Friday, 29 December 2017

2 Day Tarbiya @ Ukkamperumbakkam Jan 2018

ஜனவரி 2018 இரண்டு நாள் தர்பியா...
அன்புடையீர்... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…...)

..அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” (39:9)

அழிந்து போகக்கூடிய இந்த உலக வாழ்க்கைக்காக நாம் எவ்வளவோ நாட்களையும் நேரங்களையும் செலவு செய்கிறோம். ஆனால் நிலையான மறுமை வாழ்க்கைக்காக இரண்டு நாள் நம்மால் ஒதுக்க முடியாத என்ன ? என்ற சிந்தனை அடிப்படையில் நமது ஈமானை பலப்படுத்திக்கொள்ள வரும் 2018 ஜனவரி (14 & 15) இரண்டு நாள் “மறுமை நோக்கி ஈமானிய பயணம்” என்ற தலைப்பில் சிறப்பு தர்பியா அமைதியான சூழல் "உக்கம்பெரும்பாக்கம்” கிராமத்தில் உள்ள நமது JAQH மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தர்பியாவில் பல்வேறு மார்க்க அறிஞர்கள் நம து ஈமானை பலப்படுத்த பயிற்சி அளிக்க உள்ளனர்.

மேலும் ஊக்கம்பெரும்பாக்கம் மர்கஸ்-க்கு எப்படி வருவது என்று தெரிந்து கொள்ள சகோ. ஜாஹிர் ஹுசைன் (+91 99433 98325) அவர்களை தொடர்புகொள்ளவும் இன்ஷா அல்லாஹ்...

நமது பயணத்தை அல்லாஹ் இலகுவாக்குவனாக ஆமீன்...!

வகுப்பு ஆசிரியர்கள்
  ü  மெளலவி ரஹ்மத்துல்லாஹ ஃபிர்தவ்ஸி
  ü  மெளலவி பஷீர் ஃபிர்தவ்ஸி
  ü  மெளலவி அப்பாஸ் அலி Misc
  ü  மெளலவி அப்துல்லாஹ ஃபிர்தவ்ஸி
  ü  மெளலவி மன்சூர் உமரி

சிறப்பு அம்சம்கள்:-
 தர்பியத்
 அகீதா விளக்கம்
 பயிற்சி வகுப்புகள்
 வினாடி, வினா
 டோர் டூ டோர் தாஃவா
 அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான காரியங்கள்

குறிப்பு:- 
1.நாள் - 13.01.2018 (சனிக்கிழமை இஷா) முதல்
15.01.2018 (திங்கள்கிழமை அஸர்) வரை
2.உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3.முன்பதிவு கட்டாயம்
உங்கள் பெயர் / ஊர் / அலைபேசி எண்:
WhatsApp (or) SMS மூலம் முன்பதிவு செய்துகொள்ளவும் 99624 54230 / 98416 09268
4.கட்டணம் ரூ. 100/- மட்டுமே.
5.Bedsheet, toothpaste, soap (bring basic thing while coming)

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மார்க்க கல்வியை கற்றுக் கொள்ள
அன்போடு அழைக்கின்றோம்...

Dawah Table

இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமா ?
இதோ தாம்பரத்தில் ஓர் அறிய வாய்ப்பு……
தாம்பரம் தாஃவா மேஜை நிகழ்ச்சி
Tambaram Dawah Table [TDT]

  Ø ஓர் இறைவன் பக்கம் அழைத்தல் !
  Ø இறை தூதரைப் பற்றி அறிவிப்பு !!
  Ø மறுமை நாளை பற்றி அறிவிப்பு !!!

நாள்: 30.12.2017 சனிக்கிழமை (இன்ஷா அல்லாஹ் )
நேரம்: மாலை 4:30 முதல் 8:00  மணி  வரை
இடம்: தாம்பரம் நகராட்சி  அருகில்

எங்கள் நண்பர்களாகிய உங்களின் ஆதரவு மிகவும் முக் கியமான ஒன்று ஆதவரவளியுங்கள், இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைக்க........

