அத்தியாயம்-1: பாடம்-2: பாத்திரங்கள்
بَابُ الْآنِيَةِ
பாத்திரங்கள்
16- عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ الْلَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( لَا تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ والْفِضَّةِ، وَلَا تَأْكُلُوا فِي صِحَافِهَا، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا، وَلَكُمْ فِي الْآخِرَةِ )) مُتَّفَقٌ عَلَيْهِ
16 ”தங்கப் பாத்திரங்களிலும் வெள்ளிப் பாத்திரங்களிலும் பருகாதீர்கள், இன்னும் அத்தட்டுகளில் சாப்பிடாதீர்கள். ஏனெனில், அவை உலகில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்குரியதாகும்; மறுமையில் உங்களுக்கு உரியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவிக்கிறார். (புகாரீ, முஸ்லிம்)
17- وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ الْلَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ الْلَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ )) مُتَّفَقٌ عَلَيْهِ
17 ”எவர் வெள்ளிப் பாத்திரங்களில் பருகுகின்றாரோ அவர் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பைக் கொட்டிக் கொள்கிறார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். (புகாரீ, முஸ்லிம்)
18- وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الْلَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ الْلَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ )) أَخْرَجَهُ مُسْلِمٌ
18 ”தோல் பதனிடப்பட்டு விட்டால் அது தூய்மையாகி விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். (முஸ்லிம்)
. وَعِنْدَ الْأَرْبَعَةِ: (( أَيُّمَا إِهَابٍ دُبِغَ ))
இப்னு அப்பாஸ் (ரலி) வாயிலாக, எந்தத் தோலானாலும் பதனிடப்பட்டு விட்டால் (அது தூய்மையாகி விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸலமா இப்னு அல் முஹய்யிக் (ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான்
19- وَعَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ الْلَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( دِبَاغُ جُلُودِ الْمَيْتَةِ طُهُورُهاَ )) صَحَّحَهُ ابْنُ حِبَّانَ
19 ”இறந்து போன கால்நடைகளின் தோல்கள் பதனிடப்பட்டு விட்டால் அது தூய்மையாகிவிடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸலமா இப்னு அல் முஹய்யிக்(ரலி) அறிவிக்கிறார்.
இப்னு ஹிப்பான. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்னு ஹிப்பான. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20- وَعَنْ مَيْمُونَةَ رَضِيَ الْلَّهُ عَنْهَا، قَالَتْ: (( مَرَّ رَسُولُ الْلَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِشَاةٍ يَجُرُّونَهَا، فَقَالَ: “لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا؟” فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ: “يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرَظُ” )) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ
20 இறந்து போன ஆட்டை இழுத்துச் சென்றோரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது, ”அதனுடைய தோலை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே?” என்று கூறினார்கள். அதற்கவர்கள் ”அது தானாக செத்தாயிற்றே?” என்று பதிலளித்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”அதைத் தண்ணீர் மற்றும் ஆவாரம்பட்டை சுத்தம் செய்துவிடும்” என்று கூறினார்கள் என மைமூனா(ரலி) அறிவிக்கிறார். (அபூ தாவூத், நஸாயீ)
21- وَعَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( قُلْتُ: يَا رَسُولَ الْلَّهِ، إِنَّا بِأَرْضِ قَوْمٍ أَهْلِ كِتَابٍ، أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ؟]فـَ] قَالَ: “لَا تَأْكُلُوا فِيهَا، إِلَّا أَنْ لَا تَجِدُوا غَيْرَهَا، فَاغْسِلُوهَا، وَكُلُوا فِيهَا” )) مُتَّفَقٌ عَلَيْهِ
21 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வேதம் கொடுக்கப்பட்டோரின் நாட்டில் நாங்கள் வசிக்கின்றோம். எனவே அவர்களது பாத்திரங்களில் நாங்கள் உண்ணலாமா?” என்று நான் கேட்டேன். அதற்கு ”அவற்றில் நீங்கள் உண்ணாதீர்கள்! உங்களுக்கு வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையெனில், அவற்றைக் கழுவிவிட்டு அவற்றில் உண்ணுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூ ஸஅலபா அல் குஷனிய்யீ(ரலி) அறிவிக்கிறார். (புகாரீ, முஸ்லிம்)
22- وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ الْلَّهُ عَنْهُمَا؛ (( أَنَّ النَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَأَصْحَابَهُ تَوَضَّئُوا مِنْ مَزَادَةِ اِمْرَأَةٍ مُشْرِكَةٍ )) مُتَّفَقٌ عَلَيْهِ، فِي حَدِيثٍ طَوِيلٍ
22 ”(இறைவனுக்கு) இணை வைக்கும் ஒரு பெண்ணுடைய தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீரைக் கொண்டு நபி(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உளூ செய்தார்கள்” என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) <<புகாரீ, முஸ்லிம்>>
23- وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ (( أَنَّ قَدَحَ النَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم اِنْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ)) أَخْرَجَهُ الْبُخَارِيُّ
23 ”நபி(ஸல்) அவர்களுடைய பாத்திரம் ஒன்று உடைந்து விட்டது. அவர்கள் ஒட்டை விழுந்த இடத்தில் அவர்கள் ஒட்டை விழுந்த இடத்தில் வெள்ளித் துண்டினால் அடைத்தார்கள்” (3) என, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
குறிப்பு: (3) அதாவது தங்கம் வெள்ளிப்பாத்திரங்களில் உண்ணுதல் பருகுதல் மட்டும் தான் தடைசெய்யப்பட்டுள்ளது. பாத்திரத்தின் ஓட்டையை அடைத்துக் கொள்வதோ சிறிய ஓட்டைகளை மூடிக்கொள்வதோ குற்றமாகாது
No comments:
Post a Comment