Tuesday, 31 October 2017

ஆயுத கலாச்சாரம்

ஆயுத கலாச்சாரம்
- ஆக்கம் மௌலவி Basheer Fir dousi
================================
இஸ்லாம் மனித சமுதாயத்திர்க்கு அமைதியையும், சகிப்புத்தனமையும் போதிக்கும் மார்க்கம் என்பதாக முஸ்லிம்கள் உலக அரங்கில் பறைசாட்டிகொண்டிருக்கிறார்கள் உண்மையில்  இந்த அழைப்பு இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ஆனாலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்று நடக்கும் நிகழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தின் அழைப்புக்கு முரணாக முஸ்லிம்கள் தங்களது செயல்களை அமைத்துக்கொண்டிருப்பதைகாட்டுகிறது. அந்நியர்கள் மூலம்  முஸ்லிம்கள் தாக்கப்படுவது ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதும், வன்முறையை அரங்கேற்றி சகோதர முஸ்லிமின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதும், சர்வ சாதாரணமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

 முஸ்லிம் நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் நாள்தோறும் வாடிக்கையாக நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயம்  அவர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாதா !முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபடக்கூடாதா!என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில் தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையில்லாமல் மோதிகொண்டிருப்பதைப்பார்க்கிறோம்.
 இன மோதல்களுக்கும் மொழிச்சண்டைகளுக்கும் இடமளிக்காதா மார்க்கத்தில் இயக்க சண்டைகளுக்கு  பஞ்சமில்லை என்பதர்க்கு  நிகழ்வுகள் சான்றாக உள்ளது.முஸ்லிம்களுக்கு  இயக்க உணர்வை ஊட்டி வளர்த்த அளவிர்க்கு இஸ்லாமிய உணர்வை ஊட்டி வளர்க்கவில்லை  என்பது தான் இதற்குக் காரணம். ஒரு முஸ்லிமிர்க்கு இன்னொரு முஸ்லிமின் மானம், உயிர் ,செல்வம் ஆகிய அனைத்தும் ஹராமாகும் என்று இஸ்லாம் கூறுகிறது இத்தகைய அறிவுரைகளையும் போதனைகளையும் போதித்து வளர்க்கப்படவேண்டிய முஸ்லிம்கள் சக முஸ்லிமின் கண்ணியத்தையும்,மானத்தையும், ஏன் இவை எல்லாவற்றையும்விட மேலான உயிரையும் பறிக்க முயல்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயமாகும்  முஸ்லிமை கொல்வது பெரும்பாவமாகும் அதனைச்செய்வோருக்கு நரகம் தான் என்று அல்லாஹ் கூறுகிறான்

ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால், அவனுக்குரிய கூலி நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்துகிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.அல்குர் ஆன் 4:93

நரகத்தையும் அல்லாஹ்வின் கோபத்தையும்,சாபத்தையும் இத்தகைய பாவிகளுக்கு தண்டமையாக கொடுக்கப்படும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறி எச்சரிக்கிறான்

நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள்
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல்:ஸஹீஹுல் புஹாரி 6882

அல்லாஹ்வின் கருணையை விட்டு தூரமாக்கப்படுபவன்,அதிகமாக தண்டனைக்கு ஆளாக்கப்படுபவன் அவனது வெருப்பிர்க்கு பாத்திரமானவனைக்குறித்தும் அவர்களுக்குறிய இழிவான  அந்தஸ்த்தையும் இந்நபி மொழிசுட்டிக்காட்டுகிறது கொலையாளிக்கு அல்லாஹ்விடம் இழிவும், நரக வேதனையும் இருப்பது ஆச்சரியமான விஷயமல்ல  ஏனெனில் நியாயமின்றி யார், யாரை கொலை செய்தாலும் அத்தகைய பாவிகளுக்கு அல்லாஹ்விடம் தண்டனையுள்ளது ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கொலையுண்டவனுக்கும் நரகம் என்று சொல்லப்பட்டதுதான்.முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் சண்டையிட்டு அதனால்  ஒருமுஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொன்றால் கொன்றவருக்கும் கொல்லப்பட்டவருக்கும் நரகம் தான் என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரித்துள்ளார்கள்

அஹ்னஃப் இப்னு கைஸ் அவர்கள் கூறினார்கள் நான்
அலீ(ரலி)க்கு உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) என்னைச் சந்தித்து 'எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் 'நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்' என கூறினார்' என அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.ஸஹீஹுல் புஹாரி 31

முஸ்லிகள் ஒருவருக்கு ஒருவர் எதிராக ஆயுதம் ஏந்துவது இருதரப்பினரையும் நரகில் தள்ளிவிடும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்ட முஸ்லிம்கள் ஆயுதமேந்தி சகோதர முஸ்லிமை கொல்லத்துடிக்கிறான் என்பதை கானொளிகளில் பார்க்க முடிகிறது.
முஸ்லிமுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது
சகோதரனுக்கு எதிராக ஆயுதமேந்துவதை நபி கண்டித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்  ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு எதிராக ஆயுதமேந்தினால் அவனை அவன் அந்த ஆயுதத்தை மறைத்து வைக்காதவரை அல்லாஹ்வின்  மலாயிக்க சபித்துக்கொண்டிருப்பார்கள்
அறிவிப்பாளர் அபீபக்ரா ,நூல்: முஸ்னத் பஸ்ஸார் 3641,தப்ரானி 2661

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.நூல் ஸஹீஹுல் புஹாரி 7070,7071

சகோதரனுக்கு எதிராக விளையாட்டிர்க்காகக்கூட  ஆயுதமேந்தக்கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். .நூல் ஸஹீஹுல் புஹாரி7072

உயிர் அல்லாஹ்விடம் மதிப்பு மிக்கது என்வே தான் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் தான் மறுமையில் முதல் தீர்ப்பு இருக்கும் என்பதாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள் அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் அவர்கள் அறிவித்தார்கள் மறுமையில் முதலாவதாக மனிதர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கப்படுவது இரத்தங்கள் (கொலைகள் )தொடர்பாகத்தான் இருக்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள் .நூல் :ஸஹீஹுல் முஸ்லிம் 1678

அநியாயமாக கொல்லப்பட்டநிரபராதிகள், இரத்தம் சிந்தப்பட்டவர்கள் ஆகியோருக்காக நியாய தீர்ப்பு நாளில் உரிமைகள் கோரப்படும் என்பது முஸ்லிம்களின் இரத்தம் அல்லாஹ்விடம்  எந்த அளவு மதிப்பு மிக்கது என்பதை காட்டுகிறது
அபூஸஈத் அல்குத்ரி அவர்களும் அபூஹுரைரா
வனத்திலிருப்போரும் பூமியில் வாசிப்போரும் ஒரு முஃமினின் கொலையில் பங்கெடுத்தார்களேயானால் அவர்கள் அனைவரையும் அல்லாஹ் நரகில் முகம் குப்புற தள்ளுவான் என நபி அவர்கள் கூறினார்கள் .நூல் சுனனுத்திர்மிதி 1938

ஒற்றுமை எதனால் முஸ்லிம்கள் இன்றைக்கு பல பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சில கோட்ப்படுகளை அமைத்துக்கொண்டு அதனை நோக்கி மக்களை அழைத்து அதன் மூலம் ஒற்றுமை உறுவாக்க வேண்டுமென்று முழங்குகிறார்கள் 
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.3:103

மேற்கூறப்பட்ட வசனம் அனைத்து குழுக்களும் தங்களது மேடைகளில் முழங்குவார்கள் அதன் மூலம் தங்களை ஒற்றுமையை விரும்பக்கூடியவர்கள் என்பதாக காட்டிக்கொள்வார்கள் உண்மையில் ஒற்றுமையை என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் வழங்கிய கொள்கையின் அடிப்படையில் இருக்கவேண்டுமேத் தவிற ஒவ்வொருவரும் தங்களுக்கென உறுவாக்கிக்கொண்ட வழிமுறையின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
நபி அவர்கள் உறுவாக்கிய சத்திய ஸஹாபாக்கள் பல கொள்கையில் இருக்கவில்லை நபி அவர்கள் வரைத்துக்காட்டிய கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்தார்கள் எனவேதான் பல்வேறு கருத்துவேறுபாடுகளையும், பகைமையும் கொண்டிருந்த அம்மக்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டபின்னர்  அல்லாஹ்வின்  கட்டளைக்கும்  அல்லாஹ்வின் தூதரின் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடந்தார்கள்
வரலாற்றில் ஒர் நிகழ்வு!
முஸ்லிம்கள் மீது பகைமைகொண்டிருந்த “ஷாஸ் இப்னு கைஸ்’ என்ற யூதன். அன்சாரிகளில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி ஓரிடத்தில் பேசியதைப் பார்த்தான்.. இவ்வளவு ஒற்றுமையாகவும் அன்பாகவும் இஸ்லாமின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுகூடி இருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. இவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் இங்கு தங்க முடியாது” என்று கூறி தன்னுடன் இருந்த யூத வாலிபனிடம் “நீ சென்று அவர்களுடன் உட்கார்ந்து ,பிறகு புஆஸ் போரைப் பற்றியும் அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அவர்களுக்கு நினைவூட்டு, போர் சமயத்தில் அவர்கள் தங்களுக்குள் கூறிய கவிதைகளை அவர்களுக்குப் பாடிக்காட்டு” என்று கூறினான்.
ஷாஸ் கூறியவாறே அவனும் செய்தான். நல்ல பலன் கிடைத்தது. இரு கூட்டத்தினரும் தத்தம் பெருமையைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இரு கூட்டத்திலிருந்தும் இருவர் மண்டியிட்டு வாய்ச் சண்டை போட, அதில் ஒருவர் நீங்கள் நாடினால் அந்தப் போரை இப்போதும் நாம் அப்படியே தொடங்கலாம் என்றார். மற்றவன் கூட்டத்தினர் “வாருங்கள்! மதீனாவிற்கு வெளியில் ஹர்ராவில் சென்று நாம் சண்டையிடுவோம். ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியவாறு ஹர்ராவை நோக்கிக் கிளம்பினர். இரு கூட்டத்தினரும் கோபத்தால் பொங்கி எழுந்தனர். அவர்களுக்குள் கடுமையான சண்டை நடக்க நெருங்கி விட்டது.
இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் தங்களுடன் இருந்த முஹாஜிர் தோழர்களை அழைத்துக் கொண்டு அன்சாரிகளிடம் விரைந்தார்கள். அவர்களை நோக்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அறியாமைக் கால வாதங்களை நீங்கள் செய்து கொள்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டினான் அதன் மூலம் உங்களைக் கண்ணியப்படுத்தினான் உங்களை விட்டு அறியாமைக்கால விஷயங்களை அகற்றி இருக்கின்றான் இறைநிராகரிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்து இருக்கின்றான் உள்ளங்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்தி இருக்கின்றான். இதற்கு பின்புமா நீங்கள் சண்டை செய்து கொள்கிறீர்கள்?” என்று அறிவுரை கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் உருக்கமான உரையைக் கேட்ட அம்மக்கள் தங்களின் இச்செயலை ஷைத்தானின் ஊசலாட்டமே எனவும் தங்கள் எதிரியின் சூழ்ச்சியுமே எனவும் புரிந்து கொண்டு அழுதனர். அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினர் ஒருவர் மற்றவரைக் கட்டித் தழுவினார். பின்பு நபி (ஸல்) அவர்களுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அல்லாஹ்வின் எதிரி ‘ஷாஸ் இப்னு கைஸ்” உடைய சூழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் இவ்வாறு பாதுகாத்தான். (இப்னு ஹிஷாம்) அர்ரஹீகுல் மக்தூம்
நாம் ஒன்றுபட வேண்டும்
அல்லாஹ்விற்காக ஒன்றுபடவேண்டும் ,மறுமைக்காக நாம் ஒன்றுபடவேண்டும்,   எதிரிகளில் சூழ்ச்சியை வெல்ல ஒன்றுபடவேண்டும் ,
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.8:46
நாம் ஒன்றுபட்டால் தான் நமக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் யாருமில்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.3:160
ஆக்கம் மௌலவி பஷீர் ஃபிர்தௌஸி

குரங்கு விசாவில்.. (நீதிக்கதை)

Story
ஓர் அரபுநாட்டு வனவிலங்குக் காட்சியகத்தில் பல்வகை விலங்குகள் இருந்தன. இல்லாத விலங்குகளில் சிங்கமும் ஒன்று.
காட்சியகத்துக்காக வெளிநாட்டிலிருந்து சிங்கம் ஒன்றை வாங்குவது என்று A.R.D. முடிவு செய்தது. சிங்கத்தை வாங்கும் பொறுப்பு, கொள்முதல்துறை நிர்வாகியான மிஸ்ரியிடம் விடப் பட்டது.
பல நாட்டிலிருந்தும் கொட்டேஷன் (Quotation) பெறப்பட்டு பரிசீலனை முடிந்த பின்னர், குறைந்த விலையில் கிடைப்பதால் இந்தியாவிலிருந்து ஒரு சிங்கம் வாங்குவதென்று முடிவு செய்து, சிங்கம் ஒன்று இந்தியாவிலிருந்து காட்சியகத்துக்கு வந்தும் சேர்ந்தது.
சிங்கத்துக்கு உணவளிக்கும் பணிக்கு ஓர் இந்தியர் அமர்த்தப் பட்டார்.
முதல்நாள், பத்து பொட்டலங்கள் வறுத்த வேர்க்கடலை சிங்கக் கூண்டுக்குள் வீசப் பட்டன.
‘ஆஹா, என்னை வாங்கியிருக்கும் முதலாளிக்குத்தான் என்மீது எவ்வளவு அக்கரை! நெடுந்தூரம் பயணம் செய்திருப்பதனால் முதல்நாள் நமக்கு மாமிசம் ஒத்துக் கொள்ளாது என்று நினைத்து வறுத்த கடலை போடச் சொல்லியிருக்கிறார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, கடலையைச் சீண்டாமல் சிங்கம் பட்டினி கிடந்தது.
இரண்டாவது நாளும் பத்து பொட்டலங்கள் வறுத்த வேர்க்கடலை சிங்கக் கூண்டுக்குள் வீசப் பட்டன.
இரையைத் தேடி விரைந்தோடிய சிங்கத்துக்கு வறுத்த வேர்க்கடலைப் பொட்டலங்களை மீண்டும் பார்த்து விட்டுக் கடும் சினம் ஏற்பட்டது. ஆனால், இரை போட்டவரிடம் திரும்பி வருவதற்கு முன்னர் அவர் போய் விட்டார்.
மூன்றாம் நாள் சிங்கத்துக்கு ‘இரை’ கொண்டு வந்த இந்தியரைப் போட விடாமல் சிங்கம் தடுத்து விட்டுக் கேட்டது:
“நான் யார் என்று உனக்குத் தெரியுமா?”
“என்ன இப்படிக் கேட்டு விட்டாய்? காட்டுக்கே ராஜாவான சிங்கமல்லவா நீ?”
“ம்… நல்லது. நான் என்ன சாப்பிடுவேன் என்று தெரியுமில்லையா?”
“ஆகா … ஏன் தெரியாமல்? ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் எல்லா விதமான மாமிசங்கள்”
“தெரிந்திருந்தும் ஏன் எனக்கு வறுத்த கடலைப் பொட்டலங்களை உணவாகப் போடுகிறாய்?”
“ஓ … அது வந்து … உன்னை எங்கள் முதலாளி இங்குக் கொண்டு வந்திருப்பது குரங்கு விசாவில்”
இதனால் பெறப்படும் நீதி என்னவெனில், எவ்வளவுதான் பசித்தாலும் சிங்கம் வறுத்த வேர்க்கடலையைத் தின்னாது.
நன்றி: மின்னஞ்சல் நண்பர்கள்
Source : http://www.islamkalvi.com

Monday, 30 October 2017

கடவுளின் பெயரால் (சிறுகதை)

