Sunday, 3 March 2019

புலூகுல் மராம் (தொடர்-03)

10- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذْ وَلَغَ فِيهِ اَلْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ )) أَخْرَجَهُ مُسْلِمٌ .
وَفِي لَفْظٍ لَهُ: (( فَلْيُرِقْهُ )) .
وَلِلتِّرْمِذِيِّ: (( أُخْرَاهُنَّ أَوْ أُولَاهُنَّ بِالتُّرَابِ ))

10 ”உங்களுடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால், அதை சுத்தப்படுத்துவதற்காக ஏழுமுறை கழுவுங்கள். அதில் முதல்முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
முஸ்லிம் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ”அதிலுள்ளதை கொட்டி விடுங்கள்” என்று உள்ளது. திர்மிதீயின் மற்றோர் அறிவிப்பில் ”முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால கழுவுங்கள்” என்ற உள்ளது.

11- وَعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ -فِي اَلْهِرَّةِ-: (( إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنْ اَلطَّوَّافِينَ عَلَيْكُمْ )) أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ وَصَحَّحَهُ اَلتِّرْمِذِيُّ. وَابْنُ خُزَيْمَةَ

11 நபி(ஸல்) அவர்கள் பூனையைப் பற்றிக் கூறும் போது, ”அது அசுத்தமானதல்ல் உங்களிடையே சுற்றி வரக் கூடியது தான்” என்று கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார்.
அபூ தாவூத் நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா. திர்மிதீ மற்றும் இப்னு குஸைமாவில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

12- وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( جَاءَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي طَائِفَةِ اَلْمَسْجِدِ فَزَجَرَهُ اَلنَّاسُ فَنَهَاهُمْ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِذَنُوبٍ مِنْ مَاءٍ; فَأُهْرِيقَ عَلَيْهِ. )) مُتَّفَقٌ عَلَيْهِ

12 ஒரு நாட்டுப் புறத்தார் பள்ளிக்கு வந்து ஒரு மூலையில் சிறுநீர் கழித்து விட்டார். அவரை மக்கள் அதட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள், தடுத்து, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அது அதன் மீது ஊற்றப்பட்டது என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்.
புஹாரீ, முஸ்லிம்

13- وَعَنْ اِبْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ فَأَمَّا الْمَيْتَتَانِ: فَالْجَرَادُ وَالْحُوتُ وَأَمَّا الدَّمَانُ: فَالطِّحَالُ وَالْكَبِدُ )) أَخْرَجَهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ وَفِيهِ ضَعْفٌ

13 நமக்கு செத்தவை இரண்டும், இரத்தம் இரண்டும் (ஹலால்) அனுமதிக்கப்பட்டுள்ளது. அவைகளில் செத்தவை வெட்டுக்கிளி மற்றும் மீனாகும். அந்த இரத்தம், ஈரல் மற்றும் கல்லீரல் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், இப்னு மாஜா. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

14- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( إِذَا وَقَعَ اَلذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ ثُمَّ لِيَنْزِعْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي اَلْآخَرِ شِفَاءً )) أَخْرَجَهُ اَلْبُخَارِيُّ
وَأَبُو دَاوُدَ وَزَادَ: (( وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ اَلَّذِي فِيهِ اَلدَّاءُ ))

14 ”உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால், அதை உள்ளே மூழ்கடித்து விட்டுப் பின்னர் வெளியில் எடுத்து விடவும். ஏனெனில், அதன் ஓர் இறக்கையில் நோயும் மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
புகாரீ, அபூ தாவூத்.
”நிச்சயமாக இது நோயிருக்கும் தன்னுடைய இறக்கையின் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது” என்றும் அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது.

15- وَعَنْ أَبِي وَاقِدٍ اَللَّيْثِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( مَا قُطِعَ مِنْ اَلْبَهِيمَةِ -وَهِيَ حَيَّةٌ- فَهُوَ مَيِّتٌ )) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَاَلتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ وَاللَّفْظُ لَهُ

15 ”உயிருள்ள கால் நடைகளில் (உறுப்புகள்) வெட்டப்பட்டதும் செத்ததே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூவாஹித் அல்லைஸி(ரலி) அறிவிக்கிறார்.
திர்மிதீ, அபூ தாவூத். இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment