6- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( لَا يَغْتَسِلُ أَحَدُكُمْ فِي اَلْمَاءِ اَلدَّائِمِ وَهُوَ جُنُبٌ )) أَخْرَجَهُ مُسْلِمٌ .
6 உங்களில் குளிப்புக் கடமையான எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
(குறிப்பு: தேங்கி நிற்கும் தண்ணீரில் முழ்கிக் குளிக்காமல் அதிலிருந்த தண்ணீரை தனியாக எடுத்து குளிக்க வேண்டும்)
7- وَلِلْبُخَارِيِّ: (( لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي اَلْمَاءِ اَلدَّائِمِ اَلَّذِي لَا يَجْرِي ثُمَّ يَغْتَسِلُ فِيهِ ))
7 உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புகாரீயில் இடம் பெற்றுள்ளது.
– وَلِمُسْلِمٍ: ((‘مِنْهُ’)). وَلِأَبِي دَاوُدَ: (( وَلَا يَغْتَسِلُ فِيهِ مِنْ اَلْجَنَابَةِ ))
உங்களில் ஒருவருக்கு குளிப்புக் கடமையான நேரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் (இறங்கி) குளிக்க வேண்டாம். முஸ்லிம், அபூ தாவூத்
– وَعَنْ رَجُلٍ صَحِبَ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( نَهَى رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم ‘أَنْ تَغْتَسِلَ اَلْمَرْأَةُ بِفَضْلِ اَلرَّجُلِ أَوْ اَلرَّجُلُ بِفَضْلِ اَلْمَرْأَةِ وَلْيَغْتَرِفَا جَمِيعًا )) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ. وَالنَّسَائِيُّ وَإِسْنَادُهُ صَحِيحٌ .
கணவனால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் மனைவியும், மனைவியால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் கணவனும் குளிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ”தேவை ஏற்பட்டால் இருவரும் சேர்ந்து குளித்துக் கொள்ளலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபித் தோழர்களில் ஒருவர் அறிவிக்கிறார்.
அபூ தாவூத், நஸாயீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
8- وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يَغْتَسِلُ بِفَضْلِ مَيْمُونَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا )) أَخْرَجَهُ مُسْلِمٌ
8 ”உம்முல் முஃமினீன் மைமூனா (ரலி) அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி(ஸல்) அவர்கள் குளித்தார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். முஸ்லிம்
9- وَلِأَصْحَابِ ‘اَلسُّنَنِ’: (( اِغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ اَلنَّبِيِّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فِي جَفْنَةٍ فَجَاءَ لِيَغْتَسِلَ مِنْهَا فَقَالَتْ لَهُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَقَالَ: ‘إِنَّ اَلْمَاءَ لَا يُجْنِبُ’ )) وَصَحَّحَهُ اَلتِّرْمِذِيُّ وَابْنُ خُزَيْمَةَ
9 நபி(ஸல்) அவர்களது மனைவியரில் ஒருவர், ஒரு பெரிய பாத்திரத்தில் குளித்தார் அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அதில் குளிக்க விரும்பிய போது, ”நிச்சயமாக நான் குளிப்பு கடமையானவளாக இருந்தேன்” என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”(இதன் காரணமாக) தண்ணீர் ஒரு போதும் அசுத்தமானதாக ஆகாது” என்று கூறினார்கள்
திர்மிதீ, இப்னு மாஜா, அபூதாவூத்
திர்மிதீ, இப்னு குஸைமா. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
10- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذْ وَلَغَ فِيهِ اَلْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ )) أَخْرَجَهُ مُسْلِمٌ .
وَفِي لَفْظٍ لَهُ: (( فَلْيُرِقْهُ )) .
وَلِلتِّرْمِذِيِّ: (( أُخْرَاهُنَّ أَوْ أُولَاهُنَّ بِالتُّرَابِ ))
وَفِي لَفْظٍ لَهُ: (( فَلْيُرِقْهُ )) .
وَلِلتِّرْمِذِيِّ: (( أُخْرَاهُنَّ أَوْ أُولَاهُنَّ بِالتُّرَابِ ))
10 ”உங்களுடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால், அதை (சுத்தப்படுத்துவதற்காக) ஏழுமுறை கழுவுங்கள். அதில் முதல்முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
முஸ்லிம்.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ”அதிலுள்ளதை கொட்டி விடுங்கள்” என்று உள்ளது. திர்மிதீயின் மற்றோர் அறிவிப்பில் ”முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால கழுவுங்கள்” என்று உள்ளது.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ”அதிலுள்ளதை கொட்டி விடுங்கள்” என்று உள்ளது. திர்மிதீயின் மற்றோர் அறிவிப்பில் ”முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால கழுவுங்கள்” என்று உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
masha allah
ReplyDeletefor more islamic names
follow this link https://pashtourdu.com/islamic-boys-names/