Story
ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் எப்படி வந்தது செம்பருத்திச் செடி என்று தெரியவில்லை.
ஒரு ஆள் கத்தியில் செம்பருத்திப்பூவை தேய்த்து உலரவைப்பதும் பிறகு மீண்டும் தேய்ப்பதுமாக இருந்தான்.
ஆளரவம் இல்லாத இடமும் கத்தியும் பயத்தை உண்டாக்கியதால் ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்த ரோஜாகனி, இன்று தொலைந்தோம் என்று நினைத்தபடியே ஆடு மேய்க்கும் தன் ஏழ்மையை எண்ணி நொந்து கொண்டாள்.
அவனைக் கடந்துச் செல்லும் பொழுது பயத்தினால் ஏற்பட்ட நெஞ்சுத் துடிப்பு அச்சிறுமியின் ஆடைகளைத்தாண்டி தெரிந்தது.
கத்தியில் செம்பருத்தியை தேய்த்துக்கொண்டிருந்தவனுக்கு தன்னை கடந்து செல்லும் அச்சிறுமி தன் செய்கையை பார்த்தாளா இல்லையா என்ற குழப்பத்துடன் கத்தியையும் அவளையும் மாறி மாறி பார்த்தது, ரோஜாகனியை மேலும் கலவரப்படுத்தியது. தன்னைத்தான் துரத்த எத்தனிக்கிறானோ என்று நினைத்து ஓட ஆரம்பித்தாள் ரோஜாகனி.
-o0o-
ஒருநாள், எதிர்வீட்டு செல்லத்தாயோட தங்கச் சங்கிலி காணமல் போனபோது வெத்தலையில் மைதடவி பார்க்க, அதே ஆள்தான் வந்திருந்தான்.
“திருடினவங்க இப்படித்தான் இரத்தவாந்தியெடுத்து சாகப்போறானுங்கன்னு எலுமிச்சையை அறுக்கும்போது இரத்தம் கொட்டியதன் மகிமை அவளுக்குப் புரிந்தது. சங்கதியை செல்லத்தாயிடம் சொன்ன போது,
“அடப்போ ரோஜாகனி, பாய் ஜனங்கெல்லாம் இப்படித்தான், எதையும் நம்பமாட்டாக”, என்றாள்.
முத்தாச்சி வீட்டு மாடு காணாமல் போனபோது, உச்சிமலை மந்திரவாதியிடம் மைதடவி பார்க்க ரோஜாகனியும் உடன் சென்றிருந்தாள்.
“தெற்கால போய் வடமேற்கு தெசையில திரும்பி கிழக்கு பக்கமாக போற தெருவுல அந்த மாடு மேயுது, போய் புடிச்சுக்கன்னு” சொன்னான்.
அருகாமையில் இருக்கிற வடிகாலில் மழைச்சேற்றில் வழுக்கி விழுந்துக்கிடந்தது. ஊரெல்லாம் தேடியலைந்தவர்கள் அருகிலுள்ள இடங்களை பார்க்காமல் போனமைக்காக தங்களையே நொந்துக்கொண்டார்கள். வயசான மாடு என்பதால் குறுகலான வடிகாலும், சேறும் சகதியும் மீறி எழ முடியாமல் கிடந்தது.
-o0o-
ரோஜாகனியின் குடும்பம் கண்ணியமாக வாழ்ந்தவர்கள். கை நீட்டி வாழத்தெரியாது. கையிருப்பு நகைகளையெல்லாம் விற்று துபைக்கு அனுப்பப்பட்ட மூத்தவன் சுவற்றில் அடித்த பந்தாக திரும்ப வந்திருந்தான். பயணம் கிளம்பும்போது அம்மா சொல்லியிருந்தாள், வேலையோ அல்லது உடம்புக்கோ கஷ்டம் என்றால் “திரும்பி வந்துவிடு”ன்னு.
சொன்னபடியே வந்துவிட்டான்.
பயண வியாபாரத்தில் முதலீடு செய்யத்துணிந்த அவர்களின் குடும்பத்துக்கு அதைவிட குறைந்த முதலீட்டில் ஒரு ஆட்டோ ஓட்ட துணிவில்லை.
சில நேரத்தில் வயிற்றை நிரப்புவது ஆட்டுக்கு என்று பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி வந்த வடிச்ச கஞ்சியும், முருங்கைக் கீரையும்தான். மூன்று வீடுகளில் வீட்டுவேலை பார்க்கும் அம்மாவுக்கு மாதம் பிறந்தால்தான் சம்பளம் கிடைக்கும்.
-o0o-
ஆல் இந்தியா ரேடியோவில் மழையுடன் கூடிய இடியோ அல்லது மின்னலுடன் கூடிய இடியோ(?!) அடுத்த 24 மணிநேரத்தில் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்று எச்சரித்தது. நேரம் முற்பகல் பதினொன்று. மேக மூட்டம் பார்ப்பதற்கு அப்படித் தெரியவில்லை. அணைகட்டும் சுற்றிலும் உள்ள மலைகளும், “நான் இங்கிருக்கேன்! இங்கே! இங்கே!” என்று பாம்புகளைப்பார்த்து சொல்லும் தவளைகளும், சில்வண்டுகளின் ரீங்காரமும் நின்று ரசிக்க வேண்டும் போல் இருந்தது.
வயிறு காய்ந்தால் எதைத்தான் ரசிக்க முடியும்! காதல் காமம் இவற்றில் எதுவோ மிகைத்து வீட்டைவிட்டு ஓடி போன காதலர்கள்கூட கையிருப்பு காசு தீர்ந்து வயிறு காய ஆரம்பித்துவிட்டால் மற்றவை இரண்டாம் பட்சம்தான்.
அந்த பதினோரு வயது சிறுமி ரோஜாகனி ஏழ்மையின் காரணமாக வாடி வதங்கி இருந்தாள். காலையிலிருந்து அம்மாவின் தொண தொணப்பு தாங்க முடியவில்லை.
“ஆடு மேய்ச்சிட்டு வா!”, அம்மாவின் அன்பு கலந்த கட்டளை இது.
மூன்று நாட்களாக சரியான தீனி இல்லை. இலை தழைகளாவது போடவேண்டிய கட்டாயம். அணைக்கட்டின் ஓரத்தில் உள்ள தோட்டத்திலிருந்து கிழுவை தழைகளை ஒடித்து ஆட்டுக்கு தரலாம் என்ற எண்ணத்தில் கோணிப்பையை தற்பாதுகாப்புக்கு தலையில் போட்டுக்கொண்டு காலையில் வீட்டைவிட்டு புறப்பட்டவள்தான்.
-o0o-
“ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழிக்குஞ்சி வந்ததென்ன? யானைக்குஞ்சி சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சி வந்ததென்ன” என்று மேட்னி ஷோவுக்கு ரிக்கார்டு போட்டிருப்பது காற்றின் வழியே காதுகளுககு எட்டியது.
சூரியன் உச்சியைவிட்டு சாய்ந்திருந்த விஷயம் மேகமூட்ட திரையின் வழியே தெரிந்தது. பசி வயிற்றை கிள்ளுவதால் நீர்ச் சோறாவது சாப்பிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் புறப்பட்டாள். நரித்தொல்லைக்கு பயந்து குட்டியினைத் தனது தோளில் இட்டு கருப்பங்கொல்லை வழியாக ஆடுகளை ஓட்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.
கருப்பங்கொல்லையின் இறுதியிலுள்ள ஆலமரத்தை கடக்கும்போது “இந்தா பொண்ணு!” என்ற குரல்கேட்டது.
சத்தம் வந்த திசையை நோக்கினாள்.
யாருமில்லை.
ஆலமரத்தின் ஆக்கிரமிப்பு மிகப்பெரிய பரப்பளவில் இருந்தது. ஒரு அம்மாவாசையில் பக்கத்து டவுனில் இரண்டாவது ஷோ பார்த்துவிட்டு சைக்கிளில் திரும்பும்போது தன் தலையில் ஏதோ இடித்துவிட்டதால் தீ கொழுத்தி பார்க்கும்போது “ஒருத்தன் தூக்கு மாட்டி தொங்கிக்கிட்ருக்கான் புள்ள” என்று பக்கத்து வீட்டு மாமா சொன்னது ஏனோ இந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்து தொல்லை தந்தது.
காற்று மற்றும் குருவிகளின் சத்தம் மட்டுமே மேலோங்கி இருந்த ஆலமரத்தின் அருகாமையை கடக்கும்போது இரண்டாவது கிளையில் நாலு காலில் நகர்ந்துக்கொண்டிருந்த உருவத்தைப் பார்த்து நெஞ்சு பக்-கென்றது ரோஜாகனிக்கு.
“ச்சே குரங்கு” என்று அதிர்ந்தவளுக்கு ஒரு “குளோசப் பேஸ்ட்” விளம்பர சிரிப்பை உதிர்த்துவிட்டு “எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன”ன்னு நடையைக் கட்டியது குரங்கு.
ஏதோ மனப்பிரமைப் போல என்று தன்னுள் நினைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“பக்தையே!, நான் தான் கடவுள் பேசறேன், கழுத்துல என்ன போட்ருக்கே?” என்றது குரல்.
ஆலமரத்தின் முடிவில் வாய்க்கால் கரையோரத்தில் மிகச்செழிப்பாக காட்டாம்ளி காடு. ஒரு குச்சியை தற்பாதுகாப்புக்கு எடுத்துக் கொண்டாள். ரப்பர் போல வளையும் பச்சை குச்சி என்பதால் தரையில் ஓடும் நல்ல பாம்பைக்கூட தைரியமாக விளாசலாம்.
“நீ கடவுளுங்கிறே எங்கழுத்துல என்னன்னு உனக்குத் தெரியாதா?” என்று
பயம் கலந்த படபடப்புடன் ரோஜாகனியிடமிருந்து பதில் வந்தது.
கடவுளின் பெயரால் காதலை சொல்வதற்காக எத்தனை தமிழ் சினிமாக்களில் கதாநாயகி, கதாநாயகன் ஆலமரத்தின் பின் நின்று பேசியிருக்கிறார்கள்.
“ஆ..அஹ்..ஹாாா.. எங்களுக்குன்னு ஒரு முறை இருக்கு. அப்படித்தான் பேசுவோம். வளவளன்னு பேசிக்கிட்டிருக்காம ஆட்டுக்குட்டியை எங்கிட்ட கொடுத்துட்டு திரும்பி பார்க்காம ஓடிடு! இல்லாட்டி அத கழுதையா மாத்திடுவேன்” என்றது குரல்.
“ஆட்டுக்குட்டியை கழுதையாக்க கடவுள் நீ கஷ்டப்படனுமா? பேசாம ரெண்டா மாத்திடு. உனக்கொண்ணு எனக்கொண்ணு எடுத்துக்கிடுவோம்”. என்றாள் ரோஜாகனி.
சற்று தூரம்தான் சென்றிருப்பாள். மரத்திலிருந்து “தொப்” என்ற சத்தத்துடன் ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டவுடன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தவலுக்கு என்ன நடந்தது என்று புரிந்துப் போனது.
கத்தியில் செம்பருத்தியை தேய்த்த அதே ஆசாமி மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்ததான். அவனின் கத்தி இரண்டு அடிக்கு முன்னால் அவனைவிட்டு பிரிந்து கிடந்தது.
நிலைதடுமாறி விழுந்ததன் காரணமாக காதுகளிலிருந்து இரத்தம் இப்போதுதான் வழிய ஆரம்பித்திருந்தது. கத்தியில் தேய்க்கப்பட்ட உலர்ந்த செம்பருத்தியில் சிட்ரஸ் (எலுமிச்சை சாறு) கலந்ததால் வரும் இரத்தம் அல்ல. நிஜமானது.
Source : http://www.islamkalvi.com

Sunday, 29 October 2017

நினைவலைகள் (சிறுகதை)

