Tuesday, 5 March 2019

புலூகுல் மராம் (தொடர்-05)

بَابُ إِزَالَةِ اَلنَّجَاسَةِ وَبَيَانِهَا

பாடம்-3 : அசுத்தங்களை அகற்றுதல்

24- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( سُئِلَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم عَنْ اَلْخَمْرِ تُتَّخَذُ خَلًّا? قَالَ: “لَا”. )) أَخْرَجَهُ مُسْلِم ٌ

24 ” சாராயத்திலிருந்து ‘சிர்கா’ செய்வது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு அவர்கள் ‘கூடாது’ என்றார்கள் (தடை விதித்தார்கள்)” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். (முஸ்லிம், திர்மிதீ)
இது திர்மிதீயில் ‘ஸஹீஹ்’ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

25- وَعَنْهُ قَالَ: (( لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ, أَمَرَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَبَا طَلْحَةَ, فَنَادَى: “إِنَّ اَللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ اَلْحُمُرِ]اَلْأَهْلِيَّةِ], فَإِنَّهَا رِجْسٌ” )) مُتَّفَقٌ عَلَيْه ِ

25 நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்தன்று அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, உடனே அவர்கள், ”அல்லாஹ்வும் அவனது தூதரும் நாட்டுக் கழுதையின் மாமிசத்தை (உண்ணத்) தடை செய்து விட்டார்கள். ஏனெனில், அது அசுத்தமானது” என்று அறிவிப்புச் செய்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார். (புகாரீ, முஸ்லிம்)

26- وَعَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: (( خَطَبَنَا رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بِمِنًى, وَهُوَ عَلَى رَاحِلَتِهِ, وَلُعَابُهَا يَسِيلُ عَلَى كَتِفَيَّ. )) أَخْرَجَهُ أَحْمَدُ, وَاَلتِّرْمِذِيُّ وَصَحَّحَه ُ

26 நபி(ஸல்) அவர்கள் மினாவில் தங்களது வாகனத்தில் அமர்ந்தவாறே எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அதன் (அக்கால் நடையின்) உமிh நீர் என்னுடைய தோளில் (விழுந்து) வழிந்தோடிக் கொண்டிருந்தது (4) என அம்ர் இப்னு காரிஜா(ரலி) அறிவிக்கிறார். (அஹ்மத், திர்மிதீ.)
இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு-4: உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால் நடைகளின் உமிழ் நீர் ஆடைகளிலோ அல்லது உடலிலோ பட்டவிடுவதால் அசுத்தமாகிவிடாது.

27- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا, قَالَتْ: (( كَانَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَغْسِلُ اَلْمَنِيَّ, ثُمَّ يَخْرُجُ إِلَى اَلصَّلَاةِ فِي ذَلِكَ اَلثَّوْبِ, وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ اَلْغُسْلِ فِيهِ )) مُتَّفَقٌ عَلَيْه ِ

27 ”நபி(ஸல்) அவர்கள் (தங்களது ஆடையில் பட்ட) இந்திரியத்தைக் கழுவி விட்டு, அதே ஆடையுடன் தொழுகைக்குச் செல்வார்கள். அப்போது அந்த ஆடையில் கழுவப்பட்ட அடையாளத்தை நான் காண்பேன்” என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

28- وَلِمُسْلِمٍ: (( لَقَدْ كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبٍ رَسُولِ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَرْكًا, فَيُصَلِّي فِيهِ )).

28 ”நான் நபி(ஸல்) அவர்களது ஆடையிலிருந்த (இந்திரியத்)தை சுரண்டி விடுவேன். அவர்கள் அதே ஆடையுடன் தொழுவார்கள்” என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமில் பதிவாகியள்ளது.

وَفِي لَفْظٍ لَهُ: (( لَقَدْ كُنْتُ أَحُكُّهُ يَابِسًا بِظُفُرِي مِنْ ثَوْبِهِ ))

”ஆடையில் அது காய்ந்த பின் என்னுடைய நகத்தால் அதை சுரண்டி விடுவேன்” என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

29- وَعَنْ أَبِي اَلسَّمْحِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( يُغْسَلُ مِنْ بَوْلِ اَلْجَارِيَةِ, وَيُرَشُّ مِنْ بَوْلِ اَلْغُلَامِ)) أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ اَلْحَاكِم ُ

29 ”பெண் குழந்தையின் சிறுநீர்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர்பட்ட இடத்தில் தண்ணீர் தெளித்தல் போதுமானது” (5) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸம்ஹ(ரலி) அறிவிக்கிறார்.
அபூ தாவூத், நஸாயீ, ஹாம்கி. இது ஸஹீஹ் எனும் தரத்தில் ஹாம்மில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு-5: தாய்பால் மட்டும் அருந்திக் கொண்டிருக்கும் ஆண் குழந்தையின் சிறுநீர் பட்ட இடத்தில் தண்ணீர் தெளித்தால் போதுமானது. ஆனால் குழந்தை மற்ற ஆகாரங்கள் அதன் உண்ணும்போது அதன் சிறுநீர் பட்ட இடத்தை தண்ணீர் விட்டக் கழுவுதல் அவசியம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

No comments:

Post a Comment