Thursday, 19 January 2012

கோவையில் நடைபெற்ற JAQH மாநில மாநாட்டு தீர்மானங்கள்


Assalamualaikum Waramathullahi Wabarakathu.

01. மனிதர்களால் இழைக்கப்படும் கொடுமைகளில் மிகப்பெரியது படைத்த இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும்.இந்த கொடுஞ்செயல்களிலிருந்து மனித சமூகத்தை பாதுகாத்து ஏகத்துவத்தை நிலை நாட்ட நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.

02. இஸ்லாமிய மக்களின் ஈமானை இழிவுபடுத்தி நரகத்துக்கு இழுத்துச்செல்லும் கப்ரு வழிபாடு தனிமனித வழிபாடு தரீக்கா பித்அத்துகள் மத்ஹபுகள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு இந்த கொடுஞ் செயல்களை மனித சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

03. ஒரே தாய் தந்தையிலிருந்து உருவான மனித சமூகத்தை சாதி மற்றும் தீண்டாமை என்ற கொடுமையினால் பிரித்துவைத்து கொடுமைப்படுத்தும் இழிசெயலை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

04. வட்டி மது சூது விபச்சாரம் ஆபாசம் போன்ற பெரும் பாவங்களை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் இத்தீய செயல்களிலிருந்து முற்றிலும் விலகி வாழ வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

05. பெண் இனத்தை இழிவுபடுத்தும் வரதட்சனையை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு வரதட்சனை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை அனைவரும் பகிங்கரமாக புறக்கணிக்கவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

06. விலைவாசி ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ள வட்டி ஊழல் பதுக்கல் ஆகியவற்றை இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுகொள்கிறது.

07. ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைக்க இஸ்லாம் காட்டியுள்ள  ஸக்காத் என்ற கடைமையை நாம் நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுவதோடு அதை பைத்துல் மால்(வட்டியில்லா கடன் திட்டம்)மற்றும் பைத்துஸ்ஸக்காத் அமைத்து கூட்டு முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் அதை அனைத்து பள்ளிவாயில்களிலும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

08. வக்ஃப் வாரியச் சொத்துக்களை ஆக்கிரமிப்புச் செய்து அமானித மோசடி செய்யும் மக்களையும் மற்றும் அவர்களுக்கு துணைபோகும் வக்ஃப் வாரிய அதிகாரிகளையும் இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்ஃப் வாரியச் சொத்துக்களை உடனடியாக மீட்டு அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் பயன்பெற இலவச கல்வி நிலையங்களை உருவாக்க வக்ஃப் வாரியம் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்என இம்மாநாடு வலியுறுத்துகிறது..

09. மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் அழிவு சக்கதியான அணுசக்தியை உலகமெங்கும் தவிர்த்து வரும் இக்காலத்தில் இந்தியாவில் அணுமின் நிலையங்கள் என்ற பெயரில் எங்கும் நிறுவக்கூடாது என்றும் அணு அபாயம் இல்லாத தேசத்தை உருவாக்குமாறு மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10. முல்லைப்பெரியாறு அணை விசயத்தில் இருமாநில மக்களையம் மோதவிட்டு வேடிக்கைபார்க்காமல் ஒரு
சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

11. நிம்மதியான வாழ்விற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து வகையான தீவிரவாதம் பயங்கரவாதத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன்  இஸ்லாமிய இளைஞர்களை ஏகத்தவ சிந்தனையுடன் வழி நடத்தி உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்கச் செய்ய நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.

12. ஏழை எளிய மக்களை வறுமையில் ஆழ்த்தியும் தன்மானத்தை இழக்க வைத்தும் குடும்பங்களை சீரழிக்கும் மதுவை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13. சினிமா தொலைக்காட்சி பத்திரிகை மற்றும் இணையதளங்களில் ஆபாசக்கலாச்சாரத்தின் மூலம் இளைஞர்கள் வழிகெடுகிறார்கள்.எனவே ஆபாசக்கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

14. நீண்டகாலமாக சிறையில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களின் வழக்குகளை கருணை உணர்வோடு விரைந்து நடத்தி அப்பாவிகளை விடுதலை செய்யுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

15. நம்முடைய உயிரிலும் மேலான இஸ்லாத்தை அனைத்து சமூக மக்களுக்கும் எடுத்துரைக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்துகிறது.

16. இயக்க வேறுபாடுகளைக் களைந்து அனைத்து ஏகத்துவவாதிகளும் குர்ஆன் ஹதீஸை முன்னிறுத்தி மறுமை வெற்றிக்கு அழைக்கும் ”ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஜமாஅத்தில்’ இணைந்து செயல்பட வருமாறு அனைத்து முஸ்லிம்களையும் இம்மாநாடு அழைக்கிறது

No comments:

Post a Comment