Story
பஷீர் அஹமது உள்ளே நுழையும் போது… “மிலிட்டரி லைன் ஜும்மா பள்ளிவாசல்” என்று பெரிய பலகையில் எழுதியிருந்தது. பள்ளிவாசலுக்கும் பஷீர் அஹமதுக்கும் உள்ள தொடர்பு மிக்க ஆழமானது. பள்ளியைச் சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். பள்ளிவாசலின் உள்ளே நுழைந்ததும் இடது கோடியில் “சிந்தா மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா” என்று பச்சை நிறப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. மண் வாசனையுடன் கூடிய ரம்யமான குளிர்ந்த காற்று. இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.
கைக்கடிகாரத்தைத் துடைத்து மணியைப் பார்த்தார் பஷீர். நேரம் 2:32 என காட்டியது. குளிர் காற்றும் மண்வாசனையும் பிற்பகலில் எதிர்பார்க்காததுதான். அண்ணார்ந்து வானம் பார்த்தார். அடுக்கடுக்காய் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. சற்று வலப்புறம் நகர்ந்து பள்ளியின் எல்லைச் சுவரை ஒட்டி நடந்து பின்புறத்தை அடைந்தார். அடர்ந்த கிளைகள் விட்ட புளிய மரம் அது.
“ஒரு காலத்துல முத்து வாப்பா ஹாஜியார் நட்டு வச்ச மரம் இன்னைக்கு அவரு பேரு சொல்லுது” என்று குஞ்சுபாய் மோதினார் அடிக்கடி கூறும் வாசகம் ஞாபகத்திற்கு வந்தது. அன்று அவர் விதைத்த விருட்சம் துளிர்விட்டு தளிராகி தழைத்து கிளை படர்ந்த பெருமரமாகியிருந்தது.
பஷீர் அஹமது தன் பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்த்தார்.
வயது இருபத்தியாறைக் கடந்திருந்த நேரம். தங்கை ஹலீமாவின் குரல், “பஷீரண்ணே…! வாப்பா கூப்புடுதாங்கோ”
உற்ற நண்பன் குத்தூஸுடன் இந்த புளிய மரத்தடியில் இருக்கும் போதுதான் அழைப்பு வந்தது. சங்கரன் கோவில் ஏஜண்ட் வீட்டிற்கு வந்திருந்தார்.
“ஜெளபரு பாய்! இந்தக் காலத்துல சவூதி விசா கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். 10 விசா மொத்தமா கெடச்சிருக்கு, மொதல்ல பத்தாயிரம் தாங்கோ. பையன் போய் நல்லாயிருக்கேன்னு கடுதாசி வந்தப்புறம் மிச்ச பணம் கொடுத்தா போதும். தொறைமுகத்துல வேலை. நம்ம புள்ளையோ நெறையே பேரு இருக்குதுவோ.”
ஏஜெண்டு வாப்பாவுடன் பேசி தொகை முடிவாயிற்று.
இரண்டு மாதம் கழித்து பம்பாயில் மெடிக்கல் என்று தபால் வந்தது. மஞ்சள் பையுடன் புறப்பட்ட போதுதான், உம்மா பாத்துமாவின் விசும்பல் சப்தம் கேட்டது. ஏங் கண்ணூ…! என்று பாசத்தை அடக்க முடியாமல் அழுதாள். தாய் ஏன் அழுகிறாள் என்று அறியாமல் ஆறு வயது ஹலீமாவும் அழத்தொடங்கினாள்.
“அழாதீயோ!… நம்ம மொம்மதலி மவன் மூஸா கூட அங்கேதான் இருக்கான்.” சாச்சாவின் ஆறுதல் வார்த்தைகளால் அழுகைகள் தற்காலிகமாக அடக்கப்பட்டன.
“அலாவுதீன் மாமா! தர்ஹாவுக்கு எண்ணைய் ஊற்ற மறந்திறாதீங்கோ!”
சிந்தா மதார்ஷா ஒலியுல்லாவின் சன்னதியில் எண்ணைய் ஊற்றி ஃபாத்திஹா ஓதி, சர்க்கரை பரிமாறிய பின், சம்பாதிக்க வெளிநாடு புறப்பட்டான் பஷீர் அஹமது.
சவூதி வாழ்க்கை தொடங்கியது. காலங்கள் உருண்டோடின. வேலை, ஓவர் டைம், கேன்டீன் சாப்பாடு, தூக்கம், புதிய இடம், புதிய நண்பர்கள் அனைத்தும் பழகிப் போனது. அரபியில் ஒரிரு வார்த்தைகளும் தெரிந்திருந்தன.
4 வருடம் கழிந்து முதல் வெக்கேஷனில் கல்யாணம். 41-ஏ, பிச்சுவனத் தெருவில் வசிக்கும் மு.நா. ஜஹுபர் சாதிக் அவர்களின் குமாரன் தீன் குலச்செல்வன் ஜெ. பஷீர் அஹமதுவிற்கும் 11-பி, பெரிய பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் பக்கீர் மைதீன் அவர்களின் குமாரத்தி தீன் குலச்செல்வி மஹமூதா பேகத்திற்கும் என்று நிக்காஹ் வாசிக்கப்பட்டு முடிந்தது.
ஒரு பெட்டி, ஒரு தோல்பை மற்றும் நிறைய சோகங்களைச் சுமந்தவனாக சவூதி திரும்பினான் பஷீர் அஹமது. 8 மாதம் கழிந்தது. மகள் பிறந்தசெய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைந்தான். மகிழ்ச்சிகள் நிரந்தரமாக இருக்கவில்லை.
“தந்தையின் உடல்நலம் சரியில்லை, உடன் பணம் அனுப்பிவை”.
கடிதவரிகளைப் பார்த்துத் துவண்டு போனான் பஷீர் அஹமது.
ரூபாய் 10 ஆயிரத்திற்கான வங்கிக் காசோலை அனுப்பிவைக்கப்பட்டது. 6 மாதத்தில் கடன்களை எல்லாம் அடைத்து பெருமூச்சு விட்ட பஷீருக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி.
“வாப்பாவுக்கு ரொண்டாந்தறமா மாரடைப்பு வந்திருச்சு. டாக்டர் சொல்லிட்டார் இனி வெளியே நடக்கக்கூடாது. எந்த வேலைகளும் செய்யக் கூடாது”, என்று தங்கை ஹலீமாவின் கையெழுத்தில் தாயின் சோக வரிகள்.
26 வயதில் சவூதியில் கால் பதித்தவனுக்கு பெற்றோரைப் பிறிந்த ஏக்கம், மனைவியின் பிரிவு. குழந்தையைக் காண ஆவல் என்று பல கவலைகள் சூழ்ந்து இருந்தன.
ஆனாலும் குடும்பச் சுமையின் பெரிய பாரம் தன் தோள் மீது சுமத்தப்படுவதை அன்றுதான் உணர்ந்தான் பஷீர்! தளர்ந்த தந்தையின் குடும்பச் சுமைகள் வளர்ந்த மகன் மீது சுமத்தப்பட்டது. பெற்றோரின் பாசவரிகள். மனைவியின் ஏக்கம். மகள் நடக்கத் துவங்கிய செய்தி என்று பத்து வருடங்கள் உருண்டோடின.
தங்கையின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணச் செலவுகள் பட்டியலிடப்பட்டன. நஷ்டத்தில் ஏலச்சீட்டெடுத்து 50,000 ரூபாய் அனுப்பிய பஷீருக்கு பிரிவுகளில் சருகாகும் சவூதி வாழ்கை போதும், ஒருவழிப் பயணமாய் தாயகம் திரும்பலாம் என்ற எண்ணக் கனவுகள் கடன் சுமைகளால் மீண்டும் ஒரு முறை நகர்த்தப்பட்டது. கூடவே தந்தையின் மரணம். அடுத்த இரு மாதங்களின் தாயின் மரணம். தங்கையின் பிரசவச் செலவு என்று செலவுகள் சங்கிலித் தொடராய்த் தொடர்ந்தன. பெற்றோரின் பிரிவில் துளிர்ந்த கண்ணீர்த் துளிகள் இருட்டுக்குள் துடைத்துக் கொள்ளப்பட்டன.
சோகத்தில் எழுந்த விசும்பல் சப்தம் ஏ.சியின் சப்தத்தோடு அமிழ்ந்து போனது. வேலையிலிருக்கும் போது மூர்ச்சையாகி நண்பர்கள் சகிதம் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அந்தச் சுபச் செய்தி வந்தது.
“மகள் பூப்பெய்து விட்டாள்”.
தொடர்ந்து வந்த மனைவியின் கடிதங்களில் பாசங்கள் மற்றும் விசாரிப்பு வார்த்தைகளை விட மகளைக் கரை சேர்க்க வேண்டும் என்ற ஏக்கங்களே அதிகமாக இருந்தது.
“நல்ல பையனாம், ரியாத்தில் வேலையாம், பெரிய இடமாம், வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுறாங்க…” என்று எண்ணங்கள் பரிமாறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 1-ல் நிக்காஹ் நடந்தது.
அவ்வப் போது கேம்ப்களில் நடைபெறும் தமிழ் பயான்களில் கலந்து கொள்வது பஷீர் பாயின் வழக்கம்.
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவனுக்கு யாதொரு இணை கிடையாது, தர்ஹா வழிபாடு கூடாது, இணைவைத்தல் இஸ்லாத்தில் பெரும் பாவம்” ஆகிய பயான் வரிகள் பஷீர் அஹமதின் சிந்தனையைத் தூண்டின. தர்ஹா வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த பஷீர் பாயிக்கு குற்ற உணர்வு மேலிட்டது.
தர்ஹாவில் ஃபாத்திஹா ஓதியது, எண்ணை ஊற்றியது, மகள் பிறந்ததற்கு 101 ரூபாய் காணிக்கை செலுத்தியது. என்று தான் செய்த தவறுகளை எண்ணி இறைவனிடம் அழுது பாவமன்னிப்பு கேட்டார். ஐவேளை தொழுகையை குறித்த நேரத்தில் தொழலானார். கலாச்சார மையத்தில் நடக்கும் பயான் வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்லலானார்.
தன் தங்கைக்கும், மனைவிக்கும் இஸ்லாமிய பயான் சிடிக்கள் தவறாமல் அனுப்பிவைத்தார். மருமகனுக்கு நல்ல சம்பளம், ஊரில் தற்போதுதான் புது வீடு கட்டத்தொடங்கியுள்ளார். மருமகன் தவ்ஹீத் பற்றி அறிந்திருப்பதால் மகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.
நமக்கு ஏற்படும் கவலைகளை எண்ணி நொந்து கொள்வதைவிட இறைவன் நாடியது நடக்கும் என்று பொருமை காத்தார் பஷீர். மனம் சற்று நிம்மதியடைந்தது.
வயது 60-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. துக்கங்களை மட்டுமே சுவாசித்து 35 வருடங்களை கடந்து நிற்கையில், கம்பெனி அறிவிப்புப்பலகையில், நஷ்டமடைந்து விட்டதனால் கம்பெனி விரைவில் மூடப்படும், 600 பணியாளர்கள் தாயகம் அனுப்பப்படுவார்கள் என்ற செய்தி காணப்பட்டது. உடல் நிலை தளர்வடைந்து முதுமையின் நுழைவாயிலில் நின்ற பஷீருக்கு ஓய்வின் அவசியத்தை அப்பலகை உயர்த்தியது.
அவ்வப்போது மகளும், மருமகனும், மனைவியும் முடித்துவிட்டு வந்துவிடுங்கள் என்ற அழைப்புக்கெல்லாம் மெளனத்தையே பதிலாய் தந்த பஷீர், காலத்தின் கட்டாயம், இது இறைவன் ஏற்பாடு என்று எண்ணி முதல் அணியிலேயே தாயகம் திரும்பினார்.
காற்றில் புளியமரம் வேகமாய் அசைந்தது. சிறுவயதில் தனக்கு சினேகிதமான அந்த புளிய மரத்தைத் தொட்டவாரே பள்ளிவாசலில் தான் செய்த குறும்புகளை எண்ணி மெல்ல புன்னகைத்தார் பஷீர்.
“தன் உற்ற நண்பன் குத்தூஸு என்ன ஆனான். 15 வருடங்களுக்கு முன் ஒரு வெக்கேஷனில் அவன் துபாயிலிருப்பதாகச் செய்தி” நெற்றி சுருங்க யோசனையில் ஆழ்ந்தார்.
குத்தூஸு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 6 மாத படுக்கைக்குப்பின் மரணம் அடைந்த செய்தியை பஷீருக்கு யாரும் சொல்லவில்லை.15 வருடங்களில் ஊர் வெகுவாக மாறியிருந்தது. பழைய நண்பர்கள் யாருமே தென்படவில்லை. தர்ஹாவின் கதவுகள் மூடப்பட்டு பாழடைந்து கிடந்தது.
அப்போது பஷீருக்கு இருந்த ஒரே சினேகிதம் முத்து வாப்பா ஹாஜியார் நட்ட புளியமரம் மட்டும்தான். சிறு வயதில் தான் அமர்ந்து விளையாடிய ஹவூது படிக்கட்டை காண ஆவல் கொண்டு மெல்ல நகர்ந்து படிக்கட்டில் அமர்ந்தார். மழைத்துளிகள் ஒவ்வொன்றாக ஹவூது தண்ணீரில் விழ அதில் ஏற்பட்ட வட்ட அலைகளை ரசித்துக் கொண்டிருந்த நேரம்,
“தாத்தா… உம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, மழ வர்ரமாதிரி இருக்காம், இந்தாங்க குடை” என்று தன் பேத்தி சுமையா கூறக் கேட்டு எழுந்தார்.
தாத்தாவும், பேத்தியும் குடையுடன் நடந்தனர். புளிய மரம் மட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தது.
story by இப்னு அஹமத்
Source : http://www.islamkalvi.com

