Wednesday, 6 March 2019

புலூகுல் மராம் (தொடர்-06)

بَابُ اَلْوُضُوءِ

பாடம்-4 : உளூ பற்றிய பாடம்


32- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: (( لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ وُضُوءٍ )) أَخْرَجَهُ مَالِكٌ, وأَحْمَدُ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة

32 ”என்னுடைய சமுதாயத்திற்கு கஷ்டம் தந்து விடுவேன் என்று நான் அஞ்சாவிட்டால் ஒவ்வொரு உளூவுடனும் (மிஸ்வாக்) பல் துலக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
மாலிக், அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு குஸைமா.
இப்னு குஸைமா இதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பீகிறார். இமாம் புகாரி இதை பாடத்தின் தலைப்பாக இடம்பெறச் செய்துள்ளார்

33- وَعَنْ حُمْرَانَ; (( أَنَّ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ دَعَا بِوَضُوءٍ, فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ مَضْمَضَ, وَاسْتَنْشَقَ, وَاسْتَنْثَرَ, ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ غَسَلَ يَدَهُ اَلْيُمْنَى إِلَى اَلْمِرْفَقِِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ اَلْيُسْرَى مِثْلَ ذَلِكَ, ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ, ثُمَّ غَسَلَ رِجْلَهُ اَلْيُمْنَى إِلَى اَلْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ اَلْيُسْرَى مِثْلَ ذَلِكَ, ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اَللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا. )) مُتَّفَقٌ عَلَيْه ِ

33 உஸ்மான்(ரலி) அவர்கள் உளூவிற்காகத் தண்ணீர் கேட்டார்கள். (தண்ணீர் கொடுக்கப்பட்டதும்) மூன்று முறை தம் கைகளைக் கழுவினார்கள் பின்னர் வாய் கொப்பளித்தார்கள், இன்னும் மூக்கில் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம்முடைய வலக்கரத்தை முழங்கை வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம்முடைய இடக் கரத்தை அதே போன்று கழுவினார்கள். பின்னர் தம்முடைய தலைக்கு மஸஹ் செய்தார்கள். (தலையை ஈரக் கையால் தடவினார்கள்). பின்னர் தமது வலக் காலை கணுக்கால்கள் வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இடக் காலை அதே போன்று கழுவினார்கள். பின்னர், ”நபி(ஸல்) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்களுடைய உளூ (நான் செய்து காட்டிய) என்னுடைய இந்த உளூவைப் போன்று தான் அமைந்திருந்தது” என்று கூறினார்கள் என உஸ்மான் (ரலி) அவர்களின் அடிமை ஹும்ரான் அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

34- وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ -فِي صِفَةِ وُضُوءِ اَلنَّبِيِّ صَلَّى اَللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ: (( وَمَسَحَ بِرَأْسِهِ وَاحِدَةً. )) أَخْرَجَهُ أَبُو دَاوُد َ

34 அலீ(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களது உளூவை வர்ணிக்கையில், ”அவர்கள் தலைக்கு ஒருமுறை மஸஹ் செய்தார்கள்” என்று கூறினார்கள்.
அபூதாவூத். திர்மிதீ மற்றும் நஸயீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸஹ் தொடர்பான ஹதீஸ்களில் இது மிகவும் ஸஹீஹானது என்று திர்மிதீ குறிப்பிட்டுள்ளார்.

35- وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ يَزِيدَ بْنِ عَاصِمٍ رَضِيَ اللهُ عَنْهُ -فِي صِفَةِ اَلْوُضُوءِ- قَالَ: (( وَمَسَحَ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِرَأْسِهِ, فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ. )) مُتَّفَقٌ عَلَيْه ِ

35 நபி(ஸல்) அவர்களது உளூவைப் பற்றிக் கூறுகையில், ”நபி(ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது தம் இரு கைகளையும் முன்னே கொண்டு வந்து, பின்னால் கொண்டு சென்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு ஜைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

وَفِي لَفْظٍ: (( بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ, حَتَّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ, ثُمَّ رَدَّهُمَا إِلَى اَلْمَكَانِ اَلَّذِي بَدَأَ مِنْهُ ))

புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், தலையின் முன் பகுதியில் இருந்து (மஸஹை) ஆரம்பம் செய்து, தம்முடைய பிடரிவரை கொண்டு சென்று, பின்னர் (மஸஹை) ஆரம்பித்த இடத்திற்குத் தமது கரங்களைக் கொண்டு வந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

36- وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اَللَّهُ عَنْهُمَا -فِي صِفَةِ اَلْوُضُوءِ- قَالَ: (( ثُمَّ مَسَحَ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِرَأْسِهِ, وَأَدْخَلَ إِصْبَعَيْهِ اَلسَّبَّاحَتَيْنِ فِي أُذُنَيْهِ, وَمَسَحَ بِإِبْهَامَيْهِ ظَاهِرَ أُذُنَيْهِ. )) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ

36 நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கூறுகையில் ”அவர்கள் தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். இன்னும் தமது இரு ஆட்காட்டி விரல்களையும் காதினுள் நுழைத்து, தமது கட்டை விரல்கள் இரண்டினாலும் காதுகளின் வெளிப்பகுதியில் வைத்து மஸஹ் செய்தார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.
அபூதாவூத், நஸாயீ மற்றும் இப்னு குஸைமா.
இது ஸஹிஹ் எனும் தரத்தில் உள்ளது என இப்னு குஸைமா குறிப்பிடுகிறார்

37- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( إِذَا اِسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثًا, فَإِنَّ اَلشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ )) مُتَّفَقٌ عَلَيْه ِ

37 ”உங்களில் எவரேனும் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டால், அவர் தன்னுடைய மூக்கை மூன்று முறை சிந்தட்டும். ஏனெனில், அவரின் மூக்குத் தண்டில் ஷைத்தான் இரவைக் கழிக்கின்றான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

38- وَعَنْهُ: (( إِذَا اِسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسُ يَدَهُ فِي اَلْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدَهُ )) مُتَّفَقٌ عَلَيْهِ. وَهَذَا لَفْظُ مُسْلِم ٍ

38 ”உங்களில் எவரேனும் தூக்கத்திலிருந்து எழுந்தால், தமது கரத்தை மூன்று முறை கழுவாத வரையில், தண்ணீருள்ள பாத்திரத்தினுள் தனது கையை நுழைக்க வேண்டாம். ஏனெனில், அவரது கை இரவை எங்கு கழித்ததென அவர் அறியமாட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்.
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

39- وَعَنْ لَقِيطِ بْنُ صَبْرَةَ, رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( أَسْبِغْ اَلْوُضُوءَ, وَخَلِّلْ بَيْنَ اَلْأَصَابِعِ, وَبَالِغْ فِي اَلِاسْتِنْشَاقِ, إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا )) أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ

39 ”நிறைவாக உளூச் செய்யுங்கள். இன்னும் விரல்களைக் கோதிக் கழுவுங்கள். இன்னும் நோன்பாளியாக இல்லாதிருந்தால் நாசிக்கு நன்றாக நீர் செலுத்துங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு ஸபிரா(ரலி) அறிவிக்கிறார்.
அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وَلِأَبِي دَاوُدَ فِي رِوَايَةٍ: (( إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ ))

”உளூச் செய்தால் நீ வாய்கொப்பளி” எனும் வாசகம் அபூதாவூதின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

40- وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يُخَلِّلُ لِحْيَتَهُ فِي اَلْوُضُوءِ )) أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ

40 ”நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது, தமது தாடியைக் கோதிக் கழுவினார்கள்” என உஸ்மான்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, இப்னு குஸைமா.
இது ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

No comments:

Post a Comment