என்றும் அழைப்பு பணியில்
இஸ்லாமிய அழைப்பு மையம் தாம்பரம் [IDCT]
9003697290 / 9790441452 – jaqhtambaram@gmail.com
www.fb.com/dawahtable – www.fb.com/idctambaram

என்றும் அழைப்பு பணியில்
ஜம்யிய்யத்து  அஹ்லில் குர்ஆன்  வல்ஹதீஸ்  தாம்பரம் மர்கஸ்
 Tambaram)


Tuesday, 26 December 2017

இப்றாஹீம் நபியும்… கொழுத்த காளைக் கன்றும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-9]


இப்றாஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவர் நற்பண்புகள் நிறைந்தவர். விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது அவரின் விஷேச பண்புகளில் ஒன்றாகும். ஒருநாள் அவரது வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்து ஸலாம் கூறினர். இப்றாஹீம் நபியும் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் யார், எவர்? என்ற எந்த அறிமுகமும் அற்றவர்கள்.
இருப்பினும் அவர்களை அன்பாக வரவேற்று இப்றாஹீம் நபி அவர்களை அரவணைத்தார். தான் வளர்த்து வந்த ஒரு கொழுத்த காளைக் கன்றைஅவர்களுக்காக சமைத்து அதை அவர்களுக்கு முன்னால் உண்பதற்காக வைத்தார். அவர்கள் உண்ணாமல் இருந்தனர். இதைப் பார்த்த இப்றாஹீம் நபிக்கு அச்சம் ஏற்பட்டது. அன்றைய காலத்தில் ஒருவரது வீட்டில் உண்டுவிட்டால் அவருக்கு உபாதை ஏதும் செய்யமாட்டார்கள். இவர்கள் உண்ணாமல் இருப்பதைப் பார்த்தால் ஏதேனும் கெட்ட நோக்கத்தில் வந்திருப்பார்களோ என்று அச்சம் ஏற்பட்டது.
‘நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?’ என்று கேட்டார்.
அதன் பின்புதான் வந்தவர்கள் மனித உருவத்தில் வந்த வானவர்கள் என்பது தெரிய வந்தது. வானவர்கள் மனித உருவத்தில் வந்தாலும் வானவர்களுக்குரிய இயல்புடன்தான் இருப்பார்கள். வானவர்களுக்கு ஆசாபாசங்களோ, பசி, தாகம் என்பனவோ இல்லை. அவர்கள் உண்ணவோ, பருகவோ மாட்டார்கள் பின்புதான் வானவர்கள் தாம் வந்த நோக்கத்தை தெளிவுபடுத்தினார்கள்
‘உங்களுக்கு அறிவுமிக்க ஆண் குழந்தையொன்று கிடைக்கப் போகின்றது என்ற நற்செய்தியைக் கூற வந்தோம்’ என்றனர்.
உள்ளே இருந்து இப்றாஹீம் நபியின் மனைவி அன்னை ஸாரா அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘நான் கிழவி, மலடி. எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்?’ என்ற எண்ணத்தில் கண்ணதில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியத்தில் ‘நானோ கிழவி, மலடி. என் கணவரும் வயோதிகர்! இப்படி இருக்க எனக்கு குழந்தை கிடைக்குமா?’என ஆச்சரியத்துடன் வினவினார்.
அதற்கு வானவர்கள் ‘அப்படித்தான் நடக்கும்’ என்று கூறினர்.
மலக்குகள் கூறிய பிரகாரம் அன்னை ஸாரா அவர்களுக்கு ‘இஸ்ஹாக்’என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அவருக்கு ‘யஃகூப்’ என்றொரு குழந்தையும் கிடைத்தது. அவருக்கு 12 ஆண் குழந்தைகள் கிடைத்தனர். அவர்களின் பரம்பரையினர்தான் ‘இஸ்ரவேலர்கள்’ ஆவார்கள்.
அன்புள்ள தம்பி தங்கைகளே! இப்றாஹீம் நபி யார், எவறென்று தெரியாத விருந்தினர்களையே, தான் ஆசையோடு வளர்த்த கொழுத்த காளைக் கன்றை சமைத்து உணவு படைத்து உபசரித்துள்ளார்கள். எனவே, நாமும் விருந்தினர்களை உபசரித்து எமது ஈமானை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் அல்லாஹ்வின் அருளையும் பெற்றுக் கொள்ள முன்வருவோமாக!

Monday, 18 December 2017

யூனுஸ் நபியும்… மீனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-8]



யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது ஊரை விட்டும் வெளியேறுவதென்றால் அல்லாஹ்வின் கட்டளை வர வேண்டும். யூனுஸ் நபி தனது சுய முடிவில் சென்றார்.
ஒரு கப்பல் இருந்தது. அதில் மக்கள் நிறைந்திருந்தனர். இவர் போய் அந்தக் கப்பலில் ஏறிக் கொண்டார். கப்பல் கடலில் பயணித்தது. இடை நடுவில் கப்பல் அலை மோத ஆரம்பித்தது. இவ்வாறு ஆபத்து வந்ததால் கப்பலில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி சீட்டுக் குலுக்கி யாருடைய பெயர் வருகின்றதோ அவரைக் கடலில் குதிக்கச் சொல்வது அவர்களது மரபாகும். இந்த அடிப்படையில் சீட்டுக் குலுக்கிய போது யூனுஸ் நபியின் பெயர்தான் வந்தது. அவர் கடலில் குதித்தார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப் பிரம்மாண்டமான ஒரு மீன் யூனுஸ் நபியை விழுங்கிக் கொண்டது. யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் சென்றார். தான் சோதிக்கப்படுவதை அறிந்தும் கொண்டார். அவர் மீன் வயிற்றில் இருந்து கொண்டு,
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. நீ தூய்மையானவன். நான் அநீதமிளைத்தோரில் ஆகிவிட்டேன்! (திருக்குர்ஆன் 21:87) என்று பிரார்த்தித்தார்.
அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். மீன் அவரை கரையில் துப்பியது. அவர் கடற்கரையில் பலவீனமான நிலையில் இருக்கும் போது அல்லாஹ் சுரைக்காய் கொடியை வளரச் செய்து அவருக்கு நிழல் கொடுத்தான்.
யூனுஸ் நபியின் மக்கள் வேதனையின் அடையாளத்தைக் கண்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களின் ஈமானும் தவ்பாவும் அவர்களைப் பாதுகாத்தது. யூனுஸ் நபியும் சோதனையில் இருந்து மீண்டு கொண்டார்.
பொறுமையின் அவசியம், தவ்பா அழிவில் இருந்து பாதுகாக்கும் போன்ற படிப்பினைகளை இச்சம்பவத்தில் இருந்து பெறலாம். யூனுஸ் நபி சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் திருக்குர்ஆனில் 37:139- 148, 68:48-50, 21:87-88 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.

Saturday, 16 December 2017

சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-7]


எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த சூனியக்காரர்களுக்கும் ஒரு பொது இடத்தில் போட்டி ஏற்பாடாகியது.
போட்டி நடக்கும் இடத்திற்கு மூஸா நபியும் சூனியக்காரர்களும் வந்தனர். மக்களும் திராளாகக் கூடியிருந்தனர். சூனியக்காரர்கள் தமது கைத்தடிகளையும் கயிறுகளையும் போட்டனர்.
அவை நெளிந்து ஓடும் பாம்புகள் போல் போலியாகத் தோன்றின. மூஸா நபிக்கும் அவை பாம்புகள் போன்றுதான் தென்பட்டன. மக்களுக்கும் பாம்புகளாகத்தான் தென்பட்டன.
சூனியக்காரர்கள் மக்களின் கண்களை வசப்படுத்தினர். இதைக் கண்னுற்ற மக்கள் அச்சப்பட்டனர். மூஸா நபியின் உள்ளத்திலும் இலேசாக அச்சம் ஏற்பட்டது.
அல்லாஹ் மூஸா நபியிடம், ‘உமது கைத்தடியைப் போடும்’ என்றான். மூஸா நபி தனது கைத்தடியைப் போட்டார். அது நிஜமான பாம்பாக மாறியது. பாம்புகள் போல் தோன்றிய சூனியத்தை அது விழுங்கியது. சூனியக்காரர்களுக்கு சூனியத்தால் என்ன செய்யலாம் என்பது நன்றாகத் தெரியும்.
சூனியத்தால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டலாம். கயிரையும் தடியையும் போலியாகப் பாம்பு போல் தோன்றச் செய்யலாம். ஆனால், பாம்பாக மாற்ற முடியாது. மூஸா நபி சூனியக்காரர் அல்ல. அவர் செய்தது சூனியமும் அல்ல; அவர் ஒரு இறைத்தூதர், அவர் செய்தது அற்புதம் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொண்டனர்.
எனவே, பணத்துக்காகவும், பதவிக்காவும் போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் அந்த இடத்திலேயே சுஜூதில் விழுந்து அல்லாஹ்வையும் மூஸா நபியையும் ஈமான் கொண்டனர். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!
சூனியத்தை விழுங்கிய அந்தப் பாம்பு பற்றிய தகவல்கள் திருக்குர்ஆனில் 7:106-126, 10:76- 82, 20:63-76, 26:36-51 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Tuesday, 21 November 2017

