Friday, 22 March 2019

[Arabic Grammar Rules – متن الآجرومية – Class-01] அரபி இலக்கணப் பாடம் – نحو

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 22.03.2019 (வெள்ளி)
இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா



Keep Yourselves updated:
Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்

Sunday, 17 March 2019

எனக்கு வாசிக்கத் தெரியாதே! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-43]


அதற்கு ‘ஜபலுந்நூர்’ (ஒளி மலை) என்றும் கூறுவார்கள். அந்த மலைக்கு ஏன் அந்தப் பெயர் சொல்லப்படுகிறது தெரியுமா? உலகையே இருளில் இருந்து மீட்டு ஒளியின் பால் இட்டுச் செல்லும் அற்புத வேதம் குர்ஆன் முதன்முதலில் இறக்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயது நெருங்கையில் மனித இனத்தின் அவல நிலை குறித்து கவலைப்பட்டார்கள். இதனால் தனித்திருந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அந்த மலை உச்சியில் உள்ள குகையில் அவர்கள் இருக்கும் போது திடீர் என ஒருவர் வந்தார். வந்தவர் “இக்ரஃ (ஓதுவீராக வாசிப்பீராக)” என்றார்.
முஹம்மத் நபி எழுத வாசிக்கத் தெரியாதவர். “எனக்கு வாசிக்கத் தெரியாது” என்றார். உடனே வந்தவர், முஹம்மத் நபியை இறுகக் கட்டி அணைத்தார். பின் மீண்டும் “வாசிப்பீராக” என்றார். முஹம்மது நபி மிக நல்ல பண்புள்ளவர். நிதானமானவர். கோபம் கொள்ளாதவர். எனவே மீண்டும் “எனக்கு வாசிக்கத் தெரியாது” என்றார். வந்தவர் மீண்டும் கட்டியணைத்து, மீண்டும் “வாசிப்பீராக” என்று கூறிவிட்டு, “படைத்த உம் இறைவன் திருப்பெயரால் ஓதுவீராக! அவன்தான் மனிதனை ‘அலக்’ என்ற நிலையில் இருந்து படைத்தான்.
ஓதுவீராக! உம் இறைவன் மிக கண்ணியமானவன். அவன்தான் பேனா மூலம் கற்பித்தான். அவன் மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்றுக்
கொடுத்தான்” என்ற ஐந்து வசனங்களை அவர் கற்றுக் கொடுத்தார். அதன்பின் நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள். பின்னர் அவர் அப்படியே வான் நோக்கிச் சென்றுவிட்டார். இந்த நிகழ்வால் முஹம்மத் நபி அச்சம் கொண்டார்.
“என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று கூறிக்கொண்டே வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி அன்னை கதீஜா(ரலி) அவர்கள் ரொம்ப விபரமானவர். அவர் ந பி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். “நீங்கள் அனாதைகளை அரவணைத்துள்ளீர்கள். ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் உதவுகின்றீர்கள். உறவுகளைப் பேணுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் தீங்கு நடக்காது. எனது உறவுக்காரர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் வரக்கத் இப்னு நவ்பல். அவர் முந்தைய வேதங்களைப் படித்தவர். அவரிடம் இதுகுறித்து கேட்டுப் பார்ப்போம்” என்று கூறினார்கள்.
இந்த ஆலோசனைப்படி முஹம்மத் நபி வரக்கத் இப்னு நவ்பலிடம் சென்று நடந்ததைக் கூறினார். அப்போது முந்தைய வேதங்களைப் படித்த அவர், “உங்களிடம்
வந்தது நாமூதுஸுல் அக்பர் என்று கூறப்படும் வானவர் தலைவர் ஜிப்ரீல் ஆவார். உங்களுக்கு அவர் சொன்னவை வேத வெளிப்பாடாகும்.நீங்கள் இந்த மக்களுக்கு உபதேசம் செய்யும் போது இந்த மக்கள் உங்களை எதிர்ப்பார்கள். உங்களை இந்த ஊரை விட்டும் விரட்டுவார்கள். அவர்கள் விரட்டும் போது நான் இருந்தால்
உங்களுக்கு உதவுவேன்” என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் மரணித்து விட்டார்.
இதன்பின்னர் தான் தன்னிடம் மனித ரூபத்தில் வந்தது ஜிப்ரீல் எனும் வானவர் என்பது முஹம்மத் நபிக்கு தெரியவந்தது. இந்த நிகழ்வு ஹிரா குகையில் நடந்தது. இங்கிருந்து தான் அவருக்கு நபித்துவப் பணி தொடங்குகிறது. முதன்முதலில் இறைவசனங்கள் இங்கு இறக்கப்பட்டதால் தான் இந்த மலை ஜபலுந்நூர் (ஒளி மலை) என அழைக்கப்படுகின்றது.
முஹம்மது நபிக்கு முதன்முதலில் அருளப்பட்ட ஐந்து வசனங்கள் 96ஆம் அத்தியாயமான ‘அல்-அலக்’ அத்தியாயத்தில் (1-5) இடம்பெற்றுள்ளது.

Saturday, 16 March 2019

புலூகுல் மராம் (தொடர்-16)

அத்தியாயம்-6: ஹஜ் பற்றிய நூல்

بَابُ اَلْمَوَاقِيتِ

பாடம்-2: ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டும் இடங்கள் பற்றிய பாடம்

722- عَنِ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَقَّتَ لِأَهْلِ اَلْمَدِينَةِ: ذَا الْحُلَيْفَةِ, وَلِأَهْلِ اَلشَّامِ: اَلْجُحْفَةَ, وَلِأَهْلِ نَجْدٍ: قَرْنَ اَلْمَنَازِلِ, وَلِأَهْلِ اَلْيَمَنِ: يَلَمْلَمَ, هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ اَلْحَجَّ وَالْعُمْرَةَ, وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ, حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ )) مُتَّفَقٌ عَلَيْه


722 மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா எனும் இடத்தையும் சிரியா வாசிகளுக்கு ஜுஹ்ஃபா எனும் இடத்தையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ன் அல்மனாஸில் எனும் இடத்தையும் இன்னும் யமன் வாசிகளுக்கு ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டுமிடமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கினார்கள். இவை அவர்களுக்கும் இவற்றின் வழியாக யார் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக வருகிறார்களோ, அவர்களுக்கும் அங்கு இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் தாம் வசிக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணியலாம். மக்காவாசிகள் இஹ்ராம் கட்டுமிடம் மக்காவே ஆகும் என, இஹ்ராம் கட்டுமிடத்தை நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புகாரீ, முஸ்லிம்

723- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا: (( أَنَّ أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَقَّتَ لِأَهْلِ اَلْعِرَاقِ ذَاتَ عِرْقٍ )) رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيّ ُ

723 இராக் வாசிகளின் இஹ்ராம் கட்டுமிடம் ‘தாத்து இர்க்’ எனும் மலைக்குன்று அருகே என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூதாவூத், நஸயீ

وَأَصْلُهُ عِنْدَ مُسْلِمٍ مِنْ حَدِيثِ جَابِرٍ إِلَّا أَنَّ رَاوِيَهُ شَكَّ فِي رَفْعِه ِ724

ஹதீஸ் 723 உடைய மூலம் ஜாபிர்(ரலி) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் உள்ளது. அதனுடைய அறிவிப்பாளர் அதற்கு மர்ஃபூஃ எனும் தரம் உள்ளதா என சந்தேகிக்கிறார்.

725 – وَفِي اَلْبُخَارِيِّ: (( أَنَّ عُمَرَ هُوَ اَلَّذِي وَقَّتَ ذَاتَ عِرْقٍ ))

725 உமர்(ரலி) அவர்கள்,தாம், தாத்து இர்க் என்னும் இடத்தை இஹ்ராம் கட்டுமிடமாக ஆக்கினார்கள் என, புகாரீயில் உள்ளது.

726- وَعِنْدَ أَحْمَدَ, وَأَبِي دَاوُدَ, وَاَلتِّرْمِذِيِّ: عَنِ اِبْنِ عَبَّاسٍ: (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَقَّتَ لِأَهْلِ اَلْمَشْرِقِ: اَلْعَقِيقَ ))

726 நபி(ஸல்) அவர்கள், கீழை நாட்டவர்களின் இஹ்ராம் கட்டுமிடமாக ‘அகீக்’ எனும் இடத்தை ஆக்கினார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அஹ்மத், அஹ்மத், திர்மிதீயில் உள்ளது.

