Tuesday, 12 March 2019

புலூகுல் மராம் (தொடர்-12)

அத்தியாயம் – 5 நோன்பு பற்றிய நூல்
பாடம்-1: நோன்பு…. (தொடர்ச்சி)

671- وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( مَنْ ذَرَعَهُ اَلْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ, وَمَنْ اسْتَقَاءَ فَعَلَيْهِ اَلْقَضَاءُ )) رَوَاهُ اَلْخَمْسَةُ. (وَأَعَلَّهُ أَحْمَدُ.) وَقَوَّاهُ اَلدَّارَقُطْنِيُّ.

671 எவருக்கு (நோன்பு நோற்ற நிலையில்) அவரையும் மீறி வாந்தி வந்ததோ அவர் மீது (நோன்பு)களா இல்லை. இன்னும் எவர் (நோன்பு நோற்ற நிலையில் வேண்டுமென்றே வாந்தி எடுத்து விட்டாரோ, அவர் மீது (நோன்பு)களாவாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
அஹ்மதில் இது ‘மஃலூல்’ (குறையுடையது) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாரகுத்னீயில் ‘பலமானது’ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

672- وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اَللَّهِ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; (( أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم خَرَجَ عَامَ اَلْفَتْحِ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ, فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ, فَصَامَ اَلنَّاسُ, ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ, حَتَّى نَظَرَ اَلنَّاسُ إِلَيْهِ, ثُمَّ شَرِبَ, فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ اَلنَّاسِ قَدْ صَامَ. قَالَ: “أُولَئِكَ اَلْعُصَاةُ, أُولَئِكَ اَلْعُصَاةُ” )) .
وَفِي لَفْظٍ: (( فَقِيلَ لَهُ: إِنَّ اَلنَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمُ اَلصِّيَامُ, وَإِنَّمَا يَنْظُرُونَ فِيمَا فَعَلْتَ، فَدَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ بَعْدَ اَلْعَصْرِ، فَشَرِبَ )) رَوَاهُ مُسْلِمٌ

672 நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொண்ட ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கி வெளியேறினார்கள். அப்போது ‘குரா உல் கமீம்’ எனும் இடத்தை அடையும் வரை நோன்பு நோற்றார்கள். மக்களும் நோன்பு நோற்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதை உயர்த்தினார்கள். மக்கள் அனைவரும் அதைப் பார்த்தனர். நபி(ஸல்) அவர்கள் அதனைக் குடித்து விட்டார்கள். அதற்குப் பின்னரும் சிலர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் என்ற செய்தி அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு ”அவர்கள் பாவிகள்! அவர்கள் பாவிகள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.
(அப்போது) நிச்சயமாக அந்த மக்களுக்கு நோன்பு நோற்பது கஷ்டமாக இருக்கிறது. அவர்கள், (நபியாகிய) தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்குப் பின் அதைக் குடித்தார்கள் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

673- وَعَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ رِضَى اَللَّهُ عَنْهُ; أَنَّهُ قَالَ: (( يَا رَسُولَ اَللَّهِ! أَجِدُ بِي قُوَّةً عَلَى اَلصِّيَامِ فِي اَلسَّفَرِ, فَهَلْ عَلَيَّ جُنَاحٌ? فَقَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم ” هِيَ رُخْصَةٌ مِنَ اَللَّهِ, فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ, وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ ” )) رَوَاهُ مُسْلِمٌ

673 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவனாக இருக்கிறேன். அதனால் என் மீது குற்றமாகுமா?” என்று நான் கேட்டதற்கு, ”இது அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ள சலுகையாகும். எவர் அதை எடுத்துக் கொண்டாரோ அவர் சிறப்படைந்தார். இன்னும் எவர் நோன்பு நோற்க விரும்பினாரோ அவர் மீது குற்றமில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
وَأَصْلُهُ فِي ” اَلْمُتَّفَقِِ ” مِنْ حَدِيثِ عَائِشَةَ; (( أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو سَأَلَ ))
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) கேட்டதாக ஆயிஷா(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