மீலாதும் மவ்லூதும்

மீலாதும் மவ்லூதும்
ரபியுல் அவ்வல் மாதம் ஊர் எல்லாம் ஒரே விழாக்கோலம் தான்! தெருவெங்கும் மீலாது விழா! (இறை) இல்லங்களில் மவ்லீதுகள்….. கொண்டாட்டங்களுக்கு குறையே இருக்காது. மீலாதுகளையும் மவ்லீதுகளையும் செயல்படுத்தினால் இறை திருப்தியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பரிந்துரையும் கிட்டும் என்பது இன்றைய பல முஸ்லிம்களின் நம்பிக்கை. இவை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தராத புதிய கலாச்சாரம், (பித்அத்) இறைத்தூதரும், அவர் தம் தோழர்களும் நடைமுறைப் படுத்தாத இந்த மீலாது – மவ்லீது ஹிஜ்ரி 600-ல் எகிப்து அரசன் இர்பல்’ என்பவரால் சில மூட முஸ்லிம்களின் கோரிக்கை மூலம் உருவானது.
இயேசு நாதருக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது, நமது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது? என்ற எண்ணத்தில் பிறந்ததே இந்த மீலாத் விழா! மவ்லீது பாடல்கள்!!!
நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்! திருக்குர்ஆன் 94:4
இப்னு மர்யம் (இயேசு)வை கிறித்தவர்கள் மிகைபடப் புகழ்ந்தது போல் நீங்கள் என்னை மிகைப்பட புகழாதீர்கள்! எனினும் (என்னை) இறைவனுடைய அடியார் என்றும் இறைவனின் தூதர் என்றும் கூறுங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை உமர்(ர) அவர்கள் கேட்டதாக கூறியதை நான் கேட்டேன்! அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : ரஜீன்
தோழர்கள் : “இறைத்தூதரே! தங்களுக்கு நாங்கள் எவ்வாறு சலவாத் கூறுவது?”
இறைத்தூதர்(ஸல்) : “அல்லாஹும்ம ஸல் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள்.
அறிவிப்பவர் : கஃபு இப்னு உஜ்ரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை இறைவன் எந்த அளவுக்கு உயர்த்த வேண்டுமோ, அந்த அளவு உயர்த்தி விட்டான். இதற்கும், மேலாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை யாராலும் உயர்த்திட இயலாது. இறைத்தூதரின் தோழர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் புகழ்ந்திட தடை செய்தார்கள். இன்றைய முஸ்லிம்கள் இறைத்தூதரைப் புகழ்வதாகக் கருதி, மீலாத், மவ்லூத் என்று பாடி கேவலப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி விட்டனர். அரபியில் மவ்லீது என்ற பெயரில் கவிதைகளைப் பாடி விட்டால், பரக்கத் இறையரும் வளம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று நம்புகின்றனர். ஆண்டாண்டு காலமாக பெரும்பாலும் முஸ்லிம்கள் மீலாத் மவ்லீத், ஓதுவதால் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து விட வில்லை.
இது வழிபாடு அல்ல, வழிகேடு! என்று முஸ்லிம்கள் உணர வில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தராத சலவாத்தோ, புகழ்கவிதைகளோ, இறைவனால் நிராகரிக்கப்பட்டு விடும். யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அழிந்து விட்டனர். முஸ்லிம்களும் அதே குற்றத்தையே செய்து வருகின்றனர்.
(தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானது அல்ல. திருக்குர்ஆன் 36:69
கவிஞர்களை வீணர்களே (வழிகேடர்களே) பின்பற்றுவார்கள். நிச்சயமாக அவர்கள் பள்ளத்தாக்குகளில் அலைந்து திரிவதை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் செய்யாததைச் சொல்வார்கள்.
திருக்குர்ஆன் 26:224, 225, 226
பள்ளியில் பழிக்குப்பழி கொலை செய்வதையும், அதில் கவிஞர் பாடுவதையும் (இறைவனுடைய) தண்டனைகளை நிறை வேற்றுவதையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹகீமுப்னு ஹிஸாம்(ரலி) நூல் : அபூதாவூத்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும் தவறி விட்டதைத் தேடுவதையும், கவிபாடுவதையும், வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன்னர் அங்கு கூட்டமாகக் கூடுவதையும் தடை செய்தனர். அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐப்(ரலி) நூல் : ஸுனன்
கவிகள் பாட இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்தம் தோழர்களும் யுத்தக்களத்தில் சிரமத்தை மறந்து உற்சாகமாக இருக்க கவிதை பாடப்பட்டது. பாரம் சுமக்கும் ஒட்டகம் சுமையை மறந்து வேகமாகப் பாலைவனத்தில் செல்லவும் கவிகள் பாடப்பட்டது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தராத செயல்கள் யாவும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் யாவும் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நபிமொழியை சிந்தியுங்கள்.
முஹம்மது(ஸல்) ஆகிய என்னை மூஸா(அலை) அவர்களுக்கு மேல் மேன்மைப் படுத்தாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி
“யூனுஸ்(அலை) அவர்களை விட முஹம்மது(ஸல்) அவர்கள் மிகவும் மேலானவர்” என்று எந்த அடியானும் கூறுவது தகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத்
(எல்லா) இறைத்தூதர்களையும் விட என்னை மேலானவர்’ என்று கருதாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத(ரலி) நூல் : அபூதாவூத்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது நம் அன்பை, பிரியத்தை எப்படித்தான் வெளிப்படுத்துவது?
(இறைத்தூதரே!) கூறும் நீங்கள் இறைவனை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள், இறைவன் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் பன்னிப்பான். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர்கள். அவர்கள் காட்டிய திசையில் தான் பயனிக்க வேண்டுமேயன்றி, சுயமாய் பயணத்தைத் தொடரக் கூடாது.