Friday, 15 March 2019

ஞானி லுக்மானும் அவர் மகனும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-42]


முன்பொரு காலத்தில் லுக்மான் என்றொருவர் வாழ்ந்து வந்தார். இவர் அடிமையாகவும் கருப்பராகவும் இருந்தார். ஆனால் அவர் ஞானம் மிக்கவராக இருந்தார். இஸ்லாம் நிறங்களைப் பார்க்காது அவரின் அறிவும் ஞானமும் அவருக்கு உயர்வைக் கொடுத்தது. அடிமையாக இருந்த அவர் தனது ஞானத்தால் உயர்வு பெற்றார். திருக்குர்ஆனில் அவர் பெயரில் ஒரு அத்தியாயமே உள்ளது!
லுக்மான் தனது மகனுக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது மகனை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினார். அந்த அறிவுரைகள் நமக்கும் அவசியமானதாகும். இதோ லுக்மான் எனும் ஞானியின் அறிவுரை.
“என்னருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிடாதே! இணை வைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு அடியான் செய்யும் மிகப்பெரும் அநியாயமாகும்.”பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்! உனது பெற்றோர்கள் உனக்காகப் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார். உன் தாய் கஷ்டத்தின்மேல் கஷ்டத்தை அனுபவித்து உன்னைச் சுமந்தாள். கஷ்டப்பட்டு உன்னைப் பெற்றெடுத்தாள். அதன்பின்னும் 2 வருடங்கள் உனக்குப் பாலூட்டினாள். எனவே அல்லாஹ்வுக்கும் நன்றியுடையவனாக இரு! உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துபவனாக இரு!
“என்னருமை மகனே! நீ செய்வது கடுகைப் போன்ற சிறிய செயலாக இருந்தாலும் அதை நீ பூமியிலோ வானத்திலோ பாலைவனத்திலோ யாரும் பார்க்காத வண்ணம் செய்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். எனவே தனியாக இருக்கிறோம், யாரும் பார்க்க மாட்டார்கள் என்று பாவம் செய்துவிடக் கூடாது. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இதை நீ மறந்துவிடக் கூடாது!
“மகனே! தொழுகையைப் பேணி தொழுதுவா! நன்மையை ஏவு, தீமையைத் தடு! இதனால் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்துக் கொள்! இதில் நீ பின்வாங்காதே!
“நீ பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! மக்களில் பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை விட்டும் உன் முகத்தை திருப்பி விடாதே! அல்லாஹ் பெருமைப் பிடித்தவர்களை விரும்புவதில்லை. மக்களுடன் சராசரியாக சாமானியமாகப் பழக வேண்டும்!
“நீ நடந்தால் அந்த நடை நடுநிலையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது சப்தத்தை உயர்த்திப் பேச வேண்டாம். கழுதை கத்துவதைப் போல் கத்த வேண்டாம். கழுதையின் சப்தம் யாருக்கும் பிடிக்காதல்லவா?
இவ்வாறு லுக்மான் தனது மகனுக்கு அறிவுரைக் கூறுவார். லுக்மான் கூறிய அறிவுரை அவருடைய மகனுக்கு மட்டும் உரியது அல்ல. அது எமக்கும் உரியதுதான். எனவே லுக்மான் கூறிய உபதேசத்தை நாமும் எமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
அப்போதுதான் நாம் உலகில் அடுத்தவர்களால் நேசிக்கப்படுவோம். அல்லாஹ்வும் எம்மை நேசிப்பான். மறுமையில் நாம் சுவனத்தையும் பெற முடியும்.
ஞானி லுக்மான் தொடர்பான இந்தச் செய்தி அத்தியாயம் லுக்மான் 31:12-19 வரையுள்ள வசனங்களில் இடம்பெற்றுள்ளது.

புலூகுல் மராம் (தொடர்-15)

كِتَابُ اَلْحَجِّ

அத்தியாயம்-6: ஹஜ் பற்றிய நூல்

بَابُ فَضْلِهِ وَبَيَانِ مَنْ فُرِضَ عَلَيْهِ

பாடம்-1: ஹஜ் கடமையாக்கப்பட்டவர்களும் அதன் சிறப்புகளும்

708- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( اَلْعُمْرَةُ إِلَى اَلْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا, وَالْحَجُّ اَلْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا اَلْجَنَّةَ )) مُتَّفَقٌ عَلَيْهِ

708 ”உம்ராவானது, மறு உம்ரா வரையிலான பாவங்களின் பரிகாரமாகும். பாவங்கள் கலக்காத ஹஜ்ஜுடைய கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

709- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: (( قُلْتُ: يَا رَسُولَ اَللَّهِ! عَلَى اَلنِّسَاءِ جِهَادٌ ? قَالَ: ” نَعَمْ, عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ: اَلْحَجُّ, وَالْعُمْرَةُ ” )) رَوَاهُ أَحْمَدُ, وَابْنُ مَاجَهْ وَاللَّفْظُ لَهُ, وَإِسْنَادُهُ صَحِيحٌ .
وَأَصْلُهُ فِي اَلصَّحِيحِ

709 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெண்கள் மீது ஜிஹாத் உண்டா?” என்று நான் கேட்டதற்கு, ”ஆம்! நீ பெண்கள் மீது ஜிஹாத் உண்டு. போர் இல்லை. அது ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், இப்னு மாஜா
இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இப்னு மாஜாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் புகாரீயில் உள்ளது.

710- وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اَللَّهِ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: (( أَتَى اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَعْرَابِيٌّ. فَقَالَ: يَا رَسُولَ اَللَّهِ! أَخْبِرْنِي عَنْ اَلْعُمْرَةِ, أَوَاجِبَةٌ هِيَ? فَقَالَ: ” لَا. وَأَنْ تَعْتَمِرَ خَيْرٌ لَكَ ” )) رَوَاهُ أَحْمَدُ, وَاَلتِّرْمِذِيُّ, وَالرَّاجِحُ وَقْفُهُ.
وَأَخْرَجَهُ اِبْنُ عَدِيٍّ مِنْ وَجْهٍ آخَرَ ضَعِيفٍ .

710 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு உம்ராவைப் பற்றிக் கூறுங்கள். அது கடமையா?” என்று கேட்டதற்கு, இல்லை! நீ உம்ரா செய்தால் உனக்குச் சிறப்பு என்று கூறினார்கள் என, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ
இதில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளது. இப்னு அதீ உடைய மற்றோர் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

711- عَنْ جَابِرٍ مَرْفُوعًا: (( اَلْحَجُّ وَالْعُمْرَةُ فَرِيضَتَانِ ))

711 மற்றோர் அறிவிப்பின்படி ஜாபிர்(ரலி) வாயிலாக, ‘ஹஜ் மற்றும் உம்ரா கடமைகள் என்று மர்ஃபூஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

712- وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( قِيلَ يَا رَسُولَ اَللَّهِ, مَا اَلسَّبِيلُ? قَالَ: ” اَلزَّادُ وَالرَّاحِلَةُ ” )) رَوَاهُ اَلدَّارَقُطْنِيُّ وَصَحَّحَهُ اَلْحَاكِمُ, وَالرَّاجِحُ إِرْسَالُهُ

712 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஸபீல் என்றால் என்ன? (எதைக் குறிக்கும்?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்க்கு (ஹஜ் செல்வதற்கான) வழிச்செலவு மற்றம் வாகனத்தைக் குறிக்கும் என்று பதிலளித்தார்கள் என, அனஸ் (ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ
இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளது இன்னும் முர்ஸல் எனும் தரமே இதில் மேலோங்கியள்ளது.

713- وَأَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ أَيْضًا, وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ

713 இப்னு உமர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் இடம் பெறும் ஹதீஸ் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

714- وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم لَقِيَ رَكْبًا بِالرَّوْحَاءِ فَقَالَ: ” مَنِ اَلْقَوْمُ? ” قَالُوا: اَلْمُسْلِمُونَ. فَقَالُوا: مَنْ أَنْتَ? قَالَ: ” رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم ” فَرَفَعَتْ إِلَيْهِ اِمْرَأَةٌ صَبِيًّا. فَقَالَتْ: أَلِهَذَا حَجٌّ? قَالَ: ” نَعَمْ: وَلَكِ أَجْرٌ ” )) رَوَاهُ مُسْلِمٌ

714 (மதீனாவிற்கு அருகில் உள்ள) ரவ்ஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்த போது, ”நீங்கள் யார்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ”நீங்கள் யார்?” என்று கேட்டனர். ”நான் அல்லாஹ்வின் தூதர்” என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அப்போது ஒரு பெண் பிள்ளையை நபி(ஸல்) அவர்களின் பால் கொண்டு வந்து, ”இதற்கு ஹஜ் இருக்கிறதா?” என்று கேட்டார். ”ஆமாம்! அதன் கூலி உனக்காகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

715- وَعَنْهُ قَالَ: (( كَانَ اَلْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم . فَجَاءَتِ اِمْرَأَةٌ مَنْ خَثْعَمَ، فَجَعَلَ اَلْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَصْرِفُ وَجْهَ اَلْفَضْلِ إِلَى اَلشِّقِّ اَلْآخَرِ. فَقَالَتْ: يَا رَسُولَ اَللَّهِ, إِنَّ فَرِيضَةَ اَللَّهِ عَلَى عِبَادِهِ فِي اَلْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا, لَا يَثْبُتُ عَلَى اَلرَّاحِلَةِ, أَفَأَحُجُّ عَنْهُ? قَالَ: ” نَعَمْ ” وَذَلِكَ فِي حَجَّةِ اَلْوَدَاعِ )) مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَفْظُ لِلْبُخَارِيِّ

715 ஃப்ழ்ல் இப்னு அப்பாஸ் சவாரியில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது கஸ்அம் கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். உடனே ஃபழ்ல் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண்ணும் அவரைப் பார்க்கலானாள். நபி(ஸல்) அவர்கள் ஃபழ்ல் உடைய முகத்தை வேறு திசையில் திருப்பலானார்கள். அப்போது, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அடியார்கள் மீது ஹஜ் அல்லாஹ்வின் கடமையாக உள்ளது. என்னுடைய தந்தை மிகவும் வயோதிகராம் விட்டார். அவரால் வாகனத்தில் அமர முடியாது. (எனவே) அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”ஆம்! (செய்யலாம்) என்றார்கள். இது ஹஜ்ஜத்துல்வதாவில் நிகழ்ந்தது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

716- وَعَنْهُ: (( أَنَّ اِمْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ, فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ, أَفَأَحُجُّ عَنْهَا? قَالَ: ” نَعَمْ “, حُجِّي عَنْهَا, أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ, أَكُنْتِ قَاضِيَتَهُ? اِقْضُوا اَللَّهَ, فَاَللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ )) رَوَاهُ اَلْبُخَارِيُّ

716 ஜுஹைனா கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”(அல்லாஹ்வின் தூதர் அவர்களே!) என்னுடைய தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் ஹஜ் செய்யாமலேயே இறந்துவிட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். (அதற்கு) ”ஆமாம் நீ அவருக்காக ஹஜ் செய்! உன்னுடைய தாய் மீது கடனிருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? எனவே அல்லாஹ்-வின் கடனை நிறைவேற்றுங்கள். கடன்கள் நிறைவேற்றப்படவதற்க்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன் என்று நபி(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் புகாரி

717- وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( أَيُّمَا صَبِيٍّ حَجَّ, ثُمَّ بَلَغَ اَلْحِنْثَ, فَعَلَيْهِ [ أَنْ يَحُجَّ ] حَجَّةً أُخْرَى, وَأَيُّمَا عَبْدٍ حَجَّ, ثُمَّ أُعْتِقَ, فَعَلَيْهِ [ أَنْ يَحُجَّ ] حَجَّةً أُخْرَى )) رَوَاهُ اِبْنُ أَبِي شَيْبَةَ, وَالْبَيْهَقِيُّ وَرِجَالُهُ ثِقَاتٌ, إِلَّا أَنَّهُ اِخْتُلِفَ فِي رَفْعِهِ, وَالْمَحْفُوظُ أَنَّهُ مَوْقُوفٌ

717 ”எவர் சிறுவராக இருக்கும் போது ஹஜ் செய்து விட்டாரோ, அவர் இளமையடைந்து விட்டால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும். எவர் அடிமையாக இருக்கும் போது ஹஜ் செய்து விட்டாரோ, அவர் விடுதலையடைந்து விட்டால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். இப்னு அபீ ஷைபா, பைஹக்கீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இது மர்ஃபூஃ எனும் தரத்தில் உள்ளதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. மவ்கூஃப் எனும் தரமே இதில் மேலோங்கியள்ளது.

718- وَعَنْهُ: سَمِعْتُ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَخْطُبُ يَقُولُ: (( ” لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ, وَلَا تُسَافِرُ اَلْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ ” فَقَامَ رَجُلٌ, فَقَالَ: يَا رَسُولَ اَللَّهِ, إِنَّ اِمْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً, وَإِنِّي اِكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا, قَالَ: ” اِنْطَلِقْ, فَحُجَّ مَعَ اِمْرَأَتِكَ ” )) مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ

718 ”எந்த ஒரு பெண்ணுடனும் அவளை மணம் புரிவது தடை செய்யப்பட்ட (தந்தை, மகன், கணவன். சகோதரன், சிறிய தந்தை. பெரிய தந்தை, தாய்மாமன் போன்ற) ஒருவர் இல்லாமல் அவளுடன் எவரும் தனித்திருக்க வேண்டாம். இன்னும் எந்த பெண்ணும் திருமண பந்தம் தடை செய்யப்படாத ஓர் ஆணுடன் தனித்துப் பயணம் செய்ய வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்த நான் கேட்டுள்ளேன். அப்போது ஒருவர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மனைவி தனியாக ஹஜ் செய்யச் சென்றுள்ளார். நானோ இன்ன இன்ன யுத்தங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்” என்று கூறினார். அதற்கு, ”நீ சென்று உன்னுடைய மனைவியுடன் ஹஜ்ஜை மேற்கொள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமுடைய வாசகம் இடம் பெற்றுள்ளது.

719- وَعَنْهُ: (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم سَمِعَ رَجُلًا يَقُولُ: لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ, قَالَ: ” مَنْ شُبْرُمَةُ? ” قَالَ: أَخٌ [ لِي ], أَوْ قَرِيبٌ لِي, قَالَ: ” حَجَجْتَ عَنْ نَفْسِكَ? ” قَالَ: لَا. قَالَ: “حُجَّ عَنْ نَفْسِكَ, ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ ” )) رَوَاهُ أَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ, وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ, وَالرَّاجِحُ عِنْدَ أَحْمَدَ وَقْفُهُ

719 ஒரு மனிதர் (ஹஜ் செய்யும் போதும்), ”ஷுப்ருமாவின் சார்பாக நான் ஆஜராகியள்ளேன்… என்று சொல்வதை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள், ”ஷுப்ருமா யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ”என்னுடைய சகோதரன்” என்றோ, ”எனக்கு நெருக்கமானவர்” என்றோ கூறினார். (அதற்கு) ”முதலில் உனக்காக ஹஜ் செய்து கொள்! பின்னர் ஷுப்ருமா-விற்காக ஹஜ் செய்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பா!(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், இப்னு மாஜா
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மவ்கூஃப் எனும் தரமே மேலோங்கியள்ளதாக அஹ்மதில் உள்ளது.

