Friday, 1 March 2019

புலூகுல் மராம் (தொடர்-01)

ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் ஹதீஸ்கலை மேதையாக நிகழ்ந்த அறிஞர் அஹ்மத் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி அவர்களுடைய நபிவழித்தொகுப்புகளில் ஒன்றான புலூகுல் மராம் (நபிவழியில் நீங்கள் கேட்பவை) என்ற தொகுப்பை வாசகர்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

بُلُوغُ اَلْمَرَامِ مِنْ أَدِلَّةِ اَلْأَحْكَامِ – كِتَابُ اَلطَّهَارَةِ – بَابُ اَلْمِيَاهِ

நபிவழியில் நீங்கள் கேட்பவை
அத்தியாயம்-1:
துய்மை பற்றிய நூல் – பாடம்-1: தண்ணீர்

1- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فِي اَلْبَحْرِ(( هُوَ اَلطُّهُورُ مَاؤُهُ اَلْحِلُّ مَيْتَتُهُ )) أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ وَابْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظُ لَهُ وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ وَاَلتِّرْمِذِيُّ

1. கடலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, ”அதன் தண்ணீர் சுத்தமானது அதில் (வசிப்பவை) இறந்தவை(யாக இருப்பினும்) அனுமதிக்கப்பட்டது” என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, இப்னு மாஜா, மற்றும் இப்னு அபீ ஷைபா, இப்னு குஸைமா, மாலிக் ஷாஃபி மற்றும் அஹ்மத்.
இங்கு இப்னு அபீ ஷைபாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இப்னு குஸைமா மற்றும் திர்மிதீயில் இது ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளனர்.

2 – وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( إِنَّ اَلْمَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ )) أَخْرَجَهُ اَلثَّلَاثَةُ وَصَحَّحَهُ أَحْمَدُ.

2. ”நிச்சயமாக தண்ணீர் சுத்தம் செய்யக் கூடியதாகும் அதனை எதுவும் அசுத்தமாக்கி விடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ஸல்) அறிவிக்கிறார்.
அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ.
இமாம் அஹமத் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்

3- وَعَنْ أَبِي أُمَامَةَ اَلْبَاهِلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( إِنَّ اَلْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ )) أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ وَضَعَّفَهُ أَبُو حَاتِمٍ .

3. நிச்சயமாக தண்ணீரை அதனுடைய வாடை, சுவை, நிறம் இவற்றை மிகைக்கக் கூடியவற்றைத் தவிர்த்து வேறு எதுவும் அசுத்தமாக்காது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா அல்பாஹிலி(ரலி) அறிவிக்கிறார்.
இப்னு மாஜா.
அபூஹாதிமில் இதை ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 – وَلِلْبَيْهَقِيِّ: (( اَلْمَاءُ طَاهِرٌ إِلَّا إِنْ تَغَيَّرَ رِيحُهُ أَوْ طَعْمُهُ أَوْ لَوْنُهُ; بِنَجَاسَةٍ تَحْدُثُ فِيهِ )) .

4. அசுத்தம் (நீரில்) கலந்து, அதனுடைய வாடை, சுவை, நிறம் மாறாவிட்டால் அந்நீர் சுத்தமானது” என்று பைஹகீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

5- وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ: (( إِذَا كَانَ اَلْمَاءَ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلْ اَلْخَبَثَ )) وَفِي لَفْظٍ: (( لَمْ يَنْجُسْ )) أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ. وَابْنُ حِبَّانَ .

5. தண்ணீர் ‘குல்லத்தைன்’ அளவுக்கு இருந்தால் அது அசுத்தமாகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.
அபூ தாவூத், நஸாயீ, இப்னு மாஜா, திர்மிதீ
இதை இப்னுகுஸைமா, ஹாம்கி மற்றும் இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(குறிப்பு: குல்லத்தைன் என்பது இரு பெரிய குடங்களின் அளவைக்குறிக்கும். சற்று ஏறக்குறைய 50 லிட்டர் தண்ணீரின் அளவு.)
இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments:

Post a Comment