674- وَعَنِ اِبْنِ عَبَّاسٍ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- قَالَ: (( رُخِّصَ لِلشَّيْخِ اَلْكَبِيرِ أَنْ يُفْطِرَ, وَيُطْعِمَ عَنْ كُلِّ يَوْمٍ مِسْكِينًا, وَلَا قَضَاءَ عَلَيْهِ )) رَوَاهُ اَلدَّارَقُطْنِيُّ, وَالْحَاكِمُ, وَصَحَّحَاهُ

674 ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக, ஓர் ஏழைக்கு ஸஹர் மற்றும் இப்தார், உணவு உண்ணச் செய்ய வேண்டும். களா செய்ய வேண்டியது இல்லை என்று வயோதிகர்களுக்கு நபி(ஸல்) அவர்களால் சலுகை அளிக்கப்ட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னி, ஹாம்கி
இரண்டிலும் இது ”ஸஹீஹ்” எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

675- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( جَاءَ رَجُلٌ إِلَى اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: هَلَكْتُ يَا رَسُولَ اَللَّهِ. قَالَ: ” وَمَا أَهْلَكَكَ ? ” قَالَ: وَقَعْتُ عَلَى اِمْرَأَتِي فِي رَمَضَانَ، فَقَالَ: ” هَلْ تَجِدُ مَا تَعْتِقُ رَقَبَةً? ” قَالَ: لَا. قَالَ: ” فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ? ” قَالَ: لَا. قَالَ: ” فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا? ” قَالَ: لَا, ثُمَّ جَلَسَ, فَأُتِي اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ. فَقَالَ: ” تَصَدَّقْ بِهَذَا “, فَقَالَ: أَعَلَى أَفْقَرَ مِنَّا? فَمَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا, فَضَحِكَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: “اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ ” )) رَوَاهُ اَلسَّبْعَةُ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ

675 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்” என்று கூறியதற்கு, ”எது உன்னை அழித்தது?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”ரமளானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று கூறினார். ”உன்னால் ஒர் அடிமையை விடுதலை செய்ய இயலுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ”இயலாது” என்றார். ”அப்படியானால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் ”இயலாது” என்றார்.
பின்னர் (அங்கேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சாக்கு கொடுக்கப்பட்டது. அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன. (அதை அவரிடம் வழங்கி) ”இதை தர்மம் செய்வீராக!” என்றனர். அதற்கவர், ”எங்களை விட ஏழைகளுக்கா? இந்த மதீனாவிற்குள் எங்களை விட ஏழைகள் எவரும் இல்லையே?” என்றார். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள். ”நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக!” என்றும் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், புகாரீ, முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, திர்மிதி, மற்றும் இப்னு மாஜா.
இங்கு முஸ்லிமின் வாசம் இடம் பெற்றுள்ளது.

676- وَعَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ, ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ )) مُتَّفَقٌ عَلَيْهِ.
زَادَ مُسْلِمٌ فِي حَدِيثِ أُمِّ سَلَمَةَ : ] وَ لَا يَقْضِي[

676 நபி(ஸல்) அவர்கள் உடலுறவு கொண்டு, குளிப்பு கடமையான நிலையில் காலை நேரத்தை அடைந்து பின்னர் குளிப்பார்கள். மேலும் நோன்பு நோற்பார்கள் என்று ஆயிஷா மற்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார் புகாரீ, முஸ்லிம்
‘அவர்கள் களாச் செய்யமாட்டார்கள்’ எனும் வாசகம் உம்மு ஸலமா(ரலி) வாயிலாக முஸ்லிமில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
677- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا; أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ
677 ”தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் எவர் இறந்து விடுகிறாரோ அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளர் நோற்கட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
புகாரீ, முஸ்லிம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

No comments:

Post a Comment