மிலாது நபி சில கேள்விகள்???

முஹமத் (ஸல்) தங்கள் பறந்த நாளை கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
அபுபக்கர் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்:இல்லை
உமர் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
உஸ்மான் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
அலி (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
ஸஹாபாக்கள் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் அபு ஹனிஃபா(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் அஷ் ஷாஃபி(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் மாலிக்(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
மிலாது/மவ்லீத் கொண்டாடம் அல் குர்ஆனில் கூறபட்டுள்ளதா?
பதில்: இல்லை
மிலாது/மவ்லீத் கொண்டாடம் அல் ஹதீஸில் கூறபட்டுள்ளதா?
பதில்: இல்லை
மிலாது/மவ்லீத் கொண்டாடம் இஸ்லாத்தின் ஒரு பகுதியா?
பதில்: இல்லை

அல்லாஹ்வின் தூதர் முஹமத் (ஸல்) கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்.அபிசீனிய அடிமை உங்களை ஆண்டாலும் அவருக்கு செவிசாயுங்கள், கட்டுபடுங்கள்.உங்களில் எனக்கு பின் வாழுகின்றவர்,அதிகாமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்.அப்போது நீங்கள் எனது வழிமுறையையும் எனக்கிப் பின் வருகின்ற நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அதை கடைவாய்ப் பற்களால் பற்ளி பிடியுங்கள்.புதிய காரியங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.ஒவ்வொரு புதிய காரியமும் வழிகேடுதான்.
நூல்: சுனன் அபூதாவிது-4609,

உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சொல்லை ஏற்பதற்கும் அவர்களுக்கு கட்டுபடுவதற்கும் கடினமாக உள்ளதா???
சொல்லுங்கள் என் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே!!!!!
உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சொல்லை ஏற்பதற்கும் அவர்களுக்கு கட்டுபடுவதற்கும் கடினமாக உள்ளதா???


Thursday, 16 November 2017

JAQH TEAM DELIVERS AID TO ROHINGYA MUSLIM @ INDIA

இந்தியா ரோஹின்யா அகதிகளுக்கு தேவையான உதவி
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
#RohingyaMuslims #HelpingHand #JAQH

#ரோஹின்யா முஸ்லிம்களுக்கு
= = = = = = = = = = = = =
இந்தியாவில் வாடும் ரோஹின்யா அகதிகளுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நமது ஜமாத் மாநில மேல்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைப்படி சென்னை கேளம்பாக்கம் மற்றும் டெல்லி, ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளின் நிலையை நேரடியாக முகாம்களை பார்வையிட்டனர்…

பிறகு உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது என்பதை நீங்கள் அறிந்த ஒன்று. சென்னை கேளம்பாக்கத்தில் அவர்கள் தங்குமிடத்துக்கு தேவையான (மேல் தார்பாய்) சீர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்… 
அதனை தொடர்ந்து அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கப்பட்டடு வருகிறது...

பிறகு டெல்லி பயணம்…
= = = = = = = = = = = 
இந்நிகழ்வில்  Jammiyathu Ahlil Qur'an val Hadees JAQH அமைப்பின் 
மாநில மேல்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

நமது ஜமாத் திரட்டிய நிதியில் முதல் கட்டமாக
13.11.17 அன்று ஹரியானா மாநிலத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு 
15.11.17 அன்று டெல்லி மாநிலத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு நிவராண பொருட்கள் வழங்கப்பட்டன...

குடும்பத்தினருக்கு Rs. 3000/- மதிப்புள்ள 50 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திரட்டிய நிதியில் முதற்கட்ட உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

யா அல்லாஹ் எங்கள் பணிகளை ஏற்றுக் கொள்ளவாயக...! ஆமீன்