Thursday, 7 March 2019

புலூகுல் மராம் (தொடர்-07)

பாடம்-4 : உளூ பற்றிய பாடம் – தொடர்ச்சி

41- وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَتَى بِثُلُثَيْ مُدٍّ, فَجَعَلَ يَدْلُكُ ذِرَاعَيْهِ )) أَخْرَجَهُ أَحْمَدُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ

41 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முத்து அளவு தண்ணீரில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் கொண்டு வந்து தரப்பட்டது. அவர்கள் (கழுவும் போது) தம் முழங்கைகளைத் தேய்க்கலானார்கள்!” என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவிக்கிறார்.
அஹமத், இப்னு குஸைமா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

42- وَعَنْهُ, (( أَنَّهُ رَأَى اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَأْخُذُ لِأُذُنَيْهِ مَاءً خِلَافَ اَلْمَاءِ اَلَّذِي أَخَذَ لِرَأْسِهِ. )) أَخْرَجَهُ اَلْبَيْهَقِيّ ُ.
وَهُوَ عِنْدَ “مُسْلِمٍ” مِنْ هَذَا اَلْوَجْهِ بِلَفْظٍ: وَمَسَحَ بِرَأْسِهِ بِمَاءٍ غَيْرَ فَضْلِ يَدَيْهِ, وَهُوَ اَلْمَحْفُوظ ُ

42 நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது காதுகள் மற்றும் தலைக்கு (மஸஹ் செய்ய) தனித்தனியாகத் தண்ணீர் எடுத்ததை தான் பார்த்ததாக அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
இமாம் பைஹகீ, திர்மிதீ ஆகியோர் இதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று குறிப்பிடுகின்றனர்.
முஸ்லிமுடைய மற்றொரு அறிவிப்பில். நபி (ஸல்) அவர்கள் தம் கையில் இருந்த ஈரத் தண்ணீரைக் கொண்டு மஸஹ் செய்யாமல் மற்றொரு முறை தண்ணீரில் கையை நுழைத்து ஈரமாக்கி தம் தலைக்கு மஸஹ் செய்தார்கள் என்றுள்ளது இதுவே சரியானது.

. 43- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتَ رَسُولَ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يَقُولُ: (( “إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ اَلْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ, مِنْ أَثَرِ اَلْوُضُوءِ, فَمَنْ اِسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ. )) مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِم ٍ

43 ”நிச்சயமாக என்னுடைய சமுதாயம், மறுமை நாளில் உளூவின் அடையாளத்தால் உளூவின் உறுப்புக்கள் ஒளி வீசிய வண்ணம் வருவார்கள். எவரால், தமது ஒளியை அதிகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

44- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: (( كَانَ اَلنَّبِيُّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم يُعْجِبُهُ اَلتَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ, وَتَرَجُّلِهِ, وَطُهُورِهُ, وَفِي شَأْنِهِ كُلِّهِ. )) مُتَّفَقٌ عَلَيْه

44. ”நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணியும் போதும், தலை வாரும் போதும், உளூச் செய்யும் போது, தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பிப்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். (புகாரீ, முஸ்லிம்)

45- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( إِذَا تَوَضَّأْتُمْ فابدأوا بِمَيَامِنِكُمْ )) أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ

45. நீங்கள் உளூ செய்யும் போது, உங்கள் வலப்பக்கத்திலிருந்து (ஒவ்வொரு உறுப்பையும்) ஆரம்பம் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்
அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இப்னு குஸைமா இதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறுகிறார்.

46- وَعَنْ اَلْمُغِيرَةِ بْنِ شُعْبَةٍ رَضِيَ اللهُ عَنْهُ (( أَنَّ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم تَوَضَّأَ, فَمَسَحَ بِنَاصِيَتِهِ, وَعَلَى اَلْعِمَامَةِ وَالْخُفَّيْنِ. )) أَخْرَجَهُ مُسْلِم

46 ”நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தமது நெற்றி ரோமம், தலைப்பாகை மற்றும் இரண்டு காலணிகளுக்கும் மஸஹ் செய்தார்கள்” என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

47- وَعَنْ جَابِرٍ بْنِ عَبْدِ اَللَّهِ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا -فِي صِفَةِ حَجِّ اَلنَّبِيِّ صَلَّى اَللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( اِبْدَؤُوا بِمَا بَدَأَ اَللَّهُ بِهِ )) أَخْرَجَهُ النَّسَائِيُّ, هَكَذَا بِلَفْظِ اَلْأَمْر، وَهُوَ عِنْدَ مُسْلِمٍ بِلَفْظِ اَلْخَبَر ِ

47 நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றி ஜாபிர்(ரலி) கூறுகையில், ”அல்லாஹ் எதைக் கொண்டு ஆரம்பம் செய்தானோ, அதைக் கொண்டே நீங்களும் ஆரம்பம் செய்யுங்கள்” (*) என்று நபி(ஸல்) கூறினார்கள் என அறிவிக்கிறார். நஸாயீ, முஸ்லிம்
நஸயீயில் இங்குள்ளது போல் கட்டளை வாக்கியத்தில் வந்துள்ளது. முஸ்லிமில் செய்தி வாக்கியத்தில் வந்துள்ளது.
(*) அதாவது எச்செயலாக இருப்பினும், அதை முறையாகச் செய்தல் அவசியம். ஒவ்வொரு செயலையும், இறைவன் வரிசைப்படுத்திக் காண்பித்திக் காண்பித்தவாறுதான் செய்ய வேண்டும். உளூச் செய்யும் போது குர்ஆனின் 5:6 வசனத்தின் அடிப்படையில் தான் செய்ய வேண்டும் எனவே தான் இந்த ஹதீஸ் இங்கு இடம்பெற்றுள்ளது.

48- وَعَنْهُ قَالَ: (( كَانَ اَلنَّبِيَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم إِذَا تَوَضَّأَ أَدَارَ اَلْمَاءَ عَلَى مُرْفَقَيْهِ. )) أَخْرَجَهُ اَلدَّارَقُطْنِيُّ بِإِسْنَادِ ضَعِيف ٍ

48 ”நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது தம்முடைய முழங்கைகளில் தண்ணீர் ஊற்றினார்கள்” என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ
இது தாரகுத்னீ இமாம் பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவு செய்துள்ளார்.

49- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ رَسُولَ اَللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم (( لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اِسْمَ اَللَّهِ عَلَيْهِ )) أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ, بِإِسْنَادٍ ضَعِيف ٍ

49 ”(உளூ செய்ய ஆரம்பிக்கும் போது) எவர் ‘பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையோ, அவரின் உளூ செல்லாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத் இப்னுமாஜா.
இது இப்னு மாஜாவில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

50- وَلِلترْمِذِيِّ: عَنْ سَعِيدِ بْنِ زَيْد ٍ.
51- وَأَبِي سَعِيدٍ نَحْوُه ُ  قَالَ أَحْمَدُ: لَا يَثْبُتُ فِيهِ شَيْء ٌ

50, 51ஸயீது பின் ஸைத் (ரலி) மற்றும் அபூ ஸயீது அல் குத்ரீ(ரலி) வாயிலாக திர்மிதீயிலும் மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் எதுவும் ஆதாரமாக எடுக்க முடியாது என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

No comments:

Post a Comment