720- وَعَنْهُ قَالَ: خَطَبَنَا رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: (( ” إِنَّ اَللَّهَ كَتَبَ عَلَيْكُمُ اَلْحَجَّ ” فَقَامَ اَلْأَقْرَعُ بْنُ حَابِسٍ فَقَالَ: أَفِي كَلِّ عَامٍ يَا رَسُولَ اَللَّهِ? قَالَ: ” لَوْ قُلْتُهَا لَوَجَبَتْ, اَلْحَجُّ مَرَّةٌ, فَمَا زَادَ فَهُوَ تَطَوُّعٌ ” )) رَوَاهُ اَلْخَمْسَةُ, غَيْرَ اَلتِّرْمِذِيِّ

720 நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை எங்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ”அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கியுள்ளான்” என்று கூறினார்கள். அப்போது அக்ரஉ இப்னு ஜாபிஸ்(ரலி) எழுந்து நின்று ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது ஒவ்வொரு வருடமுமா?” என்று கேட்டார். (அதற்கு) ”நான் அப்படிச் சொன்னால் அது கடமையாகி விடும். ஹஜ் என்பது ஒருமுறை தான். அதற்கு மேல் செய்வது உபரியாகி விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்,அபூ தாவூத், நஸாயீ, மற்றும் இப்னுமாஜா

721- وَأَصْلُهُ فِي مُسْلِمٍ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ

720 இதன் (7208வது ஹதீஸின்) மூலம் அபூஹுரைரா(ரலி) வாயிலாக முஸ்லிமிலும் உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Thursday, 14 March 2019

புலூகுல் மராம் (தொடர்-14)

بَابُ اَلِاعْتِكَافِ وَقِيَامِ رَمَضَانَ

அத்தியாயம் – 5 நோன்பு பற்றிய நூல்
பாடம்-2: இஃதிகாப் மற்றும் ரமளான் இரவுகளில் நின்று வணங்குதல்.

697- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا, غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ )) مُتَّفَقٌ عَلَيْهِ

697 ”இறை நம்பிக்கையோடும், நன்மையை நாடியும் எவர் ரமளானில் (இரவுகளில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

698- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: (( كَانَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم إِذَا دَخَلَ اَلْعَشْرُ -أَيْ: اَلْعَشْرُ اَلْأَخِيرُ مِنْ رَمَضَانَ- شَدَّ مِئْزَرَهُ, وَأَحْيَا لَيْلَهُ, وَأَيْقَظَ أَهْلَهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ

698 நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய இறுதிப் பத்து நாட்களை அடைந்து விட்டால், வரிந்து கட்டிக் கொண்டு இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பார்கள் (வணக்க வழிபாடுகளில் ஈடுபட) தம்முடைய குடும்பத்தார்களையும் எழுப்பி விடுவார்கள்” என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

699- وَعَنْهَا: (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يَعْتَكِفُ اَلْعَشْرَ اَلْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ, حَتَّى تَوَفَّاهُ اَللَّهُ, ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ )) مُتَّفَقٌ عَلَيْهِ

699 நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மரணத்தை அளிக்கும் வரை ரமளானுடைய இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்கள் மரணமடைந்த பின்பு அவர்களுடைய மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

700- وَعَنْهَا قَالَتْ: (( كَانَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى اَلْفَجْرَ, ثُمَّ دَخَلَ مُعْتَكَفَهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ

700 நபி(ஸல்) அவர்கள் இஃதி காஃப் இருக்க விரும்பினால், ஃபஜ்ர் தொழுவார்கள். பின்னர் இஃதிகாஃபில் நுழைந்து விடுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

701- وَعَنْهَا قَالَتْ: (( إِنْ كَانَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ -وَهُوَ فِي اَلْمَسْجِدِ- فَأُرَجِّلُهُ, وَكَانَ لَا يَدْخُلُ اَلْبَيْتَ إِلَّا لِحَاجَةٍ, إِذَا كَانَ مُعْتَكِفًا )) مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ

701 நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் நிலையில் என் பக்கம் தம் தலையை நீட்டுவார்கள். நான் தலையை சீவி விடுவேன். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது தம்முடைய சுய தேவைக்காகவே தவிர வீட்டினுள் நுழைய மாட்டார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

702- وَعَنْهَا قَالَتْ: (( اَلسُّنَّةُ عَلَى اَلْمُعْتَكِفِ أَنْ لَا يَعُودَ مَرِيضًا, وَلَا يَشْهَدَ جِنَازَةً, وَلَا يَمَسَّ امْرَأَةً, وَلَا يُبَاشِرَهَا, وَلَا يَخْرُجَ لِحَاجَةٍ, إِلَّا لِمَا لَا بُدَّ لَهُ مِنْهُ, وَلَا اعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ )) رَوَاهُ أَبُو دَاوُدَ, وَلَا بَأْسَ بِرِجَالِهِ, إِلَّا أَنَّ اَلرَّاجِحَ وَقْفُ آخِرِهِ

702 ”நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லாமலும், ஜனாஸாவில் கலந்து கொள்ளாமலும், பெண்ணைத் தொடாமலும், அவளைக் கட்டியணைக்காமலும், தன்னுடைய முக்கியத் தேவைக்கன்றி வேறு எதற்காகவும் பள்ளிவாசலை விட்டு வெளியில் வராமலும் இருப்பது இஃதிகாஃப் இருப்பவர் மீது சுன்னத்தாகும். இன்னும் நோன்பில்லாமல் இஃதிகாப் இல்லை. மேலும் தொழுகைக்காக மக்கள் கூடுகின்ற பள்ளிவாசலில் தவிர வேறு எங்கும் இல்லை” என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
குறிப்பு: இறுதி பகுதி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது என்பதே சரியான சொல்

703- وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( لَيْسَ عَلَى اَلْمُعْتَكِفِ صِيَامٌ إِلَّا أَنْ يَجْعَلَهُ عَلَى نَفْسِهِ )) رَوَاهُ اَلدَّارَقُطْنِيُّ وَالْحَاكِمُ, وَالرَّاجِحُ وَقْفُهُ أَيْضًا

703 ”தனக்குத் தானே விதித்துக் கொண்டதைத் தவிர இஃதிகாஃப் இருப்பவர் மீது வேறு எந்த நோன்பும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ, ஹாம்கி
இதில் மவ்கூஃப் என்னும் தரத்தில் அமைந்த ஹதீஸ்.

704- وَعَنْ اِبْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا: (( أَنَّ رِجَالاً مِنْ أَصْحَابِ اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أُرُوا لَيْلَةَ اَلْقَدْرِ فِي اَلْمَنَامِ, فِي اَلسَّبْعِ اَلْأَوَاخِرِ, فَقَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم “أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي اَلسَّبْعِ اَلْأَوَاخِرِ, فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي اَلسَّبْعِ اَلْأَوَاخِرِ )) مُتَّفَقٌ عَلَيْهِ

704 நபித்தோழர்களில் சிலருக்கு லைலத்துல் கத்ரு பிந்திய இரவில் (இருப்தாக) கனவில் காண்பிக்கப்பட்டது. இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள், ”உங்கள் கனவுகள் எல்லாம் (ரமளானில்) கடைசி ஏழு நாட்களிலேயே சேர்ந்து அமைந்திருப்பதை நான் காண்கிறேன். எவராவது அதைத் தேடுபவராக இருப்பின் கடைசி ஏழு நாட்களில் தேடிக் கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

705- وَعَنْ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا, عَنْ اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ فِي لَيْلَةِ الْقَدْرِ: (( لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ )) رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالرَّاجِحُ وَقْفُهُ .
وَقَدْ اِخْتُلِفَ فِي تَعْيِينِهَا عَلَى أَرْبَعِينَ قَوْلًا أَوْرَدْتُهَا فِي ” فَتْحِ اَلْبَارِي “

705 லைலத்துல்கத்ர் இரவைப் பற்றிக் குறிப்பிடுகையில், ”அது 27வது இரவு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆவியா இப்னு அபீஸுஃப்யான்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது முஆவியா (ரலி) உடைய சொல் என்பது தான் சரியானது
இது மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது இது சம்பந்தமாக ஃபத்ஹுல் பாரீ
(புகாரியின் விரிவிரை)யில் 40 கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

706- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: (( قُلْتُ يَا رَسُولَ اَللَّهِ : أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيَّ لَيْلَةٍ لَيْلَةُ اَلْقَدْرِ, مَا أَقُولُ فِيهَا? قَالَ: ” قُولِي: اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ اَلْعَفْوَ فَاعْفُ عَنِّي ” )) رَوَاهُ اَلْخَمْسَةُ, غَيْرَ أَبِي دَاوُدَ, وَصَحَّحَهُ اَلتِّرْمِذِيُّ, وَالْحَاكِمُ

706 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! லைலத்துல் கத்ர் எதுவென அறிந்து கொண்டால் நான் என்ன கூறுவது?” என்று கேட்டதற்கு, ”யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிக்க கூடியவன்; மன்னிப்பை விரும்புபவன்; என்னை மன்னிப்பாயாக! என்று கூறவும்” என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
இது திர்மிதீ மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

707- وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم : (( لَا تُشَدُّ اَلرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: اَلْمَسْجِدِ اَلْحَرَامِ, وَمَسْجِدِي هَذَا, وَالْمَسْجِدِ اَلْأَقْصَى )) مُتَّفَقٌ عَلَيْهِ

707 ”மஸ்ஜிதுல்ஹராம் என்னுடைய இந்த மஸ்ஜித் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறு எந்தப் பள்ளிவாசலுக்கும் செல்ல (விசேஷ) பயணத் தயாரிப்புகளை மேற்கொள்ளாதீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Wednesday, 13 March 2019

புலூகுல் மராம் (தொடர்-13)

அத்தியாயம் – 5 நோன்பு பற்றிய நூல்
பாடம்-2: உபரியான நோன்பு, நோன்பு தடைசெய்யப்பட்ட நாட்கள் பற்றிய பாடம்

بَابُ صَوْمُ اَلتَّطَوُّعِ وَمَا نُهِيَ عَنْ صَوْمِهِ

உபரியான நோன்பு மற்றும், நோன்பு தடை செய்யப்பட்ட நாட்கள்

680- عَنْ أَبِي قَتَادَةَ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ (( أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ. قَالَ: ” يُكَفِّرُ اَلسَّنَةَ اَلْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ “, وَسُئِلَ عَنْ صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ. قَالَ: ” يُكَفِّرُ اَلسَّنَةَ اَلْمَاضِيَةَ ” وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ اَلِاثْنَيْنِ, قَالَ: ” ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ, وَبُعِثْتُ فِيهِ, أَوْ أُنْزِلَ عَلَيَّ فِيهِ ” )) رَوَاهُ مُسْلِمٌ

680 அரஃபா தின நோன்பு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ”அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை மன்னித்து விடும்” என்று கூறினார்கள். இன்னும் ஆஷூராதின நோன்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, நோன்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, ”கடந்த வருடத்தின் பாவங்களை மன்னித்து விடும்” என்று கூறினார்கள். இன்னும் அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, ”அந்நாளில் தான் நான் பிறந்தேன். அதில் நான் (நபியாக) அனுப்பப்பட்டேன். அதில் தான் என் மீது (குர்ஆன்) அருளப்பட்டது” என்று அவர்கள் கூறினார்கள் என, அபூகத்தாதா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

681- وَعَنْ أَبِي أَيُّوبَ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( مَنْ صَامَ رَمَضَانَ, ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ اَلدَّهْرِ )) رَوَاهُ مُسْلِمٌ

681 ”ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், ”பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்பாரானால், அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றாவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூப் அல்-அன்சாரி (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

682- وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا فِي سَبِيلِ اَللَّهِ إِلَّا بَاعَدَ اَللَّهُ بِذَلِكَ اَلْيَوْمِ عَنْ وَجْهِهِ اَلنَّارَ سَبْعِينَ خَرِيفًا )) مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ

682 ”எவர் அல்லாஹ்வுடைய பாதையில் ஒருநாள் நோன்பு நோற்கிறாரோ, அவருடைய முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபதாண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

683- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: (( كَانَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ, وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ, وَمَا رَأَيْتُ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم اِسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ, وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْهُ صِيَامًا فِي شَعْبَانَ )) مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ

683 நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்காமலிருக்க மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்பார்கள். இன்னும் அவர்கள் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருப்பார்கள். ரமளான் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் முழுமையாக நோன்பு நோற்றவராக நபி(ஸல்) அவர்களை நான் பார்க்கவில்லை. இன்னும் அவர்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்ற அளவு மற்ற மாதத்தில் நோன்பு நோற்று நான் பார்த்ததில்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இங்கு இடம் பெற்றுள்ளது.

684- وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( أَمَرَنَا رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَنْ نَصُومَ مِنْ اَلشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ: ثَلَاثَ عَشْرَةَ, وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ )) رَوَاهُ النَّسَائِيُّ, وَاَلتِّرْمِذِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ

684 மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, திர்மிதீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

685- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ )) مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ
وَزَادَ أَبُو دَاوُدَ: (( غَيْرَ رَمَضَانَ ))

685 ”கணவன் இருக்கும் நிலையில் அவனுடைய அனுமதியில்லாமல் ஒரு பெண் (நஃபிலான) நோன்பு நோற்பது ஆகுமானதல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது. ”ரமளானைத் தவிர” எனும் வாசகம் அபூ தாவூதில் அதிகப்படியாக உள்ளது.

686- وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ (( أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ: يَوْمِ اَلْفِطْرِ وَيَوْمِ اَلنَّحْرِ )) مُتَّفَقٌ عَلَيْهِ

686 ”யவ்முல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) இன்னும் யவ்முந் நஹ்ர் (ஹஜ்ஜுப் பெருநாள்) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

687- وَعَنْ نُبَيْشَةَ اَلْهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( أَيَّامُ اَلتَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ, وَذِكْرٍ لِلَّهِ عَزَّ وَجَلَّ )) رَوَاهُ مُسْلِمٌ

687 ”அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாளுக்குப் பின்புள்ள மூன்று நாட்கள்) உண்பதற்கும், பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உள்ள நாட்களாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுபைஷா அல்ஹுதலிய்யீ (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

688- وَعَنْ عَائِشَةَ وَابْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمْ قَالَا: (( لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ اَلتَّشْرِيقِ أَنْ يُصَمْنَ إِلَّا لِمَنْ لَمْ يَجِدِ اَلْهَدْيَ )) رَوَاهُ اَلْبُخَارِيُّ

688 பலிப்பிராணி கிடைக்காத நபரைத் தவிர்த்து மற்றவர்கள் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்க அனுமதி இல்லை என இப்னு உமர்(ரலி) மற்றும் ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி

689- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( لَا تَخْتَصُّوا لَيْلَةَ اَلْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اَللَّيَالِي, وَلَا تَخْتَصُّوا يَوْمَ اَلْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ اَلْأَيَّامِ, إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ )) رَوَاهُ مُسْلِمٌ

689 ”வெள்ளிக்கிழமை இரவன்று நின்று வணங்குவதற்கு ஏனைய இரவுகளை விட முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். வழக்கமாக (தொடர்ந்து) நோன்பு நோற்பவரைத் தவிர, வேறு எவரும் மற்ற தினங்களை விட வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

690- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ اَلْجُمُعَةِ, إِلَّا أَنْ يَصُومَ يَوْمًا قَبْلَهُ, أَوْ يَوْمًا بَعْدَهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ

690 ”உங்களில் எவரும் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்காதீர்கள். அதற்கு முன்பு ஒருநாள் அல்லது அதற்குப் பின்பு ஒருநாள் நோன்பு நோற்பதைத் தவிர” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

691- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( إِذَا اِنْتَصَفَ شَعْبَانَ فَلَا تَصُومُوا )) رَوَاهُ اَلْخَمْسَةُ, وَاسْتَنْكَرَهُ أَحْمَدُ

691 ”ஷஅபான் மாதத்தின் பாதிப்பகுதியை அடைந்துவிட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இது மறுக்க தக்க ஹதீஸ் என் அஹ்மத் (ரஹ்) கூறுகிறார்கள்.

692- وَعَنِ اَلصَّمَّاءِ بِنْتِ بُسْرٍ رَضِيَ اَللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( لَا تَصُومُوا يَوْمَ اَلسَّبْتِ, إِلَّا فِيمَا اِفْتُرِضَ عَلَيْكُمْ, فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبٍ, أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضُغْهَا )) رَوَاهُ اَلْخَمْسَةُ, وَرِجَالُهُ ثِقَاتٌ, إِلَّا أَنَّهُ مُضْطَرِبٌ.
وَقَدْ أَنْكَرَهُ مَالِكٌ.
وَقَالَ أَبُو دَاوُدَ: هُوَ مَنْسُوخٌ

692 கடமையாக்கப்பட்ட நோன்பைத் தவிர்த்து உங்களில் எவரும் சனிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்க வேண்டாம். உங்களில் எவரேனும் (அன்று எதுவும் கிடைக்கப் பெறாமல்) திராட்சைத் தோலையோ அல்லது ஏதேனும் மரக்குச்சியையோ பெற்றுக் கொண்டால், அதை (யாவது) மென்று கொள்ளவும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸம்மா பின்த்து புஸ்ர்(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
இது மாலிக்கில் முன்கர் மற்றும் அபூதாவூதில் மன்ஸூக் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூதாவூத் (ரஹ்) பின்வரும் ஹதீஸ் மூலம் இச்சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்.

693- وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا; (( أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ أَكْثَرَ مَا يَصُومُ مِنَ اَلْأَيَّامِ يَوْمُ اَلسَّبْتِ, وَيَوْمُ اَلْأَحَدِ, وَكَانَ يَقُولُ: ” إِنَّهُمَا يَوْمَا عِيدٍ لِلْمُشْرِكِينَ, وَأَنَا أُرِيدُ أَنْ أُخَالِفَهُمْ ” )) أَخْرَجَهُ النَّسَائِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ, وَهَذَا لَفْظُهُ

693 நபி(ஸல்) அவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக நோன்பு நோற்பவராக இருந்தார்கள். ”இவை இரண்டும் இணை வைப்பாளர்களின் பெருநாட்கள். நான் அவர்களுக்கு மாறு செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். நஸயீ
இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இப்னு குஸைமாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

694- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ )) رَوَاهُ اَلْخَمْسَةُ غَيْرَ اَلتِّرْمِذِيِّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ, وَالْحَاكِمُ, وَاسْتَنْكَرَهُ الْعُقَيْلِيُّ

694 அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (ஹாஜிகள்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, மற்றும் இப்னு மாஜா.
இது இப்னு குஸைமாவிலும் ஹாம்மிலும் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உகைலீ இது முன்கர் ஆன ஹதீஸ் என்று கூறுகிறார்.

695- وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( لَا صَامَ مَنْ صَامَ اَلْأَبَدَ )) مُتَّفَقٌ عَلَيْهِ

695 ”எவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாரோ அவர் நோன்பு நோற்கவே இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

696- وَلِمُسْلِمٍ عَنْ أَبِي قَتَادَةَ بِلَفْظِ: (( لَا صَامَ وَلَا أَفْطَرَ ))

696 அபூகதாதா(ரலி) வாயிலாக, ”அவர் நோன்பு நோற்கவும் இல்லை. நோன்பு நோற்காமல் இருக்கவுமில்லை” எனும் வாசகம் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Tuesday, 12 March 2019

புலூகுல் மராம் (தொடர்-12)

அத்தியாயம் – 5 நோன்பு பற்றிய நூல்
பாடம்-1: நோன்பு…. (தொடர்ச்சி)

671- وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( مَنْ ذَرَعَهُ اَلْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ, وَمَنْ اسْتَقَاءَ فَعَلَيْهِ اَلْقَضَاءُ )) رَوَاهُ اَلْخَمْسَةُ. (وَأَعَلَّهُ أَحْمَدُ.) وَقَوَّاهُ اَلدَّارَقُطْنِيُّ.

671 எவருக்கு (நோன்பு நோற்ற நிலையில்) அவரையும் மீறி வாந்தி வந்ததோ அவர் மீது (நோன்பு)களா இல்லை. இன்னும் எவர் (நோன்பு நோற்ற நிலையில் வேண்டுமென்றே வாந்தி எடுத்து விட்டாரோ, அவர் மீது (நோன்பு)களாவாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
அஹ்மதில் இது ‘மஃலூல்’ (குறையுடையது) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாரகுத்னீயில் ‘பலமானது’ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

672- وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اَللَّهِ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; (( أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم خَرَجَ عَامَ اَلْفَتْحِ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ, فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ, فَصَامَ اَلنَّاسُ, ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ, حَتَّى نَظَرَ اَلنَّاسُ إِلَيْهِ, ثُمَّ شَرِبَ, فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ اَلنَّاسِ قَدْ صَامَ. قَالَ: “أُولَئِكَ اَلْعُصَاةُ, أُولَئِكَ اَلْعُصَاةُ” )) .
وَفِي لَفْظٍ: (( فَقِيلَ لَهُ: إِنَّ اَلنَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمُ اَلصِّيَامُ, وَإِنَّمَا يَنْظُرُونَ فِيمَا فَعَلْتَ، فَدَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ بَعْدَ اَلْعَصْرِ، فَشَرِبَ )) رَوَاهُ مُسْلِمٌ

672 நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொண்ட ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கி வெளியேறினார்கள். அப்போது ‘குரா உல் கமீம்’ எனும் இடத்தை அடையும் வரை நோன்பு நோற்றார்கள். மக்களும் நோன்பு நோற்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதை உயர்த்தினார்கள். மக்கள் அனைவரும் அதைப் பார்த்தனர். நபி(ஸல்) அவர்கள் அதனைக் குடித்து விட்டார்கள். அதற்குப் பின்னரும் சிலர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் என்ற செய்தி அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு ”அவர்கள் பாவிகள்! அவர்கள் பாவிகள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.
(அப்போது) நிச்சயமாக அந்த மக்களுக்கு நோன்பு நோற்பது கஷ்டமாக இருக்கிறது. அவர்கள், (நபியாகிய) தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்குப் பின் அதைக் குடித்தார்கள் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

673- وَعَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ رِضَى اَللَّهُ عَنْهُ; أَنَّهُ قَالَ: (( يَا رَسُولَ اَللَّهِ! أَجِدُ بِي قُوَّةً عَلَى اَلصِّيَامِ فِي اَلسَّفَرِ, فَهَلْ عَلَيَّ جُنَاحٌ? فَقَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم ” هِيَ رُخْصَةٌ مِنَ اَللَّهِ, فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ, وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ ” )) رَوَاهُ مُسْلِمٌ

673 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவனாக இருக்கிறேன். அதனால் என் மீது குற்றமாகுமா?” என்று நான் கேட்டதற்கு, ”இது அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ள சலுகையாகும். எவர் அதை எடுத்துக் கொண்டாரோ அவர் சிறப்படைந்தார். இன்னும் எவர் நோன்பு நோற்க விரும்பினாரோ அவர் மீது குற்றமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
وَأَصْلُهُ فِي ” اَلْمُتَّفَقِِ ” مِنْ حَدِيثِ عَائِشَةَ; (( أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو سَأَلَ ))
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) கேட்டதாக ஆயிஷா(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

674- وَعَنِ اِبْنِ عَبَّاسٍ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- قَالَ: (( رُخِّصَ لِلشَّيْخِ اَلْكَبِيرِ أَنْ يُفْطِرَ, وَيُطْعِمَ عَنْ كُلِّ يَوْمٍ مِسْكِينًا, وَلَا قَضَاءَ عَلَيْهِ )) رَوَاهُ اَلدَّارَقُطْنِيُّ, وَالْحَاكِمُ, وَصَحَّحَاهُ

674 ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக, ஓர் ஏழைக்கு ஸஹர் மற்றும் இப்தார், உணவு உண்ணச் செய்ய வேண்டும். களா செய்ய வேண்டியது இல்லை என்று வயோதிகர்களுக்கு நபி(ஸல்) அவர்களால் சலுகை அளிக்கப்ட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னி, ஹாம்கி
இரண்டிலும் இது ”ஸஹீஹ்” எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

675- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( جَاءَ رَجُلٌ إِلَى اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: هَلَكْتُ يَا رَسُولَ اَللَّهِ. قَالَ: ” وَمَا أَهْلَكَكَ ? ” قَالَ: وَقَعْتُ عَلَى اِمْرَأَتِي فِي رَمَضَانَ، فَقَالَ: ” هَلْ تَجِدُ مَا تَعْتِقُ رَقَبَةً? ” قَالَ: لَا. قَالَ: ” فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ? ” قَالَ: لَا. قَالَ: ” فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا? ” قَالَ: لَا, ثُمَّ جَلَسَ, فَأُتِي اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ. فَقَالَ: ” تَصَدَّقْ بِهَذَا “, فَقَالَ: أَعَلَى أَفْقَرَ مِنَّا? فَمَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا, فَضَحِكَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: “اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ ” )) رَوَاهُ اَلسَّبْعَةُ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ

675 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்” என்று கூறியதற்கு, ”எது உன்னை அழித்தது?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”ரமளானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று கூறினார். ”உன்னால் ஒர் அடிமையை விடுதலை செய்ய இயலுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ”இயலாது” என்றார். ”அப்படியானால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் ”இயலாது” என்றார்.
பின்னர் (அங்கேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சாக்கு கொடுக்கப்பட்டது. அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன. (அதை அவரிடம் வழங்கி) ”இதை தர்மம் செய்வீராக!” என்றனர். அதற்கவர், ”எங்களை விட ஏழைகளுக்கா? இந்த மதீனாவிற்குள் எங்களை விட ஏழைகள் எவரும் இல்லையே?” என்றார். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள். ”நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக!” என்றும் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், புகாரீ, முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, திர்மிதி, மற்றும் இப்னு மாஜா.
இங்கு முஸ்லிமின் வாசம் இடம் பெற்றுள்ளது.

676- وَعَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ, ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ )) مُتَّفَقٌ عَلَيْهِ.
زَادَ مُسْلِمٌ فِي حَدِيثِ أُمِّ سَلَمَةَ : ] وَ لَا يَقْضِي[

676 நபி(ஸல்) அவர்கள் உடலுறவு கொண்டு, குளிப்பு கடமையான நிலையில் காலை நேரத்தை அடைந்து பின்னர் குளிப்பார்கள். மேலும் நோன்பு நோற்பார்கள் என்று ஆயிஷா மற்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார் புகாரீ, முஸ்லிம்
‘அவர்கள் களாச் செய்யமாட்டார்கள்’ எனும் வாசகம் உம்மு ஸலமா(ரலி) வாயிலாக முஸ்லிமில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
677- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا; أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ
677 ”தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் எவர் இறந்து விடுகிறாரோ அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளர் நோற்கட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
புகாரீ, முஸ்லிம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Monday, 11 March 2019

புலூகுல் மராம் (தொடர்-11)

அத்தியாயம் – 5 நோன்பு பற்றிய நூல்
பாடம்-1: நோன்பு…. (தொடர்ச்சி)

661- وَعَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ اَلضَّبِّيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ, فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ, فَإِنَّهُ طَهُورٌ )) رَوَاهُ اَلْخَمْسَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ وَابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ

661 ”உங்களில் எவரேனும் நோன்பைத் துறந்தால், அவர் பேரீச்சம்பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். அது அவருக்குக் கிடைக்கவில்லை எனில், தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சுலைமான் இப்னு ஆமிர் அள்ளப்பிய்யி(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் என்னும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

662- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( نَهَى رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم عَنِ اَلْوِصَالِ, فَقَالَ رَجُلٌ مِنَ اَلْمُسْلِمِينَ: فَإِنَّكَ يَا رَسُولَ اَللَّهِ تُوَاصِلُ? قَالَ: ” وَأَيُّكُمْ مِثْلِي? إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي “. فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ اَلْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا, ثُمَّ يَوْمًا, ثُمَّ رَأَوُا اَلْهِلَالَ, فَقَالَ: ” لَوْ تَأَخَّرَ اَلْهِلَالُ لَزِدْتُكُمْ ” كَالْمُنَكِّلِ لَهُمْ حِينَ أَبَوْا أَنْ يَنْتَهُوا )) مُتَّفَقٌ عَلَيْهِ

662 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை செய்தார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவர், ”நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டதற்கு, ”உங்களில் யார் என்னைப் போன்றுள்ளார்? என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான். நீர் புகட்டுகின்றான்” என்று சொன்னார்கள். தொடர் நோன்பைக் கைவிட அவர்கள் மறுத்த போது அவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் தொடர் நோன்பு நோற்றார்கள். மறுநாளும் நோற்றார்கள். பின்னர் பிறையைக் கண்டார்கள். பின்னர் பிறையைக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ”பிறை தெரியத் தாமதமாம் இருந்தால் நான் இன்னும் அதிகமாக உங்களை நோன்பு நோற்கச் செய்திருப்பேன்” என்று அவர்கள் தொடர் நோன்பை கைவிட மறுத்ததைக் கண்டிப்பது போல் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

663- وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( مَنْ لَمْ يَدَعْ قَوْلَ اَلزُّورِ وَالْعَمَلَ بِهِ, وَالْجَهْلَ, فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ )) رَوَاهُ اَلْبُخَارِيُّ, وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ

663 ”எவர் பொய் சொல்வதையும், அதன்படி செயல்படுவதையும், அறிவீனமாக நடப்பதையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவது அல்லாஹ்விற்குத் தேவை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

664- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: (( كَانَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ, وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ, وَلَكِنَّهُ أَمْلَكُكُمْ لِإِرْبِهِ )) مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ
وَزَادَ فِي رِوَايَةٍ: (( فِي رَمَضَانَ ))

664 நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.
புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம்பெற்றுள்ளது. மற்றொரு அறிவிப்பில் ‘(இது) ரமழானில்’ என்று உள்ளது

665- وَعَنِ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم اِحْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ, وَاحْتَجَمَ وَهُوَ صَائِمٌ )) رَوَاهُ اَلْبُخَارِيُّ

665 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

666- وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللهُ عَنْهُ (( أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَتَى عَلَى رَجُلٍ بِالْبَقِيعِ وَهُوَ يَحْتَجِمُ فِي رَمَضَانَ. فَقَالَ: ” أَفْطَرَ اَلْحَاجِمُ [ وَالْمَحْجُومُ ] ” )) رَوَاهُ اَلْخَمْسَةُ إِلَّا اَلتِّرْمِذِيَّ, وَصَحَّحَهُ أَحْمَدُ, وَابْنُ خُزَيْمَةَ, وَابْنُ حِبَّانَ

666 நபி(ஸல்) அவர்கள் பகீஃ எனும் இடத்தில் ரமளான் மாதத்தில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் வந்து ”இரத்தம் குத்தி எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் நோன்பை முறித்துக் கொண்டார்” என்று கூறினார்கள் என, ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, மற்றும் இப்னுமாஜா
அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

667- وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( أَوَّلُ مَا كُرِهَتِ اَلْحِجَامَةُ لِلصَّائِمِ; أَنَّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ اِحْتَجَمَ وَهُوَ صَائِمٌ, فَمَرَّ بِهِ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: ” أَفْطَرَ هَذَانِ “, ثُمَّ رَخَّصَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بَعْدُ فِي اَلْحِجَامَةِ لِلصَّائِمِ, وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ )) رَوَاهُ اَلدَّارَقُطْنِيُّ وَقَوَّاهُ

687 ஜஃபர் இப்னு அபீதாலிப் அவர்கள். நோன்பு நோற்ற நிலையில் இரத்தம் குத்தி எடுக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் அவரைக் கடந்து செல்கையில், ”இருவரும் நோன்பை முறித்துக் கொண்டனர்” என்று கூறினார்கள். (அப்போது இரத்தம் குத்தி எடுப்பது தடுக்கப்பட்டிருந்தது). அப்போது தான் நான் நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வது, விரும்பத் தகாததாக ஆக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். பின்னர் நபி(ஸல்) அவர்கள் நோன்பாளிகளுக்கு இரத்தம் குத்தி எடுத்துக் கொள்ள சலுகை அளித்து விட்டார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் அனஸ்(ரலி) அவர்கள், இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள் என்று அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். தாரகுத்னி
இது பலமான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸாகும் என்று தாரகுத்னீ கூறுகிறார்

668- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا, (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم اِكْتَحَلَ فِي رَمَضَانَ, وَهُوَ صَائِمٌ )) رَوَاهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
قَالَ اَلتِّرْمِذِيُّ: لَا يَصِحُّ فِيهِ شَيْءٌ

668 நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் சுர்மா போட்டுக் கொண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எந்த ஒரு ஹதீஸும் ஸஹீஹ் எனும் தரத்தில் இல்லையென திர்மிதீயில் உள்ளது.

669- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ, فَأَكَلَ أَوْ شَرِبَ, فَلْيُتِمَّ صَوْمَهُ, فَإِنَّمَا أَطْعَمَهُ اَللَّهُ وَسَقَاهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ

669 எவர் நோன்பிருக்கும் நிலையில் மறதியாக உண்ணுகிறாரோ, பருகுகிறாரோ அவர் தம்முடைய நோன்பைப் பூர்த்தியாக்கிக் கொள்ளட்டும். (நோன்பை முறித்து விட வேண்டாம்). ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணச் செய்தான், பருகச் செய்தான் என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

670- وَلِلْحَاكِمِ: (( مَنْ أَفْطَرَ فِي رَمَضَانَ نَاسِيًا فَلَا قَضَاءَ عَلَيْهِ وَلَا كَفَّارَةَ )) وَهُوَ صَحِيحٌ

670 ”எவர் ரமளான் மாதத்தில் மறதியாக நோன்பை முறித்து விட்டாரோ, அவர் மீது களாவும் இல்லை; பரிகாரமும் இல்லை” என்று ஹாகிமில் இடம் பெற்றுள்ளது. மேலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Sunday, 10 March 2019

புலூகுல் மராம் (தொடர்-10)

புனித ரமழான் மாதத்தை அடைய இருப்பதால் நோன்பு சம்மந்மான ஹதீஸ்களை பதிவு செய்கின்றோம் இதற்க்கு பிறகு ஏனைய பகுதிகள் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் ((வெப் மாஸ்டர்))
அத்தியாயம்-5: நோன்பு பற்றிய நூல்
பாடம்-1: நோன்பு

كِتَابُ اَلصِّيَامِ

நோன்பு

650- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( لَا تَقَدَّمُوا رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ وَلَا يَوْمَيْنِ, إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا, فَلْيَصُمْهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ

650 ”ஓரிரு நாட்கள் நோன்புடன் ரமளானை எதிர் கொள்ளாதீர்கள். எவரேனும் வேறு நோன்பு நோற்பவராக இருப்பின் அவர் நோற்றுக் கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

651- وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( مَنْ صَامَ اَلْيَوْمَ اَلَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا اَلْقَاسِمِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم )) وَذَكَرَهُ اَلْبُخَارِيُّ تَعْلِيقًا, وَوَصَلَهُ اَلْخَمْسَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ, وَابْنُ حِبَّانَ

651 ”சந்தேகத்திற்குரிய நாளில் எவர் நோன்பு நோற்றாரோ, அவர், அபுல் காஸிமுக்கு (எனக்கு) மாறு செய்தார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவிக்கிறார்.
இது புகாரீயில் ‘முஅல்லக்’ எனும் தரத்திலும், மவ்ஸூல் எனும் தரத்தில் அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸாயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் ஆகியோர் இதை பலமான ஹதீஸ் எனக் கூறியுள்ளார்கள்.

652- وَعَنِ اِبْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا [ قَالَ ]: سَمِعْتُ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَقُولُ: (( إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا, وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا, فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ .
وَلِمُسْلِمٍ: (( فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدُرُوا [ لَهُ ] ثَلَاثِينَ ))
وَلِلْبُخَارِيِّ: (( فَأَكْمِلُوا اَلْعِدَّةَ ثَلَاثِينَ ))

652 ”பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். இன்னும் பிறையைப் பார்த்து நோன்பை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மேகம் சூழ்ந்திருந்தால் அதற்காக (நாட்களைக்) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
”உங்களுக்கு மேகமூட்டதால் சந்தேகம் ஏற்படுமாயின் அதற்காக முப்பது (நாட்களைக்) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று முஸ்லிமிலும், ”முப்பது நாட்களை பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்” என்று புகாரீயிலும் உள்ளது.

653- وَلَهُ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ (( فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ ))

653 புகாரீயுடைய மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா(ரலி) வாயிலாக, ”ஷஅபானுடைய முப்பது நாட்களைக் பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்” என்று உள்ளது.

654- وَعَنِ اِبْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: (( تَرَاءَى اَلنَّاسُ اَلْهِلَالَ, فَأَخْبَرْتُ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَنِّي رَأَيْتُهُ, فَصَامَ, وَأَمَرَ اَلنَّاسَ بِصِيَامِهِ )) رَوَاهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ, وَالْحَاكِمُ

654 மக்கள் பிறையைப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் நானும் பார்த்தாகச் செய்தி கொடுத்தேன். (அதனால்) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

655- وَعَنِ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: (( إِنِّي رَأَيْتُ اَلْهِلَالَ, فَقَالَ: ” أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اَللَّهُ? ” قَالَ: نَعَمْ. قَالَ: ” أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اَللَّهِ? ” قَالَ: نَعَمْ. قَالَ: ” فَأَذِّنْ فِي اَلنَّاسِ يَا بِلَالُ أَنْ يَصُومُوا غَدًا” )) رَوَاهُ اَلْخَمْسَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ, وَابْنُ حِبَّانَ وَرَجَّحَ النَّسَائِيُّ إِرْسَالَهُ

655 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பிறையைப் பார்த்து விட்டேன்” என்று கூறினார். அதற்கு, ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என, நீ சாட்சி கூறுகிறாயா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கவர் ‘ஆம்’ என்றார். (பின்னர்) நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கவர் ‘ஆம்’ என்றார். (பின்னர்) ‘பிலாலே! நாளை நோன்பு நோக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான் ஸஹீஹ் என்று கூறுகின்றார்கள் முர்ஸல் எனும் தரத்திலான ஹதீஸ் என்று நஸயீ கூறுகிறார்.

656- وَعَنْ حَفْصَةَ أُمِّ اَلْمُؤْمِنِينَ رَضِيَ اَللَّهُ عَنْهَا, عَنِ اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( مَنْ لَمْ يُبَيِّتِ اَلصِّيَامَ قَبْلَ اَلْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ )) رَوَاهُ اَلْخَمْسَةُ, وَمَالَ النَّسَائِيُّ وَاَلتِّرْمِذِيُّ إِلَى تَرْجِيحِ وَقْفِهِ, وَصَحَّحَهُ مَرْفُوعًا اِبْنُ خُزَيْمَةَ وَابْنُ حِبَّانَ .
وَلِلدَّارَقُطْنِيِّ: (( لَا صِيَامَ لِمَنْ لَمْ يَفْرِضْهُ مِنَ اَللَّيْلِ ))

656 ”ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் எவர் நோன்பிற்கான நிய்யத் (எண்ணம்) கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஃப்ஸா (ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
திர்மிதீ மற்றும் நஸயீயில் இது மவ்கூஃப் எனும் தரத்தைப் பெற்றுள்ளது. இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் மர்ஃபூஃ ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ”இரவில் எவர் (நோன்பிற்கான) நிய்யத் செய்யவில்லையோ, அவருக்கு நோன்பு இல்லை’ எனும் வாசகம் தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது.

657- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: (( دَخَلَ عَلَيَّ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم ذَاتَ يَوْمٍ. فَقَالَ: ” هَلْ عِنْدَكُمْ شَيْءٌ? ” قُلْنَا: لَا. قَالَ: ” فَإِنِّي إِذًا صَائِمٌ ” ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ, فَقُلْنَا: أُهْدِيَ لَنَا حَيْسٌ, فَقَالَ: ” أَرِينِيهِ, فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا ” فَأَكَلَ )) رَوَاهُ مُسْلِمٌ

657 ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து ”(உண்பதற்கு) ஏதாவது உள்ளதா?” என்று கேட்டார்கள். நாங்கள் ”இல்லை” என்றோம். அப்போது அவர்கள், ”நான் நோன்பாளியாக உள்ளேன்” என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு நாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். ”அன்பளிப்பாக பேரீச்சம் பழம், பலாடைக்கட்டி, நெய் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பாயாசம் கொஞ்சம் வந்துள்ளது ” என்று நான் கூறினேன். ”அதைக் கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள். பின்னர் அதை உண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

658- وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا, أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( لَا يَزَالُ اَلنَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا اَلْفِطْرَ )) مُتَّفَقٌ عَلَيْهِ

658 (சூரியன் மறைந்தவுடன்) ”நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சஅத்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

659- وَلِلتِّرْمِذِيِّ: مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( قَالَ اَللَّهُ عَزَّ وَجَلَّ: أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا ))

659 (சூரியன் மறைந்தவுடன் விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

660- وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( تَسَحَّرُوا فَإِنَّ فِي اَلسَّحُورِ بَرَكَةً )) مُتَّفَقٌ عَلَيْهِ

660 ”ஸஹர் செய்யுங்கள் (சாப்பிடுங்கள்) ஏனெனில், அதில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்…