Saturday, 28 October 2017

சுமைதாங்கி (சிறுகதை)

Story
ஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.
சுமார் 22 முதியவர்களைக் கொண்ட அந்த முதியோர் இல்லத்தில் அலுவலகத்தை தாண்டியதும் இடதும் வலதுமாக சுமார் 10 அறைகள். இடது வரிசையில் மூன்றாவது அறை பாத்தும்மாவுடையது.
“மேலூருக்கு தந்தி குடுத்துருக்கு! இன்னும் யாரையும் வரக்கானோம்!… ”
தாழ்வாரத் தின்ணையில் இரண்டு முதியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அமைதியான இரவுப் பொழுதில் குளிர் காற்றின் வேகத்தில் சவுக்கு மரத்தின் சப்தம் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. கூடவே உருக்குழைந்து தளர்ந்த பார்வையும், உலர்ந்த சருகான உடலுமாய் கிடந்த பாத்தும்மாவின் முனகல் சப்தமும் தெளிவாக கேட்டது.
எனக்கென்று யாருமில்லை, நான் நடந்து வந்த பாதைகள் நந்தவனமுமில்லை. என் பாதங்களை மொய்த்துக் கிடந்ததெல்லாம் நெருஞ்சிமுள் கூட்டங்கள்தான்!. அன்புக்கு ஏங்கி தடுமாரிய எனது பாதங்களைத் தொடர்ந்து தாக்கியதெல்லாம், உடைந்து சிதறிய கண்ணாடித் துகள்கள்தான்! குடும்பச்சுமை தூக்கி தள்ளாடிக் கொண்டிருக்கையில் ஏனோ மறந்து விட்டேன் நான் சுமைதாங்கி என்பதை. முதுமையின் தாக்குதலில் சிறகொடிந்த பறவையாய் வீழ்ந்து கிடக்கின்றேன் இந்த முதியோர் இல்லத்தில். மங்கிய பார்வையில், எனக்கு மிக அருகாமையிலிருக்கும் இந்த மருந்து பாட்டில் கூட மங்கிய பெரிய பிம்பமாய் என்னை பயமுறுத்துகின்றதே! என் கண்களின் பார்வைக்கென்று இங்கு ஒன்றுமில்லை.பிய்ந்த கூரையும், வெடித்த சுவர்களும், ஜன்னல் வழியாக எப்போதாவது கரையும் அந்த வீதிக் காகத்தையும் தவிர. இப்பொழுதெல்லாம் என் உதடுகள் என் கட்டுப்பாட்டையும் மீறி ஏனோ வார்த்தைகளை உதிர்த்துவிடுகின்றது.
செய்தாலி!. மக்கா.. செய்தாலி!…
நான் புலம்புகிறேனா?!… ஆ!.. இது என் பேரனின் பெயரல்லவா?!..
தூக்கி வளர்த்த என் புதல்வன் என்னை பாரமாய் நினைத்தபோதும் வந்த மருமகள் என்னை வார்த்தையால் குத்தியபோதும்… தென்றலாய் தழுவிக் கொண்டவனல்லவா என் செய்தாலி. என் முதுமை அவர்களுக்கு சுமையாகி கழட்டிய செருப்பாய் என்னைத் திண்ணையில் வீழ்த்துகையில் என்னுடன் ஒட்டி உறவு பாராட்டியவனல்லவா என் செய்தாலி!
மிஞ்சிய பழையகஞ்சியை மிளகாய் தொட்டு என்னோடு அமர்ந்து உண்டவன். என்னைப் போன்றே மிளகாயைக் கடித்து, உரைத்துத் துளிர்த்த கண்ணீர் துளியோடு என்னைப் பார்த்து சிரித்தவனல்லவா என் செய்தாலி!
என் உதடுகள் இந்த மரணத்தின் நுழைவு வாயிலில் காலைப் பதித்திருக்கும் இந்த வேளையில், என் செய்தாலியின் பெயரை என் உதடுகள் உதிர்ப்பதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. பெற்ற மகனும் புகுந்த மருமகளும் என்னை இரக்கமின்றி நடத்திய போது இந்த கன்றுக்கு மட்டும் ஏன் என்மீது பாசம்!…
எனது தலையணையின் நனைந்த பகுதியின் குளிர்ச்சியை என் கன்னங்கள் உணர்கின்றன. என்ன இது?! இப்போழுதெல்லாம் அடிக்கடி அழுதுவிடுகின்றேன்!. எனது சிந்தனையில் சின்ன இடையூறு. சிலஜோடி செருப்புகளின் சப்தம் கேட்கிறதே!… ஏதாவது புதிய சேர்க்கையாக இருக்கும் அல்லது பக்கத்து அறை தங்கம்மாவைப் பார்க்க யாராவது சொந்தங்கள் வந்திருப்பார்கள்.
இந்த முதியோர் இல்லத்தில் கொஞ்சம் வசதியானவள் இந்த தங்கம்மாதான். அவள் மகன் அமெரிக்காவில் இருக்கிறானாம். இங்கு மகன் வந்து பார்க்கும் ஓரே தாய் இந்த தங்கம்மாதான். நான் ஏன் தங்கம்மாவைப் போல் இல்லை! என் மகன் ஏன்?…..
எப்படி எல்லாம் வளர்த்தேன் அவனை. அவன் தடுக்கி விழும்போதெல்லாம் என் நெஞ்சம் பதரியதே!…. தந்தையுடன் சின்ன மனஸ்தாபத்தில் ஓடிப்போனானே!…. அப்போது இந்த செருப்பில்லாத கால்கள் தேடாத இடமில்லை. கல்யாணம் முடித்தால் திருந்திவிடுவான் என்ற சுற்றத்தினரின் அறிவுரையோடுதானே கல்யாணம் முடித்தோம்… திருந்துவான் என்ற ஏக்கங்கள் களைந்திடும் முன்பே திரும்பி விட்டானே!
பத்து மாதங்கள் சுமந்து நான் பெற்ற என் புதல்வன் வார்த்தைகளால் வீசிய அமிலத் தாக்குதலைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!
என் அன்புக் கணவனின் பிரிவுக்குப்பின், சிந்தனையில் தொக்கி நின்ற கேள்விகளெல்லாம் எதிர்காலம் குறித்துத்தான்!.
அச்சம் கவ்விக்கொண்ட என் மனதுக்குள். நான் பெற்ற மகன் இருக்கின்றானே என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன், என்றாலும் துரத்திய சோகங்களுக்கு முன்னால் தலைத் தெறிக்க நான் ஒடிய சில வருடங்கள் இருக்கின்றதே!…. அந்தச் சோகங்களைச் சொல்வதற்கு என்னுள் போதிய கண்ணீர் துளிகள் இருக்கின்றது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
எ… என்ன சப்தம்? ஆம்! என் கைகளுக்கு அருகிலிருந்த மருந்து பாட்டில் கீழே விழுந்திருக்க வேண்டும். என் இதயத்தைப் போன்று அதில் விரிசல் ஏற்பட்டிருக்கும் அல்லது உடைந்து சிதறியிருக்க வேண்டும்.
இந்த அறையை சுத்தம் செய்யும் பெண் பார்த்தால் திட்டுவாளே! போனவாரம் கூட கெழடு… இங்க வந்து என் உசுற வாங்குது… செத்து தொலைய மாட்டேங்குதே!.. என்று திட்டினாளே! இதற்கு முன்பு வேலை செய்த பெண்ணைப்போல இவள் நல்ல குணம் இல்லை. என் செய்தாலி இருந்தால் ஏதாவது உதவி செய்திருப்பான். எங்கே அவன்? எப்படி இருக்கின்றான்?
8 வருடங்கள் உருண்டோடி விட்டதே! அன்று பார்த்த அந்த முகம் சற்று மாறிஇருக்கலாம். எண்ணங்கள் சுழன்று எங்கெங்கோ சென்றாலும். அன்று அந்த அறையை சுத்தம் செய்யும் பெண் கூறிய வார்த்தை என் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கெழடு! செத்து தொலையமாட்டேங்குதே!
ஆம்! நான் பலவீனத்தை உணர்கின்றேன்! அந்த பாழாய்ப்போன மருத்துவன் கடைசியாய் பார்க்கவந்தபோது இருமுவதற்கு கூட வரைமுறை வகுத்துவிட்டான். இது எனது மரணத்தின் மிக நெருங்கிய வேளையாக இருக்கும் என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் என் உதிரத்தை பாலாய் ஊற்றி வளர்த்தேனே! என் மகனின் மனது ஏன் இந்த மதில் சுவரைவிட கடுமையாகிவிட்டது? இந்த இறுதி வேளையில் என்னை அரவணைத்துக்கொள்ள யாருமே இல்லையே!..
ச்சே!… ஏன்? நான் தேவையில்லாமல் புலம்புகின்றேன்… என்மகன் வருவான்! என்மருமகள் வருவாள்! என் பேரன் செய்தாலி வருவான்!… நினைவுகளின் தாக்கம் மெல்லக் குறைந்து கண் அயர்ந்து விட்டேன்!.
அதிகாலையில் முதியோர் இல்லத்தின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தூக்கின் அருகில் கூடியிருந்த சிறு கூட்டத்தில் பேசப்படும் அந்த வார்த்தை மட்டும் அந்த அமைதியான சூழலில் தெளிவாய் கேட்டது.
“மேலூரிலிருந்து மகன் இன்னும் வரலியாமே!”.
story by இப்னு அஹமது
Source : http://www.islamkalvi.com

