட்களும் சிறப்புக்குரிய நாட்கள் என்பதால் அந்த சிறப்பை அடைந்து கொள்ளும் முகமாக எங்களுடைய உழ்ஹிய்யா வணக்கத்தையும் துல் ஹஜ் பத்தாம் நாளான யவ்முன் நஹ்ரில் வழங்கிவிட நாம் முயற்சிக்க வேண்டும். நபி ஸல் அவர்களும் நபித் தோழர்களும் ஈதுல்அழ்ஹா பொருநாள் தொழுகை முடிய அடுத்த காரியமாக இந்த அமலைத்தான் நிறைவேற்றி உள்ளார்கள். துல் ஹஜ் பத்தாம் நாள் உழ்ஹிய்யாக் கொடுக்க தவறியவர் துல் ஹஜ் பிறை பதின் மூன்றுக்குள் (அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில்) 22:28 வசனத்தின்படி உழ்ஹிய்யா வழங்க முடியும்.

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப் பலிப்பிராணியை வழங்கிய நாளில் வழங்கிய நேரத்தில் அவர் பிராணியைப் பலியிட்டார். அதற்காக நாமும் ஒரே நாளில் எமது பலிப்பிராணிகளைப் பலியிட வேண்டும் என்பது அறிவார்ந்த வாதமில்லை. அவ்வாதத்திலுள்ள பிழைகளை நாம் அறிந்து கொண்டோம். ஒவ்வொரு சமூகத்தாரும் சட்டதிட்டங்களால் வேறுபடுவதுண்டு. உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டது முஹர்ரம் பத்தாம் நாளில் அதற்காக மூஸா நபியும் அந்த சமூகமும் நோன்பு நோற்றதும் அதே நாளில் தான் (முஹர்ரம் பத்து). ஆனால் நாம் அதற்காக நோன்பு நோற்க வேண்டியது இரு நாட்கள் முஹர்ரம் பிறை ஒன்பது ,மற்றும் பத்து இப்படித்தான் அனைத்து விடயங்களும் அல் குர்ஆனையும், ஹதீஸையும் ஒன்றுடன் ஒன்றை மோத விட்டு முரண்பாடாக சித்தரிக்க முயற்சிக்கும் ஷைத்தானிய சிந்தனையாளர்களிடம் இருந்து அல்லாஹ் இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். குர்பானி என்பது ஹஜ் வணக்கத்தின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஷைய்க் இன்திகாப் உமரீ

உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம்உழ்ஹிய்யா,