Saturday, 16 March 2019

புலூகுல் மராம் (தொடர்-16)

அத்தியாயம்-6: ஹஜ் பற்றிய நூல்

بَابُ اَلْمَوَاقِيتِ

பாடம்-2: ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டும் இடங்கள் பற்றிய பாடம்

722- عَنِ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا; (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَقَّتَ لِأَهْلِ اَلْمَدِينَةِ: ذَا الْحُلَيْفَةِ, وَلِأَهْلِ اَلشَّامِ: اَلْجُحْفَةَ, وَلِأَهْلِ نَجْدٍ: قَرْنَ اَلْمَنَازِلِ, وَلِأَهْلِ اَلْيَمَنِ: يَلَمْلَمَ, هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ اَلْحَجَّ وَالْعُمْرَةَ, وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ, حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ )) مُتَّفَقٌ عَلَيْه


722 மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா எனும் இடத்தையும் சிரியா வாசிகளுக்கு ஜுஹ்ஃபா எனும் இடத்தையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ன் அல்மனாஸில் எனும் இடத்தையும் இன்னும் யமன் வாசிகளுக்கு ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டுமிடமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கினார்கள். இவை அவர்களுக்கும் இவற்றின் வழியாக யார் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக வருகிறார்களோ, அவர்களுக்கும் அங்கு இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் தாம் வசிக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணியலாம். மக்காவாசிகள் இஹ்ராம் கட்டுமிடம் மக்காவே ஆகும் என, இஹ்ராம் கட்டுமிடத்தை நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புகாரீ, முஸ்லிம்

723- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا: (( أَنَّ أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَقَّتَ لِأَهْلِ اَلْعِرَاقِ ذَاتَ عِرْقٍ )) رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيّ ُ

723 இராக் வாசிகளின் இஹ்ராம் கட்டுமிடம் ‘தாத்து இர்க்’ எனும் மலைக்குன்று அருகே என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூதாவூத், நஸயீ

وَأَصْلُهُ عِنْدَ مُسْلِمٍ مِنْ حَدِيثِ جَابِرٍ إِلَّا أَنَّ رَاوِيَهُ شَكَّ فِي رَفْعِه ِ724

ஹதீஸ் 723 உடைய மூலம் ஜாபிர்(ரலி) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் உள்ளது. அதனுடைய அறிவிப்பாளர் அதற்கு மர்ஃபூஃ எனும் தரம் உள்ளதா என சந்தேகிக்கிறார்.

725 – وَفِي اَلْبُخَارِيِّ: (( أَنَّ عُمَرَ هُوَ اَلَّذِي وَقَّتَ ذَاتَ عِرْقٍ ))

725 உமர்(ரலி) அவர்கள்,தாம், தாத்து இர்க் என்னும் இடத்தை இஹ்ராம் கட்டுமிடமாக ஆக்கினார்கள் என, புகாரீயில் உள்ளது.

726- وَعِنْدَ أَحْمَدَ, وَأَبِي دَاوُدَ, وَاَلتِّرْمِذِيِّ: عَنِ اِبْنِ عَبَّاسٍ: (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم وَقَّتَ لِأَهْلِ اَلْمَشْرِقِ: اَلْعَقِيقَ ))

726 நபி(ஸல்) அவர்கள், கீழை நாட்டவர்களின் இஹ்ராம் கட்டுமிடமாக ‘அகீக்’ எனும் இடத்தை ஆக்கினார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அஹ்மத், அஹ்மத், திர்மிதீயில் உள்ளது.

No comments:

Post a Comment