Friday, 27 October 2017

அவர்கள் உங்கள் சகோதரர்கள்! (நீதிக்கதை)

Story
நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.
அங்கு ஒரு சோதனை! உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட 6வயது முதல் 14வயது வரை உள்ள சிறுவர்கள் கூட்டம் வாசலை அடைத்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். “சப்தம் போடாமல் அமைதியா மெதுவா வரிசையா போகனும்” என்று குரல் கொடுத்தபடியே அவர்கள் பின்னே வந்த அப்பாஸ் தாத்தா, அழுத படியே அரைத் தூக்கத்தில் நடந்து வரும் 7வயது சிறுவனை அரவணைத்து, “அழக் கூடாது. பாத்து நட, கீழே விழந்துடுவ, உன்னை அல்லாஹ் பார்த்து கொள்வான். நான் இருக் கேன்ல” என ஆறுதல் கூறிய படி அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அச்சிறுவர்கள் வெளியேறும் வரை கதவோரமாக காத்திருந்த அஹ்மது பாய், “என்ன அண்ணே! தம்பி புதுசா” என்று விசாரித்தார். “ஆம! தம்பி வந்து ரெண்டு நாளாச்சு. நம்மள மாதிரித்தான் பாவம்” என்று அப்பாஸ் தாத்தா சோகமாக சொன்ன போது அஹ்மது பாய் கடந்து போன கசப்பான தனது வாழ்க்கையின் பழைய பக்கங்களை புரட்ட ஆரம்பித்து விட்டார்.
ஐம்பது வயதுகளை கடந்து விட்டாலும் அவர் ஐந்து வயதில் பட்ட அனாதைக் காயத்தின் வேதனை உள்ளத்திலிருந்து இன்னும் மறையவில்லை. சோகங்கள், கொடுமைகள், அரவணைப்புகள் என தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் எதையும் அவரால் மறக்கவே முடியவில்லை.
oOo
அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் தெருவில் என் வயதொத்த சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். என் சிறிய தந்தை வருவது கண்டு மகிழ்ச்சி அடைந்த நான், அவரது வருகையில் மறைந்திருக்கும் சோகத்தை அறியாது அவருடன் வீட்டுக்கு புறப்பட்டேன்.
வீட்டு முன்னே கூட்டம். எல்லோரின் முகத்திலும் ஒரு வித சோகம்; மௌனம். பலர் புலம்பி அழும் காட்சி. ஒரு மணி நேர இடைவெளியில் திடீரென முளைத்த சாமியானா பந்தல். இவற்றைப் பார்த்து ஒன்றும் புரியாமலிருந்த நான், என் தாயாரை தேடி அலைந்த போது, வெள்ளைத் துணியால் போர்த்தப் பட்டு கட்டிலில் கிடத்தப் பட்டிருந்த என் தந்தைக்கு அருகில் அலங்கோலமாக அமர்ந்து உரக்க குரல் எழுப்பி அழுவதைப் பார்த்து, அவர் அருகில் சென்ற போது, “நம்மை அனாதையாக விட்டுட்டு போயிட்டாருப்பா மனுசன்” என என்னைக் கட்டிப் பிடித்து மீண்டும் அழ ஆரம்பித்து விட்ட என் தாயாரோடு சேர்ந்து, “அம்மா! அம்மா!” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். சிறிது நேரத்தில் என் தந்தையை நல்லடக்கம் செய்து விட்டு அனைவரும் திரும்பி விட்டார்கள்.
அழுகையும் கண்ணீருமாய் எனது குடும்பமே அவதிப்பட்டு கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் எல்லா உறவினர்களும் போய் விட்டார்கள். நான், என் தாயார், அப்பாஸ் என மூவர் மட்டுமே தனியாக விடப் பட்டோம்.
ஒரு மாத காலம் ஓடியது. என் தந்தையின் மரணத்திற்குப் பின் என் தாய் சிரித்துப் பேசியதை ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. எப்போதும் சோகமும் கவலையும் துக்கமும் தோய்ந்த முகம். திடீரென என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓ” என அழுவது. இவையே அவர்களின் அன்றாட பணியாக மாறி விட்டது. சரியான உணவு உட்கொள்வதில்லை. பார்க்க அழகாய் இருந்த என் தாய், ஒரு மாதத்திற்குள் உணவின்றி மெலிந்து நலிந்து அலங்கோலமாக மாறி விட்டார்கள்.
ஒரு நாள் மயக்கமுற்று கீழே விழுந்தே விட்டார்கள். மருத்துவர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே என் தந்தை போன இடத்திற்கு என் தாயாரும் சென்று விட்டார்கள்.
oOo
தாயாரும் மரணம் அடைந்து விட்ட பின் எங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டது. அடுத்து எங்கே யாரிடம் போய் தங்குவது என யோசிக்கத் தெரியாத வயதிலும் யோசனை செய்யத் தொடங்கி விட்டேன். சில சம்பிரதாயங்களுக்குப் பின் என் சிறிய தந்தைதான் எங்களை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த போது என் தந்தையின் நினைவு தாயின் பரிவு இவற்றை நினைத்து நினைத்து நானும் எனது அண்ணன் அப்பாஸும் அழுது கொண்டிருப்போம். என் சிறிய தந்தை தொழில் செய்ய காலையில் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். எங்களை அரவணைத்து ஆறுதல் கூறுவதற்கென்று யாரும் இல்லை. சிறிய தந்தையின் மனைவியோ ஒரு கொடூரமானவள்; பெண் உருவில் தோன்றிய பேய்; அழும் எங்களை நோக்கி ஆறுதலாகப் பேசமாட்டார்; ஏன் ஓயாமல் அழறிங்க என கண்டித்து எரிச்சலாகப் பேசி கையை ஓங்கி அடிக்க வருவார்.
அன்று மதியம் நேரம். காலை உணவும் சரியாக கிடைக்க வில்லை. கடுமையான பசி. வீட்டில் எல்லோரும் சாப்பிட்டப் பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். பசி தாங்க முடியாமல் என் சிறிய தந்தையின் மகன் அம்மு குட்டியின் தட்டிலிருந்து சிறிது உணவு எடுத்து சாப்பிட்டு விட்டேன். அவனோ அலற ஆரம்பித்து விட்டான். சப்தம் கேட்டு ஓடி வந்த அவனது தாய் நடந்ததை அறிந்து, ஓங்கி என் கன்னத்தில் அறைந்து, ‘முளைக்கள மூணு எல விடல, அதுக்குள்ள திருட்டுத் தனத்தப் பாரு, இப்பவே புள்ள சாப்பாட்ல கை வச்சுட்டான், நாள எதுல கைய வப்பாங்களோ தெரியள” என வினாடியில் பொரிந்து தள்ளி விட்டார்.
அண்ணன் அப்பாஸுக்கு என்னைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது. அவருக்கும் ரெண்டு அடி. திட்டு. “தம்பி பாசம் பொத்து கிட்டு வந்துருச்சு” என்று கூறியபடி, “இவங்கள எங்கயாவது அனாதப் பசங்க உள்ள இடத்திலே சேர்த்து விட்ருங்க! நமக்கு தொல்ல வேண்டாம் என்று ஆயிரம் தடவ சொன்னேன். கேட்டாரா இந்த பாவி மனுசன்” என வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டு எங்கள் இருவரையும் வெளியே தள்ளி, கதவை ஓங்கி அறைந்து சாத்தி விட்டு உள்ளே போய்விட்டார் அந்தக் கொடுமைக்காரப் பெண்.
கன்னத்தில் அடித்தது வலிக்க வில்லை. ஆனால், வார்த்தைகளால் உள்ளத்தில் அடித்தது ரணமாக வலியெடுக்க ஆரம்பித்து விட்டது.
என் சிறிய தந்தை வரும் வரை வெளியிலேயே குளிரில் நடுங்கியபடியே துக்கத்தோடு அமர்ந்திருந்தோம்.
நினைத்துப் பார்க்கிறேன். என் அன்புத் தாய், எனக்கு பசிக்காத நேரத்திலும் கூட என்னை சாப்பிட வைக்க எடுத்தக் கொண்ட முயற்சிகள் மறக்க முடியாதது. நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடிவா! என பாட்டு பாடி, விளையாட்டுக் காட்டி, சீக்கிரம் நீ பெரிய ஆம்பளையா வரனும்ள நல்ல பிள்ளையா இந்த ஒரு வா சோறு மட்டும் வாங்கிக்க! என ஆசை வார்த்தை கூறி, அண்ணன பாரு அண்ணனுக்கு கொடுக்கப் போறேன் என்று வேடிக்கை காட்டி சோறு ஊட்டியதை நினைத்து குளிரையும் மறந்து என் சிந்தனை சிறகடித்துப் பறந்தது.
என் சிறிய தந்தை வந்தும் வராதது மாய் பதறிப் போய் ஏன்? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன்? வெளியிலே குளிரிலே இருக்கிங்க? என்று கேட்டபடியே எங்களை உள்ளே அழைத்துச் சென்று நடந்ததை விசாரித்தறிந்து, தன் மனைவியை கண்டித்து விட்டு, அவர்கள் அனாதைகள், அவர்களை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என்று கூறி,
“அனாதைகளை அடக்கு முறை செய்யாதீர்கள்” (93:9)
என்ற இறைவசனத்தையும்,
“நபி (ஸல்) அவர்கள் ‘நானும் அனாதைகளின் காப்பாளரும் சுவனத்தில் இப்படி இருப்போம்” என்று கூறிய படி தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடை வெளி விட்டு) சமிக்கை செய்தார்கள்” என்ற நபி மொழியையும் எடுத்துக் கூறி தன் மனைவிக்கு உபதேசம் செய்தார்.
அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஒலித்தது. அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. வேறு வழியின்றி, எங்களை அனாதைகள் இல்லத்தில் சேர்ப்பதே பாதுகாப்பானது, மேலும் எதிர் காலத்திற்கும் பயனுள்ளது என முடிவு செய்து, ஒரு குக்கிராமத்தில் ஜமால் ஆலிம் என்பவர் நல்ல முறையில் நடத்தி வரும் அனாதை இல்லத்தில் எங்களிருவரையும் சேர்த்து விட்டு, திண் பண்டங்களை கை நிறைய வாங்கித் தந்து செலவிற்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு என் சிறிய தந்தை போய் விட்டார்.
oOo
புதிய இடம். அங்கே எங்களைப் போன்றே சோகங்களைச் சுமந்த பல சிறுவர்கள். ஆனால் அவர்களது முகங்களில் சோகத்தின் சாயல் அறவே தெரிய வில்லை. மட்டற்ற மகிழ்ச்சி. எப்போதும் சிரித்த முகங்கள். அவர்கள் ஜமால்; ஆலிமுடன் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள்.
ஓரிரு வாரங்கள் ஓடின! ஜமால் ஆலிம் காட்டும் அன்பில் அரவணைப்பில் திக்கு முக்காடிப் போன நாங்கள், எங்களது உள்ளத்தில் படிந்த அனாதைக் காயத்தை சற்றே மறக்கத் தொடங்கினோம். தாயன்பு, தந்தையின் கண்டிப்பு, தேர்ந்த நேர்த்தி மிக்க ஒர் ஆசிரியரின் வழிகாட்டல் என ஜமால் ஆலிம் பழகிய விதம் பழைய நிகழ்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக மறக்கச் செய்து விட்டது. மற்ற சிறுவர்களோடு சேர்ந்து நாங்களும் விளையாட ஆரம்பித்து விட்டோம்.
ஜமால் ஆலிம் என் உள்ளத்தில் ஆழமாக இடம் பிடித்து விட்டார். ஒரு சில நிமிடங்கள் அவரைப் பிரிந்திருப்பது கடும் வேதனை அளித்தது. மாலை நேரத்தில் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஜமால் ஆலிமுடன் நானும் ஒரு நாள் புறபட்டு விட்டேன். பஸ் பிடித்து டவுனுக்குப் போனோம். வண்டியை விட்டு இறங்கியதும்; எனக்கு சிற்றுண்டி வாங்கித் தந்த அவர், தனக்கு ஏதும் வாங்கிக் கொள்ள வில்லை.
