பாடம்-4 : உளூ பற்றிய பாடம் – தொடர்ச்சி
52- وَعَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ قَالَ: (( رَأَيْتُ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَفْصِلُ بَيْنَ اَلْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ. )) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادِ ضَعِيف ٍ
52 நபி(ஸல்) அவர்கள் வாய் கொப்பாளிப்பதற்கும், நாசிக்கும் தனித்தனியாக தண்ணீரை எடுத்தார்கள் என தல்ஹா இப்னு முஸர்ரிஸப் தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.
இது அபூ தாவூதில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது அபூ தாவூதில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
53- وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ -فِي صِفَةِ اَلْوُضُوءِ- (( ثُمَّ تَمَضْمَضَ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَاسْتَنْثَرَ ثَلَاثًا, يُمَضْمِضُ وَيَنْثِرُ مِنْ اَلْكَفِّ اَلَّذِي يَأْخُذُ مِنْهُ اَلْمَاءَ )) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ ُ
53 நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றி அலி(ரலி) கூறுகையில், ”நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை வாய் கொப்பளித்தார்கள், இன்னும் மூன்று முறை மூக்கை சிந்தினார்கள் (வாய் கொப்பளிக்க எடுத்த) அதே தண்ணீரைக் கொண்டே நாசியையும் சுத்தம் செய்தார்கள்” என கூறினார்.
அபூதாவூத், நஸாயீ.
அபூதாவூத், நஸாயீ.
54- وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ -فِي صِفَةِ اَلْوُضُوءِ- (( ثُمَّ أَدْخَلَ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَدَهُ, فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ, يَفْعَلُ ذَلِكَ ثَلَاثًا )) مُتَّفَقٌ عَلَيْه
54 நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றி அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறுகையில், ”நபி(ஸல்) அவர்கள் உளூவுக்காகப் பாத்திரத்தினுள் தமது கையை நுழைத்தார்கள். பின்னர் ஒரு கை தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து, நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்” என்று கூறினார். புகாரீ, முஸ்லிம்
55- وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( رَأَى اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم رَجُلًا, وَفِي قَدَمِهِ مِثْلُ اَلظُّفْرِ لَمْ يُصِبْهُ اَلْمَاءُ. فَقَالَ: “اِرْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ” )) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيّ ُ
55 தம் குதிங்காலில் நகத்தளவு மட்டும் தண்ணீர்படாத (வாறு உளூ செய்த) ஒரு நபரைப் பார்த்து, ”திரும்பச் செல்! உன்னுடைய உளூவை நல்ல முறையில் செய்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ
56- وَعَنْهُ قَالَ: (( كَانَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَتَوَضَّأُ بِالْمُدِّ, وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ )) مُتَّفَقٌ عَلَيْه ِ
56 நபி(ஸல்) அவர்கள் ஒரு ‘முத்’ அளவு தண்ணீரில் உளூ செய்வார்கள். இன்னும் ஒரு ‘ஸாவு’ அளவிலிருந்து ஐந்து ‘முத்’ அளவு தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: ‘முத்’ என்பது இரண்டு கரங்களையும் ஒன்றாக இணைத்து இள்ளப்படும் ஓர் அளவைக் குறிக்கும். நான்கு ‘முத்’ அளவினை ஒன்றிணைத்தால் அது ஒரு ‘ஸாவு’ எனப்படும்.
குறிப்பு: ‘முத்’ என்பது இரண்டு கரங்களையும் ஒன்றாக இணைத்து இள்ளப்படும் ஓர் அளவைக் குறிக்கும். நான்கு ‘முத்’ அளவினை ஒன்றிணைத்தால் அது ஒரு ‘ஸாவு’ எனப்படும்.
57- وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ, فَيُسْبِغُ اَلْوُضُوءَ, ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اَللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ, وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ, إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ اَلْجَنَّةِ” )) أَخْرَجَهُ مُسْلِم ٌ
57 உங்களில் எவர் நிறைவாக உளூ செய்த பின்னர், ”நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது நல்லடியாராகவும், உண்மைத் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறுகிறாரோ? அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் விரும்பிய வாயிலில் அவர் நுழைந்து கொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
وَاَلتِّرْمِذِيُّ, وَزَادَ: (( اَللَّهُمَّ اِجْعَلْنِي مِنْ اَلتَّوَّابِينَ, وَاجْعَلْنِي مِنْ اَلْمُتَطَهِّرِينَ ))
”யா அல்லாஹ்! பாவமன்னிப்புக் கோருபவர்களின் , குழுவிலும், தூய்மையானவர்களின் குழுவிலும் என்னைச் சேர்ப்பாயாக!” எனும் வாசகம் திர்மிதீயில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
No comments:
Post a Comment