சில கடைகளில் ஏறி இறங்கினார். கடை முதலாளிகளிடம் ஏதோ பேசி விட்டு வந்தார். என்ன பேசுகிறார் என்பதை கவனிக்க விரும்பினேன்.
“என்னங்க பாய்! பிள்ளைங்களுக்கு நாளைக்கு சாப்பாட்டுக்கு எதுவும் இல்ல. உங்களால முடிஞ்சத கொடுங்க! அல்லாஹ் ஒங்க வியாபாரத்தில பரக்கத்து செய்வான்” என்று சொல்வது என் காதில் விழுந்தது.
“இன்னக்கி வியாபாரம் சரியில்ல. நாள வாங்க பாக்கலாம்” என்றே பலரும் பதில் சொன்னார்கள். இருபது கடைகளுக்கும் மேல் ஏறி இறங்கி இருப்பார். சில கடைகளில் “இவருக்கு வேற வேல பொளப்பு இல்லாம அலைறாரு” என எங்கள் காதுபடவே பேசிக் கொள்வதைக் கேட்ட எனக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது.
எவ்வளவு கஷ்டப்பட்டு நமது உணவிற்கு ஏற்பாடு செய்கிறார் இவர் என்பதை நேரில் பார்த்த போது அவர் மீதுள்ள மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. ஆனால், அவரோ இச்சிரமங்களில் எதையும் இதுவரை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.
இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப் பட்டு விட்டது. தொழுது முடித்த பின் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. அருகில் அமர்ந்திருந்த எனக்கு அவர் கேட்பது தெளிவாக காதில் விழுகிறது.
“இறைவா! அகிலத்தின் அதிபதியே! அனாதைகளை ஆதரிப்போனே! இதோ! உனது சன்னிதானத்தில் இரு கரம் ஏந்தி நிற்கிறேன். பெற்றோரை இழந்து என்னிடம் அடைக்கலமாகியுள்ள என் பிள்ளைகளுக்கு நாளை உணவிற்கு எதுவுமே இல்லை. நீயே அனைவருக்கும் உணவளிப்பவன். இதோ இந்த அனாதை களுக்கும் உணவளிப்பாயாக!” என உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தார். அதைக் கேட்ட எனக்கும் அழுகை வந்து விட்டது.
பிரார்த்தனையை முடித்து விட்டு வெளியே வந்த அவர், பள்ளி வாசலை ஒட்டி இருக்கும் மளிகை கடை முதலாளியைப் பார்த்து விவரம் கூறினார். அவரோ அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல், முகமலர்ந்து ஒரு மாதத்திற்கு தேவைப் படும் அளவு பொருட்களை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி அவரே ஒரு ஆட்டோவையும் ஏற்பாடு செய்து அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்களை ஏற்றி அனுப்பி வைத்தார்.
மகிழ்வோடு என்னை நோக்கிய ஜமால் ஆலிம், பார்த்தாயா மகனே!
“அல்லாஹ்விடத்தில் கையேந்திக் கேட்டால் அவன் எதையும் மறுக்க மாட்டான். ஏந்திய கரங்களை வெறும் கையாக திருப்பி அனுப்ப வெட்கப்படுகிறான். எனவே, நீயும் எதைக் கேட்பதாக இருந்தாலும், அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும்” என்று என் உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்து விட்டார்.
“இறைவா! ஜமால் ஆலிமுக்கு எச்சிரமமும் இல்லாமல் ஆக்குவாயாக! அவருக்கு எல்லா வகையிலும் துணை புரிவாயாக!” என்று நானும் எனது பங்கிற்கு பிரார்த்தனை செய்து கொண்டேன்.
மறுநாள் விளையாடி முடித்து, மஃக்ரிப் தொழுது விட்டு சற்று அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது ஆலிம்சா எழுந்து உபதேசம் செய்ய ஆரம்பித்தார்:
“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களை அமானிதமாக அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்திருக்கிறான். எனவே, உங்களுக்கு நேர் வழி காட்டுவது எனது கடமை. எங்கிருந்தாலும் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். எந்நேரத்திலும் தொழுகையை தவற விட்டுவிடக் கூடாது. பள்ளிவாசலில் இமாம் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவதால் 27 மடங்கு நன்மைகள் அதிகம் உண்டு. எனவே, ஜமாஅத் தொழுகையை தவறவிட்டு விடக் கூடாது.” என்று கூறி, சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“நீங்கள் வளர்ந்து வந்த பின் ஏழை எளியோருக்கு தர்மம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆதரவற்ற அனாதைகளை அரவணைத்து அவர்களை ஆதரிக்க வேண்டும்.
ஏனெனில் அனாதைகளை நாம் ஆதரிக்க வில்லையெனில் அவர்கள் கவனிப்பாரின்றி சரியான வழி காட்டல் இல்லாமல் திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம் போதை பொருள் அருந்துதல் போன்ற பெரும் சமுக விரோத செயல்களில் ஈடுபட்டு மபெரும் குற்றவாளிகளாக மாறிவிடுவதோடு, சட்டத்திற்கும் பெரும்சவாலாக திகழ்வார்கள்.
மாறாக அவர்களை அரவணைத்து அன்பு செலுத்தி, சரியான-நேரான வழியினை காட்டினால், ஒழுக்கம் நிறைந்த நல்லவர்களாக, சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக, வளர்ந்து வருவார்கள். இது சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மையும் ஆகும்! அளப்பரிய இந்த நன்மையை ஒரு அனாதையின் காப்பாளர் செய்கிறார் என்பதால்தான்,
“அனாதைகளை ஆதரிப்போர் சுவனத்தில் என்னுடன் மிக நெருக்க மாக இருப்பார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று கூறிவிட்டு சற்றே அமைதியானார் ஜமால் ஆலிம்.
“அனாதைகளை ஆதரிப்போர் சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று மீண்டும் உபதேசத்தை தொடர்ந்த அவர்,
“சில சந்தர்ப்பங்களில் அனாதைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் விட்டு சென்ற சொத்துக்களும் இருக்க வாய்ப்புண்டு. அவர்களை பராமரிப்போர் அவர்களது சொத்துக்களையும் சேர்த்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அதனை கையாடல்-கபளீகரம் செய்ய நினைப்பது, வீண் விரயமாக செலவு செய்வது, அநியாயமாக உண்பது போன்ற எந்தக் குற்றத்தையும் செய்ய நினைக்கக் கூடாது. மாறாக தமது சொத்துக்களை போன்றே அதனையும் பாதுகாத்து, அவர்கள் பருவ வயதை அடைந்து, நிர்வகிக்கும் தகுதியும் வந்த பின் அவர்கள் வசமே அச்சொத்துக்களை ஒப்படைத்து விட வேண்டும்.
அனாதைகளின் சொத்துக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என வழிகாட்டும் இறைவன், அச்சொத்துக்களை வீண் விரயம் செய்வோர், அநியாயமாக உண்போர் அடையும் தண்டனைகள் குறித்தும் குர்ஆனில் விவரித்துள்ளான்.
இதோ அந்த வசனங்கள்!
“அனாதையின் சொத்தை அவர் பருவம் அடையும்வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்!…”(6:152) (17:34)
“அனாதைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்” (2:220)
“அனாதைகளை சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவார்கள் என பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அனாதையின் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலியாக) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங் கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்” (4:6)
“அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்களின் சொத்துக்களை உங்கள் சொத்துக்களோடு சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாகும்” (4:2)
“அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர், தமது வயிறுகளில் நெருப்பையே உண்ணுகின்றனர். நரகில் அவர்கள் நுழைவார்கள்!” (4:10)
அனாதைகளின் சொத்துக்கள் விவகாரத்தில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தமது உறவுக்கார அனாதைகளின் சொத்துக்களையே அல்லாஹ்வின் அச்சமின்றி அபகரித்துக் கொள்கிறார்கள். இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்” என்று உருக்கமாக கூறி முடித்தார் ஜமால் ஆலிம்.
oOo
அன்று அல்லாஹ்விடத்தில் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனக்கும் இறைவன் செல்வத்தை வழங்கினால் அனாதைகளுக்கு அதனை வாரி வாரி வழங்க வேண்டும். ஜமால் ஆலிம் போன்றே அனாதைகளுக்கென்று வரும் எந்தப் பொருளையும் நாம் அனுபவிக்கக் கூடாது. என் போன்ற அனாதைகளுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அந்த உறுதி மொழி.
படித்து வளர்ந்து ஆளாகி, சிறு தொழில் தொடங்கினேன். அண்ணன் அப்பாஸ், பத்து வருட மண வாழ்க்கைக்கு பின் மனைவி மரணம் அடைந்து விட்டதால் மறுமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் மீண்டும் அனாதை இல்லத்திற்கே திரும்பி ஊதியமின்றி ஊழியம் செய்து வந்தார்.
நான் விரும்பியது போலவே அல்லாஹ் எனக்கு செல்வத்தை வாரி வழங்கி விட்டான். பெரும் தொழில் அதிபர். சமூகத்தில் பெரிய அந்தஸ்து என எல்லாம் கிடைத்தது. நான் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை செயல் படுத்தியும் வந்தேன்.
ஆம்! என் செல்வத்தில் பெரும்பகுதியை அனாதைகளுக்கே வாரி வாரி வழங்குகிறேன். வசூல் செய்வது என்ற எந்த சிரமமும் ஜமால் ஆலிம் அவர்களுக்கு அறவே இல்லாமலாக்கி விட்டேன்.
வருடங்கள் உருண்டோடின. இன்று இந்த அனாதை இல்லம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து பல அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு பெரிய நிறுவனமாக உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறதே என்ற சிந்தனையில் சஞ்சரித்தபடி பள்ளிவாசல் அருகில் நின்று கொண்டிருந்த அஹ்மது பாய் அவர்களை, “என்னங்க அஹ்மது பாய் அங்கேயே நின்று விட்டீங்க! தொழுகை நேரம் முடியப் போகுது. சீக்கரம் வந்து தொழுகுங்க” என்ற பேஷ் இமாமின் சப்தம்தான் பழைய நினைவிலிருந்து மீள வைத்தது.
விரைந்து தொழுகையை நிறைவு செய்து விட்டு, தாமதத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, மன நிறைவோடு வீடு திரும்பினார் அஹ்மது பாய் அவர்கள்.
Source : http://www.islamkalvi.com 

Thursday, 26 October 2017

கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]

Story
“சும்மா இருங்கம்மா! இப்படி பணம். பணம்ன்னு அலையறவங்களுக்கு உறைக்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்டால்தான் புத்தி வரும். கல்யாணங்கறது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் வேணும் 100 பவுன் நகை வேணும்னு வியாபார ஒப்பந்தம் போட வந்துருக்காங்க”.
“மஹர் கொடையை மணம் உவந்து கொடுத்திடுங்கன்னு. அல்லாஹ் சொல்கிறான். இவங்க என்னடான்னா. எங்கே பணம் கிடைக்கும். எங்கே கார் கிடைக்குமுன்னு ஊர் ஊரா அலையறாங்க”.
“ஏம்மா!. உங்க பெண்ணை அடக்கிவைங்க. மாப்பிள்ளை வீட்டுக் காரங்கன்னு மரியாதை கூட கொடுக்காம” என்றார் மாப்பிள்ளையின் தாயார்.
“ஆமா! பெரிய்ய மரியாதை! மகனை பெத்து வளர்ப்பது பெற்றோர் கடமைங்கற அடிப்படை விஷயம் கூட தெரியாம. பால் குடி செலவுல இருந்து பட்டப்படிப்பு செலவுவரை கணக்கெழுதிக்கிட்டு, பெத்த புள்ளையை பேரம் பேசி விலை பேச வந்துட்டீங்க. உங்களுக்கு என்ன மரியாதை வேண்டிகிடக்கு. மாப்பிள்ளைக்கு தாயா இருக்குற உங்களப் பார்த்து நான் கேட்கிறேன்!. நீங்களும் ஒரு பெண் தானே! உங்க தந்தையும் உங்களை கல்யாணம் பேசும்போது வரதட்சணை கொடுத்து தானே முடிச்சுருக்காங்க!. பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக, பல லட்சத்த வரதட்சணையா கொடுக்கும் போது மனது எவ்வளவு நொந்துப் போயிருக்கும். அது போகட்டும். உங்க வீட்டு பெண் புள்ளைங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது மட்டும் எங்க வரதட்சணை வாங்காத நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்னு பார்க்குறீங்களே!. அதே உங்க பையனுக்கு மட்டும் பெண் பார்க்கும் போது தன் கடந்த காலத்தையே மறந்துட்டு இதே மனோபாவம் தான் மற்ற பெண்வீட்டாருக்கும் இருக்குங்கிறத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க”.
“இதப் பாருங்கம்மா! நல்ல இடம்னு புரோக்கரு சொன்ன காரணத்துணால தான் இங்கு வந்தோம். இப்படி ராங்கிப் புடிச்ச பொண்ணுன்னு, வந்த பிறகுதான் தெரியும். இப்படிப்பட்ட பெண் எங்களுக்கு தேவையில்ல!”.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க!. அது சின்னப்பொண்ணு ஏதோ தவறுதலா பேசிட்டுது”, என வருத்தம் தெரிவித்தார் பெண்ணின் தாயார்.
“சும்மா இருங்கம்மா!. நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல! கட்டப்போற மாப்பிள்ளை எந்த இலட்சணம். அவங்க குடும்பம் எந்த இலட்சணம்னு ஆள் வெச்சு தெரிஞ்சுக்கற அளவுக்கு வெவரம் தெரிஞ்ச பொண்ணுதான். பார்க்க நல்ல ஆளா தெரிவதெல்லாம் சும்மா. இவங்க குடும்பத்தப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும்.
எங்கூட மதரஸாவில் படிக்கும் என் தோழி ஃபர்ஜானாவுடைய சொந்த தாய் மாமா, மாமிதான் இந்த இருவரும். ஆரம்பத்துல என் தோழியைத்தான் பெண்பார்த்து நிச்சயமும் பண்ணினாங்க. என் தோழி வீட்ல வரதட்சணைக் கொடுக்க மாட்டேன், நபிவழியிலதான் திருமணம் நடத்துவேண்ணு சொல்ல. அதவிட வசதியான பொண்ணுன்னு நம்மவீட்ட பார்க்க வந்துருக்காங்க. இதுவரை பெத்தவங்கண்ணு தான் எதுவும் நான் பேசல. மார்க்க விஷயம்ங்கறதால நான் சொல்கிறேன்.
வரதட்சணை கொடுக்கக் கூடியதா இருந்தா எனக்கு திருமணம் வேண்டாம். வரதட்சணை வாங்காத மாப்பிள்ளையை அல்லாஹ் எனக்கு தருவான். பணத்துக்காக பெண்பார்க்க வந்த குடும்பத்துல போய் நான் நிம்மதியா வாழ்வேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை!. பெத்தவங்க தான் அப்படின்னா புத்திரன் லட்சனம் அதுக்கு மேல, காலேஜில கூத்தடிச்சு, பல பெண்களுடன் தொடர்பும் வச்சிருக்கார். ஆண் என்றதும் யாரும் பெரிதுபடுத்தவில்லை. கற்பொழுக்கம் எப்படி பெண்ணுக்கு முக்கியமோ அதுபோல ஆம்பளைங்களுக்கும் முக்கியம். இப்படி மட்ட ரகமா புள்ளையை பெத்துவச்சிகிட்டு நல்ல மடத்தில் விலை போக வேணுமின்னு புரோக்கரை பிடிச்சிருக்கிறாங்க. இப்படிப்பட்ட மாப்பிள்ளை எனக்கு தேவையில்லை. இதைவிட கூலி வேலை பார்க்கும் மார்க்கப்பற்றாளனிடம் கூழும் கஞ்சியும் குடிச்சிக்கிட்டு வாழ்க்கை நடத்துவது மேல். இனி ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது. Get out..”
oOo
மக்கள் கூட்டம் நிறைந்துவழிய. மாப்பிள்ளை தோரணையில் மணமேடையில் அமர்ந்திருந்த இபுராஹீமிடம் தோழன் வஹாபு கேட்டான். “என்ன மாப்ளே! கல்யாண சமயத்துல முகத்த உம்முன்னு வச்சிகிட்டு..!”
“அட சும்மா இருப்பா நீவேற! நேத்து ராத்திரி ஒரு கனவு கண்டேன்! அதை நெனச்சுப் பார்த்தேன்”. என்று வழிந்தான் இபுராஹீம்
Source : http://www.islamkalvi.com